உள்ளடக்கத்துக்குச் செல்

கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 05°47′56″N 102°29′25″E / 5.79889°N 102.49028°E / 5.79889; 102.49028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோங் கெடாக் இராணுவ
வானூர்தி நிலையம்
RMAF Gong Kedak
அரச மலேசிய விமானப் படையின்
சுகோய் சு-30 ரக விமானம்
  • ஐஏடிஏ: இல்லை
  • ஐசிஏஓ: WMGK
    RMAF Gong Kedak is located in மலேசியா
    RMAF Gong Kedak
    RMAF Gong Kedak
    கோங் கெடாக் இராணுவ
    வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
உரிமையாளர்மலேசிய தற்காப்பு துறை அமைச்சு
இயக்குனர்அரச மலேசிய விமானப் படை
அமைவிடம்கோங் கெடாக், பாசீர் பூத்தே மாவட்டம், பாசீர் பூத்தே, கிளாந்தான், மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL20 ft / 6 m
ஆள்கூறுகள்05°47′56″N 102°29′25″E / 5.79889°N 102.49028°E / 5.79889; 102.49028
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
08/26 2,012 6,601 தார்
Sources: Aeronautical Information Publication Malaysia[1]

கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையம் (ஐசிஏஓ: WMGK),(ஆங்கிலம்: RMAF Gong Kedak (RMAF - Royal Malaysian Air Force) மலாய்: TUDM Gong Kedak (TUDM - Tentera Udara Diraja Malaysia); என்பது மலேசியா, கிளாந்தான், பாசீர் பூத்தே மாவட்டம், பாசீர் பூத்தே நகரில் உள்ள அரச மலேசிய விமானப் படையின் இராணுவ வானூர்தி நிலையம் ஆகும்.

செர்த்தே நகரத்தில் இருந்து 10 கி.மீ.; கோலா பெசுட் நகரத்தில் இருந்து 12 கி.மீ.; பாசீர் பூத்தே நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

மலேசியாவின் கிளாந்தான் மற்றும் திராங்கானு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் மிகத் தனித்துவமானது. இரு மாநிலங்களையும் அதன் அமைவிடம் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ அமைவிடம் கிளாந்தான் மாநிலம் ஆகும்.

வரலாறு

[தொகு]

கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையம், 13 பிப்ரவரி 1998-இல் கிளாந்தான் மாநிலத்தில் (Gong Kedak Air Base, Kelantan) அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது. நவம்பர் 1998-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.[2]

அதற்கு முன், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்தே இங்கு ஒரு விமான ஓடுபாதை இருந்தது. அது பிரித்தானிய விமானப் படையால் (British Air Force) கட்டப்பட்டது. 1960-களின் முற்பகுதியில், இந்த ஓடுபாதை மலேசிய ஆயுதப் படைகளுடன் (Malaysian Armed Forces) பிரித்தானிய விமானப் படையாலும் பயன்படுத்தப்பட்டது.[3] [4]

சுகோய் தொழில்நுட்ப மையம்

[தொகு]

1970-களின் முற்பகுதியில் தொடங்கி 1989 வரை, இந்த விமான ஓடுதளம், வான்குடைப் பயிற்சிக்காக (Parachute Training) மட்டுமே மலேசிய ஆயுதப் படையால் பயன்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த, கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்தது. 1981-இல் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்கியது.

இப்போது இந்த நிலையம் பாதுகாப்பு வானூர்திகளின் இல்லம் (Home of the Flankers) என்று அழைக்கப்படுகிறது. இப்போது சுகோய் சு-30 எம்கேஎம் (Sukhoi Su-30MKM) ரகத்தைச் சேர்ந்த 12 விமானங்கள் இங்கு உள்ளன.

வான்வெளி தொழில்நுட்ப முறைமை அமைப்பின் சுகோய் தொழில்நுட்ப மையமும் (Aerospace Technology Systems Corporation Sukhoi Technical Centre) உருவாக்கப்பட்டது. இந்த மையம் சுகோய் வானூர்திகளின் பராமரிப்புக்காக (Sukhoi Su-30MKM Maintenance) அமைக்கப்பட்டது.

வானூர்தி படை

[தொகு]

முதன்மை படை

[தொகு]
பிரிவு வானூர்தி படை இராணுவ வானூர்திகள் குறிப்புகள்
முதல் பிரிவு
(1st Division)
12-ஆவது படை
(No. 12 Squadron)
சுகோய் சு-30 எம்கேஎம்
(Sukhoi Su-30MKM)

சான்றுகள்

[தொகு]
  1. AIP Malaysia: WMGK - Gong Kedak பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. Pangkalan Udara TUDM Gong Kedak Bakal Miliki Terminal Udara Bernama. 10 April 2010.
  3. "Authorized Maintenance Centre for MiG 29". www.atsc.com.my.
  4. "Sukhoi Technical Centre Inaugurated - Malaysian Defence".

மேலும் காண்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]