உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்

ஆள்கூறுகள்: 11°30′05″N 77°14′26″E / 11.501388°N 77.2405°E / 11.501388; 77.2405
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்திமங்கலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சத்தியமங்கலம்
—  முதல் நிலை நகராட்சி்  —
சத்தியமங்கலம்
இருப்பிடம்: சத்தியமங்கலம்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°30′05″N 77°14′26″E / 11.501388°N 77.2405°E / 11.501388; 77.2405
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் சத்தியமங்கலம் வட்டம்|

தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்

ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்கள் தொகை

அடர்த்தி

75,000 (2020)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 29.24 கிமீ2 (11 சதுர மைல்)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Sathyamangalam/


சத்தியமங்கலம் (ஆங்கிலம்: Sathyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் (வட்டம்) மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். சத்தியமங்கலம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வரலாறு[தொகு]

சத்தியமங்கலம் 2-ஆம் நூற்றாண்டு நகரம் ஆகும். இந்த நகரம் சேரர், சோழர், விஜயநகர, கொங்கு, மைசூர் மன்னர் காலத்தில் முக்கிய ஆட்சித் தலைநகராக விளங்கியது. 1805-இல் மைசூர் மாகாணத்தில் இருந்து மதராஸ் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. அப்போது இருந்த கோவை ஜில்லாவில் முதல் தாலுகா வாக உருவானது.

புகழ்பெற்றவை[தொகு]

 • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
 • பண்ணாரி அம்மன் கோவில்
 • கொடிவேரி அணை
 • பவானிசாகர் அணை
 • திம்பம் மலை
 • புளியம்பட்டி வாரச்சந்தை
 • தெங்குமரஹாடா மலைகிராமம்
 • கடம்பூர் மலை

புகழ்பெற்றோர்[தொகு]

 • மொழிப்போர் தியாகி முத்து
 • கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்
 • நடிகர் மயில்சாமி
 • நடிகர் சூர்யா
 • நடிகர் hiphhop ஆதி

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,148 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 37,816 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,382 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 947 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,927 மற்றும் 280 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.29%, இசுலாமியர்கள் 10.21% , கிறித்தவர்கள் 3.41% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

பவானிசாகர் அணை[தொகு]

பவானிசாகர் அணை 120 அடி உயரம் கொண்டது. அணைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்று 2 ஆறுகள் நீர் ஆதாரமாக உள்ளன. அணையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு, பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கொடிவேரி அணை[தொகு]

பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரி தான். ஈரோடு மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம் (Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை (பவானி ஆறு காவிரியுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது - அழகான சங்கமேஸ்வரர் ஆலயத்துடன்).

பெரிய கொடிவேரி[தொகு]

பண்ணாரியம்மன் கோவில்[தொகு]

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பமாகிறது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகம்[தொகு]

தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது. சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.[2]

ஆதாரங்கள்[தொகு]

 1. சத்தியமங்கலம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 2. "புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம்". தீக்கதிர். 2 திசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013.