பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்
AG7 SP7 AG13 பிளாசா ராக்யாட் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() Plaza Rakyat LRT Station | |||||||||||||||||||||
![]() பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் (2024) | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
வேறு பெயர்கள் | Stesen LRT Plaza Rakyat 人民广场站 | ||||||||||||||||||||
அமைவிடம் | புடு சாலை, 56000 ![]() ![]() | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°8′40″N 101°42′5″E / 3.14444°N 101.70139°E | ||||||||||||||||||||
உரிமம் | ![]() | ||||||||||||||||||||
இயக்குபவர் | ![]() | ||||||||||||||||||||
தடங்கள் | ![]() ![]() | ||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | KG17 மெர்டேகா எம்ஆர்டி நிலையம் | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||
நிலையக் குறியீடு | AG7 SP7 AG13 | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 16 திசம்பர் 1996 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
|
பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் அல்லது பிளாசா ராக்யாட் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Plaza Rakyat LRT Station; மலாய்: Stesen LRT Plaza Rakyat; சீனம்: 人民广场站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.
பொது
[தொகு]இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பிளாசா ராக்யாட் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள பிளாசா ராக்யாட் வணிகப் பேரங்காடியின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது. பழைய சுல்தான் சாலை (Sultan Street) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள புடு சென்ட்ரல் (Pudu Sentral) பேருந்து நிலையத்தையும், பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தையும் இணைக்க 150 மீட்டர் நீளமுள்ள பாதசாரி பாலமும் நடைபாதையும் அமைக்கப்பட்டன.
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
[தொகு]அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- கோலாலம்பூர் மாநகர மையம்
- [அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்]]
- மலேசிய தொடருந்து போக்குவரத்து
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ABOUT RAPID RAIL". Retrieved May 8, 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Kampung Baru LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.