கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில்
Appearance
தேவாரம் பாடல் பெற்ற கைச்சினம் கைச்சினேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கைச்சினம், கோங்குவனம், கர்ணிகாரண்யம் |
பெயர்: | கைச்சினம் கைச்சினேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கச்சனம் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர் |
தாயார்: | பல்வளை நாயகி,சுவேதவளை நாயகி, வெள்வளை நாயகி |
தல விருட்சம்: | கொங்கு, இலவம் |
தீர்த்தம்: | இந்திரதீர்த்தம்,வச்சிர தீர்த்தம், அகத்திய தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது கை அடையாளம் சுவாமி மீது படிந்தது என்பது தொன்நம்பிக்கை. இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும். [1]
வழிபட்டோர்
[தொகு]இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன்[2]
சிறப்பு
[தொகு]இத்தலம் அகத்தியருக்கு பிரமகத்தி தோஷமும், இந்திரனுக்கு கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபமும் நீங்கிய திருத்தலமாகும். அர்த்தநாரீசுவரர் சந்நிதி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தி சந்நிதி ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மதுரை ஆதீனம்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 268
வெளி இணைப்பு
[தொகு]- பாடல் பெற்ற தலங்கள்
- சிவத்தலங்கள் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
[தொகு]கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: வலிவலம் மனத்துணைநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 122 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 122 |