விக்கிப்பீடியா:கீரனூரில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிமுகம்[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, கீரனூர் பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தமிழகம்.வலை வலைதளத்துடன் இணைந்து, வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பு நிகழ்த்த உள்ளது.

நிகழிடம்[தொகு]

கீரனூர் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி

நாள், நேரம்[தொகு]

சனவரி 25, 2014, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

நிகழ்ச்சி நிரல்[தொகு]

வரவேற்புரை: செ. குறிஞ்சிவாணன், செயலர், வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பு நிகழ்வுத் தொடக்கம் மற்றும் தலைமையுரை: பெரியண்ணன் அரசு முன்னிலை: வழக்குரைஞர் கே.கே செல்லப் பாண்டியன், மேனாள் அரசு பொது வழக்குரைஞர் சிறப்புரை: பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், தமிழ் நாடு

புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்கத்தைத் தொடக்கம்[தொகு]

இப்பயிலரங்கில் வருங்கால கணித்தமிழ் தேவை மற்றும் விழிப்புணர்வு கருதி பெரியண்ணன் அரசு புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

பயிலரங்கப் பொருண்மைகள்[தொகு]

இப்பயிலரங்கில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கியூடகத் திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி,தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென் பொருள்கள்,தமிழ் ஒருங்குகுறி எழுத்துரு எழுதிகள், தமிழ் ஒருங்குகுறி எழுத்துரு மாற்றிகள், தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள்,தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள், திறந்தநிலை மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள்,காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த பொருண்மைகளில் நேரிடை செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு[தொகு]

தமிழகம்.வலை வலைதளமும் வளருங்கள் வாழ்த்துகிறோம் அமைப்பின் செயலர், புதுக்கோட்டை மாவட்டக் கணித்தமிழ் சங்க அமைப்பாளர் செ. குறிஞ்சிவாணனும் இந்தப் பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளார்.

நிகழ்வு குறித்து மேலும் அறிய/ உதவிக்கு[தொகு]

இப்பயிலரங்கம் குறித்து மேலும் செய்தி வேண்டுவோர் தமிழகம்.வலை வலைதளத்தைப் பார்வையிடலாம் பார்வையிடலாம் அல்லது king12flower@gmail.com, tparithi@gmail.com என்னும் மின்னஞ்சல்கள் அல்லது +91-9750933101, +91-9943470100 ஆகிய இரு தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.