உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாங் வழித்தடம்
Ampang Line
செரி பெட்டாலிங் வழித்தடம்
Sri Petaling Line
6- பெட்டிகள் கொண்ட CRRC Zhuzhou இலகு தொடருந்து
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்LRT Laluan Ampang
LRT Laluan Sri Petaling
உரிமையாளர் பிரசரானா மலேசியா
வழித்தட எண் ஆரஞ்சு
அரக்கு
வட்டாரம்கிள்ளான் பள்ளத்தாக்கு
முனையங்கள்
நிலையங்கள்36 நிலையங்கள் & 2 நிலையங்கள் இருப்புவைப்பு
இணையதளம்My Rapid
சேவை
வகைஇலகு தொடருந்து
அமைப்புரேபிட் கேஎல் ரேபிட் கேஎல்
சேவைகள்அம்பாங் வழித்தடம்: செந்தூல் தீமோர் - அம்பாங்
செரி பெட்டாலிங் வழித்தடம்: செந்தூல் தீமோர் - புத்ரா அயிட்ஸ்
செய்குநர்(கள்)Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
பணிமனை(கள்)அம்பாங் கிடங்கு
கோலா சுங்கை பாரு கிடங்கு
சுழலிருப்புCSR Zhuzhou இலகு தொடருந்து
50 ஆறு பெட்டிகள் கொண்ட தொடருந்துகள்
அகலம்: 2.65 m (8 அடி 8 அங்) - குறுகிய அமைப்பு
நீளம்: 84.0 m (275.6 அடி)
தினசரி பயணிப்போர்172,517 (Q2 2024)[1]
பயணிப்போர்50.59 மில்லியன் (2023)
65.15 மில்லியன் (2019)[2]
வரலாறு
திறக்கப்பட்டதுகட்டம் 1: சுல்தான் இசுமாயில் - அம்பாங்
16 திசம்பர் 1996; 27 ஆண்டுகள் முன்னர் (1996-12-16)
கட்டம் 2: சுல்தான் இசுமாயில்- செந்தூல் தீமோர் & சான் சோவ் லின் - செரி பெட்டாலிங்
சூலை 1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998-07)
கடைசி நீட்டிப்புசெரி பெட்டாலிங் - புத்ரா அயிட்ஸ்
30 சூன் 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-06-30)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்45.1 km (28.0 mi)
குணம்உயர்மட்டம்; தைரைநிலை
தட அளவி1,435 mm (4 ft 8 1⁄2 in)
மின்மயமாக்கல்750 V DC
இயக்க வேகம்மத்திமம்: 60 km/h (37 mph)
சமிக்ஞை செய்தல்தொடர்பாடல் சார்ந்த தொடருந்து கட்டுப்பாடு

அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line மலாய்: Laluan LRT Ampang - Laluan LRT Sri Petaling) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

பொது

[தொகு]

எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.

எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தின் கிழக்கு முனையமான அம்பாங் நிலையத்தின் பெயரில் அம்பாங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது. எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.

ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு

[தொகு]

இந்த வழித்தடங்கள் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும்.

இந்த வழித்தடங்களில் 36 நிலையங்கள் உள்ளன. 45.1 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.

வரலாறு

[தொகு]

அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து ஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.

இலகு தொடருந்து ஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை அரசாங்கம் முன்மொழிந்தது.

ஒப்பந்தம்

[தொகு]

டிசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[3]

25 நிலையங்களைக் கொண்ட அசல் அமைப்பு (27.4 கிமீ - 17.0 மைல்) நீளம் கொண்டது. இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. முதல் கட்டம் (12.4 கிமீ - 7.7 மைல்); 14 நிலையங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டம் (15 கிமீ - 9.3 மைல்); 11 நிலையங்களைக் கொண்டது. இரண்டு கட்டங்களும் முறையே டிசம்பர் 1996 மற்றும் சூலை 1998-இல் திறக்கப்பட்டன.[4][5]

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

[தொகு]

