உள்ளடக்கத்துக்குச் செல்

சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதேசி விழிப்புணர்வு இயக்கம் அல்லது சுதேசி ஜாக்ரன் மன்ஞ் (Swadeshi Jagaran Manch SJM) என்பது இந்துத்துவா கருத்தியல் கொண்ட சங்கப் பரிவாரின் பொருளாதாரப் பிரிவாகும். இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பின் காந்தியால் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டி, 22 நவம்பர் 1991-ல் நாக்பூரில் தொடங்கப்பட்டது, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் ஆகும். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி ஆவார். இவ்வமைப்பின் நோக்கம் இந்தியர்கள் இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை மட்டுமே வாங்கவும், உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்துவம், வெளிநாட்டு பொருட்களை வாங்காமல் இருப்பது குறித்து, இந்திய மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே.[சான்று தேவை]

இவ்வமைப்பின் துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சார்ந்த சுவாமிநாதன் குருமூர்த்தி இருந்தார்.

தற்போது தமிழ்நாட்டைச் சார்ந்த திரு. சுந்தரம் அவர்கள் அகில இந்திய தலைவராக இருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]