பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்
British North Borneo Dollar | |
---|---|
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் (1940) | |
அலகு | |
குறியீடு | $ |
மதிப்பு | |
துணை அலகு | |
1⁄100 | செண்டு |
வங்கித்தாள் | 5, 10, 20, 25, 50 செண்டுகள், 1, 5, 10, 25, 50, 100 டாலர்கள் |
Coins | 1⁄4, 1⁄2, 1, 5, 10, 20, 50 செண்டுகள் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | சரவாக் சபா புரூணை |
வெளியீடு | |
நடுவண் வங்கி | பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் |
This infobox shows the latest status before this currency was rendered obsolete. |
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் (ஆங்கிலம்: British North Borneo Dollar; மலாய் மொழி: Dolar Borneo Utara British); என்பது 1882-ஆம் ஆண்டில் இருந்து 1953-ஆம் ஆண்டு வரை சரவாக்; சபா; (British North Borneo) மற்றும் புரூணை பிரித்தானிய காலனி நாடுகளில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.
ஒரு பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் என்பது 100 செண்டுகளைக் (100 cents) கொண்டது; அல்லது 2 சில்லிங் (Shilling); 4 பென்சுகளை (Pence) கொண்டது.
பொது
[தொகு]ஒரு பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர் ஒரு நீரிணை டாலருக்கு இணையாக இருந்தது. இதன் வாரிசாக வந்ததுதான் மலாயா; சிங்கப்பூர் பிரதேசங்களில் பயன்படுத்தப்பட்ட மலாயா டாலர் (Malayan Dollar) ஆகும்.
பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்; மலாயா டாலர் ஆகிய இரண்டு நாணயங்களும், 1953-இல் மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் (Malaya and British Borneo Dollar) என்று மாற்றம் செய்யப்பட்டன. நாணயங்கள் (Coins) மற்றும் பணத் தாள்கள் (Banknotes) இரண்டும் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் (British North Borneo Company) வெளியிடப்பட்டன.
சப்பானிய யென்
[தொகு]பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில் (1942-1945), காகிதப் பணம் (Paper Money) 1 செண்டு முதல் 1000 டாலர்கள் வரையிலான மதிப்புகளில் வெளியிடப்பட்டன. இந்த நாணயம் 1 டாலர் = 1 சப்பானிய யென் என நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, சப்பானிய நாணயம் மதிப்பற்றதாக அறிவிக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர்கள், முதலில் "பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டன. ஏனெனில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு 1881-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரச சாசனத்தின் (Royal Charter) கீழ் நாணயம் தயாரிக்கும் உரிமை அதனிடம் இருந்தது.
பின்னர் 1903-ஆம் ஆண்டு தொடங்கி, அவை "வடக்கு போர்னியோ மாநிலம்" (State of North Borneo) எனும் அடையாளத்தில் அச்சிடப்பட்டன. இவை கடைசியாக 1941-இல் அச்சிடப்பட்டன. பின்னர் அவை படிப்படியாக அகற்றப்பட்டு, மலாயா டாலர் நாணயங்களாக மாற்றப்பட்டன.
மேற்கோள்கள்
[தொகு]- Pick, Albert (1996). Standard Catalog of World Paper Money: General Issues to 1960. Colin R. Bruce II and Neil Shafer (editors) (8th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-469-1.
- Krause, Chester L. and Clifford Mishler (2003). 2004 Standard Catalog of World Coins: 1901–Present. Colin R. Bruce II (senior editor) (31st ed. ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873495934.
{{cite book}}
:|edition=
has extra text (help)
மேலும் காண்க
[தொகு]