ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம்
SP21 ஆலாம் சுத்திரா | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() Alam Sutera LRT Station | ||||||||||||||||
![]() ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் (2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | ஆலாம் சுத்திரா, பண்டார் கின்ராரா, ![]() ![]() | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°3′17.2″N 101°39′23.2″E / 3.054778°N 101.656444°E | |||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||
இயக்குபவர் | ![]() | |||||||||||||||
தடங்கள் | ![]() | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP21 உயர்த்திய நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP21 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 31 அக்டோபர் 2015 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Alam Sutera LRT Station; மலாய்: Stesen LRT Alam Sutera; சீனம்: 阿南苏特拉轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையம் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ளது. கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில், பண்டார் கின்ராரா, ஆலாம் சுத்திரா (Alam Sutera) அடுக்குமாடி வீடுகளில் இருந்து 500 மீட்டர் நடை தூரத்தில் உள்ளது.[3]
பொது
[தொகு]இந்த நிலையம் பல குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. பண்டார் கின்ராரா 1 (Bandar Kinrara 1); பண்டார் கின்ராரா 9 (Bandar Kinrara 9), புஞ்சாக் ஜாலில் (Puncak Jalil) போன்ற அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகள் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
[தொகு]இந்த நிலையத்திற்கு முன்னதாக SP22 கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக SP20 முகிபா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
பேருந்து சேவைகள்
[தொகு]பேருந்து | தொடக்கம் | இலக்கு |
---|---|---|
![]() |
AG11 SP11 PY24 சான் சோவ் லின் நிலையம் ⇌ SP21 ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் ⇌ பண்டார் கின்ராரா | SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ புக்கிட் ஓயூஜி (Bukit OUG) புறநகர்க் குடியிருப்பு ⇌ ஆலாம் சுத்திரா |
![]() |
AG11 SP11 PY24 சான் சோவ் லின் நிலையம் ⇌ SP21 ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் | SP19 அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் ⇌ புறநகர்க் குடியிருப்புகள் ⇌ ஆலாம் சுத்திரா ⇌ பண்டார் கின்ராரா |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
[தொகு]அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
அமைப்பு
[தொகு]L1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> AG1 SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) AG11 SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தரைநிலை | கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) கம்போங் முகிபா |
G | தெருநிலை | ஊனமுற்றோருக்கான நட்பு பாதை; இருபுறமும் தெரு நுழைவாயில்கள் |
காட்சியகம்
[தொகு]ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
[தொகு]- அவான் பெசார் எல்ஆர்டி நிலையம்
- புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
- புக்கிட் ஜாலில்
- மலேசிய தொழில்நுட்ப பூங்கா
- கூச்சாய் லாமா சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Alam Sutera LRT station is a LRT station at Alam Sutera, a township nearby Bukit Jalil located about 21 km south of Kuala Lumpur". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- ↑ "Alam Sutera LRT station serving Bandar Kinrara & Puncak Jalil". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- Sharidan M. Ali (April 3, 2013). "Prasarana plans to unveil RM1.1bil property development at LRT extension". The Star.
- "Prasarana: Ampang Line LRT extension Phase 1 on track for October launch". Malay Mail. March 7, 2015.