செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்
SP18 செரி பெட்டாலிங் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() Sri Petaling LRT Station | ||||||||||||||||
![]() செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (2022) | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | செரி பெட்டாலிங் ![]() ![]() | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°3′41″N 101°41′13″E / 3.06139°N 101.68694°E | |||||||||||||||
உரிமம் | ![]() | |||||||||||||||
இயக்குபவர் | ![]() | |||||||||||||||
தடங்கள் | ![]() | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க மேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
இணைப்புக்கள் | திட்டத்தில்: மாஜு கேஎல் நிலையம்![]() | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | SP18 உயர்த்திய நிலை | |||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | SP18 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 11 சூலை 1998 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Petaling LRT Station; மலாய்: Stesen LRT Sri Petaling; சீனம்: 大城堡站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2]
1998-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் (1998 Commonwealth Games) நினைவாக இந்த நிலையம் திறக்கப்பட்டது. கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் பகுதி வாழ் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது.[3]
பொது
[தொகு]செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் முன்பு காமன்வெல்த் நிலையம் (Komanwel station) என்று அழைக்கப்பட்டது.[4]
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.[5]
அமைவு
[தொகு]அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
அமைப்பு
[தொகு]L1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> AG1 SP1 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) AG11 SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தெருநிலை | பயணச்சீட்டு தானியங்கி, தானியங்கி கட்டணக் கடவுகள், வாடிக்கையாளர் சேவை நிலையம், நிலையக் கட்டுப்பாடு,(→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
[தொகு]அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியா
[தொகு]பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.
எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.
காட்சியகம்
[தொகு]செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்
-
2016
-
2022
-
2022
-
2022
-
2022
மேலும் காண்க
[தொகு]- அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம்
- புடு எல்ஆர்டி நிலையம்
- பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்
- பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
- கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
- கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
- ↑ "Sri Petaling LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Salak South area, Kuala Lumpur, Malaysia". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- ↑ "Sri Petaling line LRT begins from Putra Heights LRT station and a trip from Putra Heights to Sentul Timur takes an estimated 74 minutes. It is medium-capacity light rapid transit line in the Klang Valley, Malaysia". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
- ↑ Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan Sdn. Bhd (in மலாய்). Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
- ↑ "Sri Petaling LRT station near International Medical University (IMU)". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 December 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Sri Petaling LRT station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.