உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°13′10″N 101°43′18″E / 3.21944°N 101.72167°E / 3.21944; 101.72167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KJ2  தாமான் மெலாத்தி
| எல்ஆர்டி

Taman Melati LRT Station
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Taman Melati
美拉蒂花園站
அமைவிடம்பெர்சியாரான் பெர்தகானான், தாமான் மெலாத்தி 53100, கோலாலம்பூர்
மலேசியா
ஆள்கூறுகள்3°13′10″N 101°43′18″E / 3.21944°N 101.72167°E / 3.21944; 101.72167
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  கிளானா ஜெயா 
நடைமேடை2 பக்க மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KJ2 
வரலாறு
திறக்கப்பட்டது1 சூன் 1999; 25 ஆண்டுகள் முன்னர் (1999-06-01)
சேவைகள்
முந்தைய நிலையம்   சுபாங் ஜெயா   அடுத்த நிலையம்
கோம்பாக் எல்ஆர்டி
(முடிவு)
 
கிளானா ஜெயா
 
வங்சாமாஜு எல்ஆர்டி
புத்ரா அயிட்ஸ்

தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Melati LRT Station; மலாய்: Stesen LRT Taman Melati; சீனம்: 美拉蒂花園站) என்பது மலேசியா, கோலாலம்பூர் வடக்குப் பகுதியில், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.

மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.

பொது

[தொகு]

தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம், கோலாலம்பூரின் நகர எல்லையின் வடக்கு விளிம்பில்; கோலாலம்பூர்-செலாயாங் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ளது, மேலும் இது பெர்சியாரான் பெர்தகானான் சாலைக்கு அருகில் கட்டப்பட்டு உள்ளது.

தாமான் மெலாத்தி புறநகர்ப் பகுதிக்கு சேவை செய்வதோடு, அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கோம்பாக் செத்தியா, தாமான் செதாபாக் ஜெயா, தாமான் செமர்லாங் ஆலிய குடியிருப்புப் பகுதிகளும் இந்த நிலையம் சேவை செய்கிறது.

புத்ரா எல்ஆர்டி நிலையத்திற்கு வடக்கே உள்ள கடைசி நிலையம் இந்தத் தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் ஆகும்; மற்றும் தாமான் மெலாத்தி மற்றும் தாமான் செமர்லாங் பகுதிகளுக்கு சேவை செய்யும் இரண்டு கிளானா ஜெயா வழித்தட நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.

இணைப்புகள்

[தொகு]
பேருந்து எண் வழி பேருந்து இணைப்பு
T202 
பெர்சியாரான் பெர்தகானான்; மதராசா சாலை; ஜாலான் டேவான்; ஜாலான் கோம்பாக்; ஜாலான் பத்து கேவ்ஸ் 172 
T203 
ஜாலான் கோம்பாக், ஜாலான் கெந்திங் கிள்ளான், ஜாலான் மெராந்தி 222  250  T250 
  • ஜாலான் (Jalan) எனும் சொல் மலேசியாவில் சாலை என்பதைக் குறிப்பிடும் மலாய் வழக்குச் சொல் ஆகும்.

மலேசியத் தமிழர்கள்; சாலை எனும் சொல்லிற்குப் பதிலாக ஜாலான் எனும் சொல்லையே பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]