சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் BRT Sunway Line | |||
---|---|---|---|
மின்கலத்தில் இயங்கும் ரேபிட் பேருந்து | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயல்பாட்டில் உள்ளது | ||
உரிமையாளர் | பிரசரானா மலேசியா | ||
வழித்தட எண் | (கரும் பச்சை) | ||
வட்டாரம் | பண்டார் சன்வே | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 7 | ||
இணையதளம் | myrapid | ||
சேவை | |||
வகை | உயர்மட்ட நிலை | ||
அமைப்பு | ரேபிட் கேஎல் | ||
சேவைகள் | செத்தியா ஜெயா நிலையம் – சன்வே லகூன் – யூஎஸ்ஜே 7 | ||
செய்குநர்(கள்) | ரேபிட் பேருந்து | ||
தினசரி பயணிப்போர் | 15,322 (Q2 2024)[1] | ||
பயணிப்போர் | 5.09 மில்லியன் (2023) | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 2 சூன் 2015 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 5.4 km (3 mi) | ||
|
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் அல்லது பிஆர்டி சன்வே வழித்தடம் (ஆங்கிலம்: BRT Sunway Line (BRT); மலாய்: BRT Laluan Sunway); சீனம்: 双威BRT线) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் பேருந்து வழித்தடம் ஆகும்.
இந்த வழித்தடம் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
உலகின் முதல் முழு மின்சார விரைவுப் பேருந்துச் சேவை என்றும் பெயர் பெற்றுள்ளது.[2]
இந்த வழித்தடம் ரேபிட் கேஎல் பேருந்து நிறுவனத்தால் இயக்கப்படுகிறது; மற்றும் பண்டார் சன்வே மற்றும் சுபாங் ஜெயாவில் மக்கள் அதிக அடர்த்தியான பகுதிகளுக்கு சேவை செய்வதற்காக 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொது
[தொகு]விளக்கம்
[தொகு]BRT - Bus Rapid Transit - பிஆர்டி பேருந்து சேவை
பிஆர்டி பேருந்துகள் (BRT Sunway Line Buses) சாதாரண சாலைப் போக்குவரத்துடன் தங்கள் பாதைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. அவற்றுக்கென்று சிறப்பான உயர்மட்டப் பாதைகள் உள்ளன.
விரைவுத் தொடருந்து போக்குவரத்திற்கு வழங்கப்பட்டு இருக்கும் உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் போன்று இந்தப் பேருந்துகளுக்கும் பாதைகள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ரேபிட் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்து நடத்துனர்களுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கப்படவில்லை. மற்றும் உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்த வேறு மாற்றுவழிச் சரிவுப் பாதைகளும் இல்லை.
வழித்தட அமைப்புமுறை
[தொகு]நெரிசலைத் தவிர்க்கவும்; அதிக அளவிலான பயணிகள் எளிய முறையில் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்காகவும் இந்தச் சிறப்பு வழித்தட அமைப்புமுறை பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும், இந்தப் பேருந்து அமைப்பு முறைமை; செரி செத்தியா கொமுட்டர் நிலையத்திற்கும் மற்றும் யுஎஸ்ஜே 7 நிலையத்திற்கும் இடையேயான 5.4 கிமீ (3.4 மைல்) பாதையில் மட்டுமே அமைந்துள்ளது.[3][4]
நிலையங்கள்
[தொகு]நிலையக் குறியீடு | பெயர் | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|
SB1 | செத்தியா ஜெயா நிலையம் | தொடக்கம்.
KD08 செத்தியா ஜெயா நிலையம் - தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம். | |
SB2 | மெந்தாரி விரைவுப் பேருந்து நிலையம் | சன்வே மெந்தாரி வணிக பூங்கா | |
SB3 | சன்வே லகூன் விரைவுப் பேருந்து நிலையம் | 300-மீட்டர் (984 அடி 3 அங்) சன்வே லகூன் சன்வே பிரிமிட் | |
SB4 | சன்வெட் விரைவுப் பேருந்து நிலையம் | சன்வே மருத்துவ மையம்; டெய்லர் பல்கலைக்கழகம் 800-மீட்டர் (2,624 அடி 8 அங்) பாதசாரி நடைபாதை | |
SB5 | சன்யூ மொனாஷ் விரைவுப் பேருந்து நிலையம் | மலேசிய மோனாஷ் பல்கலைக்கழகம்; சன்வே பல்கலைக்கழகம் பாதசாரி நடைபாதை | |
SB6 | சவுத் குவே யுஎஸ்ஜே 1 விரைவுப் பேருந்து நிலையம் | மைடின் USJ 1; காசா சுபாங்; இம்பியான் மெரிடியான் | |
SB7 | யூஎஸ்ஜே 7 விரைவுப் பேருந்து நிலையம் | முடிவு.
மாற்றுவழி நிலையம் - யுஎஸ்ஜே7 எல்ஆர்டி நிலையம் KJ31 எல்ஆர்டி |
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
[தொகு]- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ridership". Rapid Bus Performance Update. RapidKL. 26 July 2024. Archived from the original on 7 August 2024. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ "Malaysia Launches World's First Elevated Electric Bus Rapid Transit System". INSIDEEVs. Archived from the original on 6 April 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
- ↑ Ong, Kian Ming; Fong, Jonathan (February 2016). "The SUNWAY Bus Rapid Transit (BRT) Line: Lessons for the Future" (PDF). Archived (PDF) from the original on 29 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
- ↑ "The Future of Bus Rapid Transit (BRT) in Malaysia" (PDF). Volvo Buses. Archived (PDF) from the original on 20 February 2023. பார்க்கப்பட்ட நாள் 20 February 2023.
மேலும் காண்க
[தொகு]- List of bus rapid transit systems
- Public transport in Kuala Lumpur
- Buses in Kuala Lumpur
- Prasarana Malaysia Berhad
- Rapid Bus Sdn Bhd
- Rapid KL
- BRT Sunway Line
- BRT Federal Line
- Rapid Penang
- Rapid Kuantan
- Rapid KL
- Rapid Bus Sdn Bhd
- Land Public Transport Commission (SPAD)
- Sunway Group