தந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தந்தூர் (Tandur ) என்பது தெலங்காணா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும் . இது ஒரு நகராட்சி மற்றும் தந்தூர் வருவாய் பிரிவில் உள்ள தந்தூர் மண்டலத்தின் தலைமையகமும் ஆகும். இது சுண்ணாம்புக் கற்கள தொழிற்சாலைகள், சீமைக்காரை தொழிற்சாலைகள் மற்றும் சிவப்புப் பருப்பு ( புறா பட்டாணி ) உற்பத்திக்கு பெயர் பெற்றது. இந்த நகரத்திற்கு பீமா ஆற்றின் துணை நதியான கக்னா நதியிலிருந்து குடிநீர் கிடைக்கிறது. இந்த ஆறு ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ளது. [1]

நிலவியல்[தொகு]

தந்தூர் 17.23 ° N 77.58 ° கிழக்கில் அமைந்துள்ளது. [2] இதன் சராசரி உயரம் 450 மீட்டராகும். நகராட்சி நகரம் 6 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. தந்தூரின் நகராட்சி வரம்புகளை 6 கி.மீ. முதல் 29 கிமீ வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது. இந்த நகராட்சியில் 36 நகராட்சி பகுதிககள் உள்ளன. மும்பை பாதையின் செகந்திராபாத்-வாடி பிரிவில் முக்கிய இரயில் நிலையம் அமைந்துள்ளது. இது அண்டை நகரங்களான சகீராபாத் (60 கி.மீ), சங்கரெட்டி (95 கி.மீ), மகபூப்நகர் (80 கி.மீ) மற்றும் விகராபாத் (40 கி.மீ) ஆகியவற்றுடன் சாலைகள் மற்றும் இரயில்வே வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

குதுப் சாகி வம்சத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரின் போது முகலாயப் பேரரசின் இராணுவம் தந்தூர் வழியாக ஐதராபாத்தின் கொல்கொண்டா கோட்டையை முற்றுகையிட கடந்து சென்றதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. ஐதராபாத் நிசாம் வேட்டைக்காக தந்தூருக்கு வருவதாக கருதப்படுகிறது. உள்ளூர் பிரபுவான யூசுப் சேத் ஐதராபாத்தின் நிசாமிற்கு ஒரு பெரிய வரவேற்பளித்தார். செழிப்பானத் தாவரங்களும் மாறுபட்ட வனவிலங்குகளும் ஒரு ஈர்ப்பாக இருந்தன. ஆனால் இப்போது காடழிப்பு வனவிலங்குகளை வெளியேற்றிவிட்டது. தந்தூர் நகரத்தின் பழைய வீடுகள் மண் சுவர்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்டிருந்தன. இரயில் பாதை பழைய மற்றும் புதிய தந்தூரைப் பிரிக்கிறது. ஐதராபாத் நிசாம் காலத்தில் "நௌபத் கானா" என்று அழைக்கப்படும் காதியின் பழைய தந்தூரில் அமைந்துள்ள தந்தூரின் கோட்டையின் சில எச்சங்கள் இன்னும் உள்ளன.   .

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், [3] தந்தூரின் மக்கள் தொகை 71,008 பேர் என்ற அளவில் இருந்தது. இதில் 35,695 ஆண்களும், 35,310 பெண்களும் இருந்தனர்.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி தந்தூரின் எழுத்தறிவு விகிதம் 78 சதவீதமாகுகும். இது மாநில சராசரியான 67.02 சதவீதத்தைவிட அதிகமாகும். தந்தூரில், ஆண்களின் கல்வியறிவு 80.07 சதவீதமாகவும், பெண் கல்வியறிவு விகிதம் 76.03 சதவீதமாகவும் உள்ளது. தந்தூர் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். இது விகராபாத் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும்.

தொழிற்சாலைகள்[தொகு]

தந்தூர் நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிற சுண்ணாம்புக்கு பெயர் பெற்றது. [4] தந்தூர், சுவர் உறைப்பூச்சு மற்றும் ஸ்லாப்களுக்கு பயன்படுத்தக்கூடிய நீல சுண்ணாம்புக் கற்களுக்கான பிரதான தயாரிப்பு இடமாகவும், விநியோக மையமாக்வும் உள்ளது.  

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தூர்&oldid=2894152" இருந்து மீள்விக்கப்பட்டது