மனித உரிமை காக்கும் கட்சி
Appearance
மனித உரிமை காக்கும் கட்சி ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சி. தேவர் சாதியினரின் ஆதரவுடைய இக்கட்சி 2018ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக்கால் தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் இருந்த கார்த்திக் 2009ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என தனிக்கட்சி தொடங்கினார். 2009 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றது.[1] விருதுநகர் மற்றும் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.
நிறுவனர் கார்த்திக் இக்கட்சியைக் கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சி’' என்ற பெயரில் புதுக் கட்சியை அறிவித்தார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "BJP to head seven-party alliance". The Hindu (Chennai, India). 19 April 2009 இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090422154412/http://www.hindu.com/2009/04/19/stories/2009041953850400.htm.
- ↑ "‘மனித உரிமை காக்கும் கட்சி’ நடிகர் கார்த்திக் புதிய கட்சி-கொடி அறிமுகம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/15235445/Human-Rights-PartyActor-Karthik-introduces-new-partyflag.vpf. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.