சீரியம்(IV) ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(4+);டெட்ரா ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
சீரிக் ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12014-56-1 | |
ChemSpider | 21171175 |
EC number | 234-599-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10219931 |
| |
UNII | 20GT4M7CWG |
பண்புகள் | |
Ce(OH)4 | |
தோற்றம் | அடர் மஞ்சள் திண்மம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம் ஐதராக்சைடு பிரசியோடைமியம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீரியம்(IV) ஐதராக்சைடு (Cerium(IV) hydroxide) என்பது Ce(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரிக் ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் தூளாகக் காணப்படும் சீரியம்(IV) ஐதராக்சைடு தண்ணீரில் கரையாது. ஆனால் செறிவூட்டப்பட்ட அடர் அமிலங்களில் கரையும்.[1]
தயாரிப்பு முறை
[தொகு]சீரியம் (III) கார்பனேட்டை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து இவ்வினைக்கலவை ஐதரசன் பெராக்சைடு உதவியால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. பின்வரும் வினைகள் நிகழ்கின்றன:[2]
- Ce2(CO3)3 + 6 CH3COOH → 2 Ce(CH3COO)3 + 3 CO2↑ + 3 H2O
- 2 Ce(CH3COO)3 + 3 H2O2 + 4 H2O → 2 Ce(OH)3(OOH) + 6 CH3COOH
- CH3COOH + NaOH → CH3COONa + H2O
- 2 Ce(OH)3(OOH) → 2 Ce(OH)4↓ + O2↑.
நிகர வினை:
- Ce2(CO3)3 + 6 CH3COOH + 3 H2O2 + 6 NaOH —343 K→ 2 Ce(OH)4 + 6 CH3COONa + O2↑ + 3 CO2↑ + 5 H2O
சீரியம்(III) நைட்ரேட்டை மூலப்பொருளாகப் பயன்படுத்தினாலும் இதேபோன்ற வினையே நிகழ்கிறது:[3]
- 2 Ce(NO3)3 + 3 H2O2 + 6 NH3·H2O → 2 Ce(OH)3(OOH)↓ + 6 NH4NO3 + 2 H2O
- Ce(OH)3(OOH) —Δ→ 2 Ce(OH)4↓ + O2↑
Ce4+ கரைசலில் சோடியம் ஐதராக்சைடு அல்லது அம்மோனியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்ப்பதன் மூலமும் சீரியம் (IV) ஐதராக்சைடு தயாரிக்கலாம். CeO2·xH2O, (x = 0.5–2) என ஒரு நீரேற்றாக விவரிக்கப்படும் ஊன்பசைக்குரிய வீழ்படிவாக இது பெறப்படுகிறது. NaOH இல் கரையாத Ce4+ உப்பைக் கொதிக்க வைப்பதால் சிறுமணிகளாக Ce(OH)4 கிடைக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. CRC Press. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-43-981461-1.
- ↑ 钟学明,邓安民,舒红英 等. 氢氧化铈合成的新方法. 过程工程学报. 2005.2. 5(1):74-77
- ↑ 李月红,李树胜,方中心. 高纯氢氧化铈生产工艺研究. 无机盐工业. 2011.9. 43(9): 40-42