உள்ளடக்கத்துக்குச் செல்

எம்ஆர்டி சுற்று வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
MRT Circle Line
Laluan MRT Lingkaran
  13  
கண்ணோட்டம்
நிலைஎதிர்காலத் திட்டம்
உரிமையாளர் எம்ஆர்டி நிறுவனம்
வழித்தட எண் CC13  நீல ஊதா
வட்டாரம்கிள்ளான் பள்ளத்தாக்கு
முனையங்கள்
நிலையங்கள்32 (2 தற்போது)
இணையதளம்mrt3.pi.mymrt.com.my
சேவை
வகைவிரைவுப் போக்குவரத்து
அமைப்பு ரேபிட் கேஎல்
சேவைகள்சுற்று வழித்தடம்
செய்குநர்(கள்)Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
பணிமனை(கள்)கம்போங் புவா கிடங்கு
தாமான் மீடா கிடங்கு
சுழலிருப்புTBD
வரலாறு
தொடங்கப்பட்டது2026 (கணிப்பு)
திட்டமிட்ட திறப்பு2032 (கணிப்பு)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்50.8 km (31.6 mi)[1]
உயர்த்தப்பட்ட வழித்தடம்: 40.1 km (24.9 mi)
நிலத்தடி: 10.7 km (6.6 mi)
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
மின்மயமாக்கல்750 V DC
கடத்தல் அமைப்புதானியங்கி தொடருந்து
இயக்க வேகம்100 km/h (62 mph)
வழி வரைபடம்

MRT3 Official Map

எம்ஆர்டி சுற்று வழித்தடம் அல்லது பெரும் விரைவு தொடருந்து சுற்று வழித்தடம் (ஆங்கிலம்: MRT Circle Line மலாய்: Laluan MRT Lingkaran என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் திட்டமிடப்பட்டு உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து வழித்தடம் (Mass Rapid Transit) (MRT) ஆகும்.

இந்த வழித்தடம், மலேசியாவில் முழு ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொடருந்து அமைப்புகளில் ஐந்தாவது வழித்தடம் ஆகும். ஏற்கனவே, இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ள கிளானா ஜெயா வழித்தடம் அந்தத் தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது.

பொது

[தொகு]

இந்த வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டதும், கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் இந்த வழித்தடம் ஒரு சுற்றுவட்டத் தொடருந்துப் பாதையை உருவாக்கும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடத்தின் எண் 13 என்றும் நீல ஊதா நிறத்திலும் இருக்கும்.[2]

4 சூலை 2024-க்கு முன்னர் இந்த வழித்தடம், வழித்தடத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சாம்பல் நிறத்தில் இருந்தது.[3] கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்துப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழித்தடம் கட்டும் திட்டம் மீண்டும் தலைதூக்கியது.[4]

மே 2018-இல் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.[5][6] ஆனால் பின்னர் நவம்பர் 2020-இல் புத்துயிர் பெற்றது.[7]

32 நிலையங்கள்

[தொகு]

கட்டுமானப் பணிகள் 2026-இல் தொடங்கும் என்றும் 2032-க்குள் நிறைவு அடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்டுமானச் செலவு சுமார் RM ரிங்கிட் 31 பில்லியனாக இருக்கும்; அதே வேளையில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் செலவு RM ரிங்கிட் 8.4 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[8] 50.8 கிமீ (31.6 மைல்) நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 25 உயர்த்தப்பட்ட நிலையங்கள்; மற்றும் 7 நிலத்தடி நிலையங்கள் (மொத்தம் 32 நிலையங்கள்) கட்டப்படும்.

