ரகீம் யார்கான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரகீம் யார்கான் மாவட்டம்
رحیم یار خان
மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்ரகீம் யார்கான்
வட்டங்கள்4
பரப்பளவு
 • மொத்தம்11,880 km2 (4,590 sq mi)
மக்கள்தொகை (1998 census)[1]
 • மொத்தம்31,41,053
 • Estimate (2009)[1]47,41,053
 • பாலின விகிதம்108.8 ஆண் / 100 பெண்[1]
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
இணையதளம்www.rahimyarkhan.com.pk

ரகீம் யார்கான் மாவட்டம் (Rahim Yar Khan District) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ரகீம் யார்கான் நகரம் ஆகும். இம்மாவட்டம் சிந்து ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.[2]

புவியியல் & தட்ப வெப்பம்[தொகு]

ரகீம் யார்கான் மாவட்டத்தின் வடக்கில் முசாப்பர்கர் மாவட்டமும், கிழக்கில் பகவல்பூர் மாவட்டமும், தெற்கில் இந்தியாவின் ஜெய்சல்மேர் மாவட்டம் மற்றும் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டமும், மேற்கில் ராஜன்பூர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

இம்மாவட்டத்தின் புவியியல் சிந்து ஆற்றுப் பகுதிகள், கால்வாய் பாசானப் பகுதிகள் மற்றும் சோலிஸ்தான் பாலைவனப் பகுதிகள் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கோடைக்காலம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையும், குளிர்காலம் நவம்பர் முதல் மார்ச் வரையும் காணப்படுகிறது. கோடைக்காலத்தில் இம்மாவட்டத்தில் அடிக்கடி புழுதிப் புயல்கள் எழுகிறது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

11,880 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இம்மாவட்டத்தை கான்பூர் வட்டம், லியாகத்பூர் வட்டம், ரகீம் யார்கான் வட்டம் மற்றும் சாதிக்காபாத் என நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் மூன்று நகராட்சிகளையும், ஐந்து பேரூராட்சிகளையும், 121 ஒன்றியக் குழுக்களையும், 1504 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[3]

வேளாண்மை & பொருளாதாரம்[தொகு]

இம்மாவட்டத்தில் பருத்தி, கரும்பு, கோதுமை முக்கியப் பயிர்களாகும். இங்கு மாம்பழம் மற்றும் எலுமிச்சம் பழத்தோட்டங்கள் அதிகம் உள்ளது.

நெசவாலைகள், பருத்தி ஆலைகள், கரும்பாலைகள், உணவு எண்ணெய், சோப்பு, புண்ணாக்கு, வேளாண் கருவிகள், மட்பாண்டத் தொழில்கள் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

11,880சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரகீம் யார்கான் மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 31,41,053 ஆகும். அதில் ஆண்கள் 1636864 (52.11%); பெண்கள் 1504189 ( 47.89 %) ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (1988 –1998 ) ஆக 3.19%உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீடடர் பரப்பில் 264.4 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு, 108.8 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 33.1% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 43.40 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 21.82% ஆகவும் உள்ளது. [4] இம்மாவட்டத்தில் பஞ்சாபி, சிந்தி, பலூச்சி, சராய்கி மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2017-10-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "History". www.rahimyarkhan.gop.pk. 2016-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Tehsils & Unions in the District of Rahim Yar Khan - Government of Pakistan". 2012-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. District at a Glance