உள்ளடக்கத்துக்குச் செல்

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
KLIA Ekspres
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்'
உரிமையாளர்விரைவுத் தொடருந்து
வழித்தட எண் (ஊதா)
வட்டாரம்கோலாலம்பூர்
Kuala Lumpur International Airport#klia2 கேஎல்ஐஏ T2 இஆர்எல்
முனையங்கள்
நிலையங்கள்3
சேவை
வகைநேரடி வானூர்தி நிலைய தொடருந்து இணைப்பு (பயணிகள் தொடருந்து சேவை)
அமைப்பு கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
செய்குநர்(கள்)விரைவுத் தொடருந்து
சுழலிருப்பு8 4-பெட்டி Siemens Desiro; ET 425 M Articulated EMU
2 4-பெட்டி CRRC Changchun Equator Articulated EMU
தினசரி பயணிப்போர்4,758 (Q1 2024)[1]
பயணிப்போர்1.441 மில்லியன் (2023)[2]
வரலாறு
திறக்கப்பட்டதுகோலாலம்பூர் சென்ட்ரல் - கேஎல்ஐஏ T1 நிலையம்
14 ஏப்ரல் 2002; 22 ஆண்டுகள் முன்னர் (2002-04-14)
கடைசி நீட்டிப்புகேஎல்ஐஏ T1 நிலையம் - கேஎல்ஐஏ T2 நிலையம்
1 மே 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-05-01)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்57 km (35.4 mi)
குணம்பெரும்பாலும் தரைவழி
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
மின்மயமாக்கல்25 kV 50 Hz
கடத்தல் அமைப்புமனித உள்ளீடு
Map
Location of KLIA Ekspres

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத் தொடருந்து (ஆங்கிலம்; மலாய்: KLIA Ekspres; சீனம்: '吉隆坡机场快线) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் விரைவுத் தொடருந்துச் சேவை ஆகும்.[3]

இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.

இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் (KLIA Ekspres), மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன. மேலும் கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றன.

பொது

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து சேவையின் நட்புச் சேவையான கேஎல்ஐஏ போக்குவரத்து சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1 மற்றும் கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் இடைவிடாத நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.

இந்த வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் (Klang Valley Integrated Transit System) ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு என குறியீடும் ஊதா நிறத்தில் உள்ளது. இந்த வழித்தடம் விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.[4]

முதல் விபத்து

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres), கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு இடையில் எல்லா நாட்களிலும் தினசரி 05:00 முதல் நள்ளிரவு 00:00 வரை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் செல்கின்றன.[5]

24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.

கேஎல்ஐஏ

[தொகு]

கேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ (KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.

20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.

அதிவிரைவு தொடருந்துச் சேவை

[தொகு]

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

[தொகு]

வழித்தடம்

[தொகு]

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து நிலையங்கள்

[தொகு]
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்தின் உட்பாகம் 1
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்தின் உட்பாகம் 2

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) நிலையங்களின் விவரங்கள்:

நிலையக் குறியீடு தோற்றம் நிலையத்தின் பெயர்
 KE1  KTM ETS கோலாலம்பூர் சென்ட்ரல்
 KE2  Kuala Lumpur International Airport கேஎல்ஐஏ T1 நிலையம்
 KE3  Kuala Lumpur International Airport#klia2 கேஎல்ஐஏ T2 நிலையம்

பயணிகள்

[தொகு]
சாலாக் திங்கி கிடங்கில் இஆர்எல் விரைவுத் தொடருந்து
இஆர்எல் முதல் தலைமுறைத் தொடருந்து
கோலாலம்பூரில் விளம்பரம்

19 செப்டம்பர் 2005 அன்று, 10 மில்லியன் பயணிகள் பயணித்ததை விரைவுத் தொடருந்து இணைப்பு நிறுவனம் கொண்டாடியது. 10 மில்லியன் பயணியான எமிலியா ரோசுனைடா என்பவர் கோலாலம்பூரில் இருந்து நியூயார்க் நகரம் வரை சென்று வர வணிக வகுப்பு பயணத்திற்கான பரிசைப் பெற்றார்.[6]

12 டிசம்பர் 2007 அன்று, 20 மில்லியன் பயணியான சொக்கலிங்கம் என்பவர் கோலாலம்பூரில் இருந்து துபாய் வரை சென்று வருவற்கான பரிசைப் பெற்றார்.

கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயணிகள் [7]
ஆண்டு பயணிகள் குறிப்பு
2023 1,440,773
2022 563,472
2021 53,434 கோவிட்-19
2020 388,949 கோவிட்-19
2019 2,156,302
2018 2,195,353
2017 2,275,650
2016 2,419,883
2015 3,470,710 மிக உயர்வு
2014 2,928,302
2013 2,063,419
2012 1,649,410
2011 1,581,476
2010 1,508,734
2009 1,419,827
2008 1,578,706
2007 1,780,384
2006 1,838,723
2005 1,604,404
2004 1,912,340
2003 1,697,574
2002 1,048,201 14 ஏப்ரல் 2002-இல் செயல்பாடுகள் தொடங்கின

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Statistic for Rail Transport" (in மலாய் and ஆங்கிலம்). Ministry of Transport, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  2. "Number of Passengers for Rail Transport Services, Fourth Quarter, 2023" (in மலாய் and ஆங்கிலம்). Ministry of Transport, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
  3. "KLIA Ekspres is the fastest non-stop train transfer between the Kuala Lumpur city center and the Kuala Lumpur International Airport (KLIA Terminal 1 & KLIA Terminal 2) with a total journey time of only 33 minutes". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
  4. "The KLIA (Kuala Lumpur International Airport) Ekspres and Transit trains are airport rail link services that aim to provide expedited travel between the two principal terminals KLIA (main terminal) and KLIA2 (low-cost carrier terminal), and KL Sentral, Kuala Lumpur's main intercity railway station". Tunnel Time. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
  5. "KLIA Ekspres Kuala Lumpur Airport Express Train Ticket - Only 28 minutes from Kuala Lumpur International Airport to Kuala Lumpur". www.trip.com. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
  6. "KLIA Ekspres - The fastest way between KL Airport and KL City". Archived from the original on 1 June 2008.
  7. "Statistic of Rail Transport". Ministry of Transport (Malaysia). Archived from the original on 9 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]