இந்த வழித்தடம், மொன்ட் கியாரா, சிகாம்புட், கோலாலம்பூர் புறநகர்ப்பகுதி, தித்திவாங்சா, செதாபாக், செத்தியாவங்சா, அம்பாங், சாலாக் சவுத், பாண்டான் இண்டா, பந்தாய் டாலாம், செராஸ் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகளை உள்ளடக்கப்படும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

[தொகு]

எம்ஆர்டி சுற்று வழித்தட நிலையங்கள்

[தொகு]
குறியீடு நிலையத்தின் பெயர் இணைப்பு நிலையங்கள்
 CC01  புக்கிட் கியாரா எம்ஆர்டி நிலையம் காஜாங் வழித்தடம்
 CC02  புக்கிட் கியாரா காஜாங் வழித்தடம்
 CC03  செரி அர்த்தாமாஸ் மோன்ட் கியாரா
 CC04  புக்கிட் சிகாம்புட் -
வார்ப்புரு:KLRTCC05 தாமான் செரி சினார் -
வார்ப்புரு:KLRTCC06 டூத்தாமாஸ் -
வார்ப்புரு:KLRTCC07 டூத்தா வளாகம் -
வார்ப்புரு:KLRTCC08  AG3  தித்திவங்சா நிலையம்  AG3   SP3   MR11   PY17 
வார்ப்புரு:KLRTCC09 கம்போங் புவா -
வார்ப்புரு:KLRTCC10 லங்காவி சாலை -
வார்ப்புரு:KLRTCC11 டானாவ் கோத்தா -
வார்ப்புரு:KLRTCC12 செதாபாக் -
வார்ப்புரு:KLRTCC13 ரெஜாங் -
வார்ப்புரு:KLRTCC14 செத்தியாவங்சா எல்ஆர்டி நிலையம்  KJ5 
வார்ப்புரு:KLRTCC15 AU2 -
வார்ப்புரு:KLRTCC16 தாமான் இல்வியூ -
வார்ப்புரு:KLRTCC17 தாசேக் அம்பாங் -
வார்ப்புரு:KLRTCC18 கம்போங் பாண்டான் -
வார்ப்புரு:KLRTCC19  AG15  பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் -
வார்ப்புரு:KLRTCC20 தாமான் கெஞ்சானா -
வார்ப்புரு:KLRTCC21 தாமான் செராஸ் -
வார்ப்புரு:KLRTCC22 தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்  KG24 
வார்ப்புரு:KLRTCC23 யக்கோப் லத்தீப் சாலை -
வார்ப்புரு:KLRTCC24 செரி பரமேசுவரி -
வார்ப்புரு:KLRTCC25  AG13   CC25  சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் -
வார்ப்புரு:KLRTCC26 சாலாக் ஜெயா -
வார்ப்புரு:KLRTCC27 கூச்சாய் எம்ஆர்டி நிலையம் -
வார்ப்புரு:KLRTCC28 கிள்ளான் லாமா சாலை -
வார்ப்புரு:KLRTCC29 பந்தாய் டாலாம் -
வார்ப்புரு:KLRTCC30 பந்தாய் பெர்மாய் -
வார்ப்புரு:KLRTCC31  KJ19  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் -
வார்ப்புரு:KLRTCC32 மலாயா பல்கலைக்கழகம் -

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Azhar, Danial (15 March 2022). "'Final piece' of KL transit system, MRT3 back on track". Free Malaysia Today. FMT Media Sdn Bhd.
  2. MRT Corp (4 July 2024). "Infographic of Circle Line (MRT3)" (PDF). MRT Corp. Archived (PDF) from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
  3. "MRT Corp Conducts RFI Briefing Session for MRT3 Circle Line Project". MRT Corp (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  4. Wong, Joseph (5 February 2015). "Eyes now on MRT Line 3". The Ant Daily. Archived from the original on 19 May 2015.
  5. "PM Mahathir : Malaysia's planned MRT3 cancelled". The Edge Markets. 2018-05-30. http://www.theedgemarkets.com/article/pm-mahathir-malaysias-planned-mrt3-cancelled. 
  6. "Govt slams brakes on MRT3 and HSR projects" (in en). NST Online. 2018-05-30. https://www.nst.com.my/news/nation/2018/05/374796/govt-slams-brakes-mrt3-and-hsr-projects. 
  7. "Focus turns to structure for MRT3". The Star (Malaysia). 10 Nov 2020. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2021.
  8. Gan, Caroline (2022-03-15). "MRT3 Circle Line to cost RM39.4bil, to start operating in phases from 2028". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.

வெளி இணைப்புகள்

[தொகு]