அம்பாங் வழித்தட நிலையங்கள்

[தொகு]
  • AG - Ampang; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya
குறியீடு நிலையத்தின் பெயர் இணைப்பு நிலையங்கள்
 AG1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் -
 AG2  செந்தூல் எல்ஆர்டி நிலையம் -
 AG3  தித்திவங்சா நிலையம்  MR11   மோனோரெயில் 
 PY17   புத்ராஜெயா 
 AG4  புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம்  KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்
 AG5  சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்  MR9  மேடான் துவாங்கு மோனோரெயில்
 AG6  பண்டாராயா எல்ஆர்டி நிலையம்  KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
 AG7  மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்  KJ13   கிளானா ஜெயா 
 AG8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்  KG17  மெர்டேகா நிலையம்
 AG9  ஆங் துவா நிலையம்  MR4   மோனோரெயில் 
 AG10  புடு எல்ஆர்டி நிலையம் -
 AG11  சான் சோவ் லின் நிலையம்  PY24  புத்ராஜெயா 
 AG12  மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் -
 AG13  மலூரி நிலையம்  KG22   காஜாங் 
 AG14  பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் -
 AG15  பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் -
 AG16  செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் -
 AG17  சகாயா எல்ஆர்டி நிலையம் -
 AG18  அம்பாங் எல்ஆர்டி நிலையம் -

செரி பெட்டாலிங் வழித்தடம்

[தொகு]
  • AG - Ampang; KA - Kajang Ampang; KA - Kajang Ampang; KJ - Kelana Jaya; SP - Sri Petaling; MR - Monorail; PY - Putrajaya
குறியீடு நிலையத்தின் பெயர் இணைப்பு நிலையங்கள்
 SP1  செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் -
 SP2  செந்தூல் எல்ஆர்டி நிலையம் -
 SP3  தித்திவங்சா நிலையம்  MR11   மோனோரெயில் 
 PY17   புத்ராஜெயா 
 SP4  புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம்  KA04  புத்ரா கொமுட்டர் நிலையம்
 SP5  சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்  MR9  மேடான் துவாங்கு மோனோரெயில்
 SP6  பண்டாராயா எல்ஆர்டி நிலையம்  KA03  பேங்க் நெகாரா கொமுட்டர் நிலையம்
 SP7  மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம்  KJ13   கிளானா ஜெயா 
 SP8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்  KG17  மெர்டேகா நிலையம்
 SP9  ஆங் துவா நிலையம்  MR4   மோனோரெயில் 
 SP10  புடு எல்ஆர்டி நிலையம் -
 SP11  சான் சோவ் லின் நிலையம்  PY24   புத்ராஜெயா 
 SP12  செராஸ் எல்ஆர்டி நிலையம்  KG21  காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
 SP13  சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்  KG24  தாமான் மீடா எம்ஆர்டி நிலையம்
 SP14  பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம் -
 SP15  பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்  KB04   பத்துமலை-புலாவ் செபாங் 
 KTM ETS  கேடிஎம் இடிஎஸ்
 KT2  கேஎல்ஐஏ போக்குவரத்து
 KG26  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்
 SP16  சுங்கை பீசி நிலையம்  PY29   புத்ராஜெயா 
 SP17  புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
 SP18  செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் -
 SP19  அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் -
 SP20  முகிபா எல்ஆர்டி நிலையம் -
 SP21  ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் -
 SP22  கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம் -
 SP23  கின்ராரா பிகே5 (திட்டத்தில்) -
 SP24  ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் -
 SP25  பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் -
 SP26  தாமான் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் -
 SP27  பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் -
 SP28  பூச்சோங் பெர்தானா எல்ஆர்டி நிலையம் -
 SP29  பூச்சோங் பிரைமா எல்ஆர்டி நிலையம் -
 SP30  (கம்போங் செரி அமான்) -
 SP31  புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம்  KJ37   கிளானா ஜெயா 

காட்சியகம்

[தொகு]

செரி பெட்டாலிங் வழித்தடத்தின் காட்சிப் படங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ridership". Rapid Rail Performance Update. RapidKL. 26 July 2024. Archived from the original on 7 August 2024. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  2. "Public Transportation Dashboard". RapidKL. 18 January 2024. பார்க்கப்பட்ட நாள் 18 January 2024.
  3. An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10
  4. Trolley Wire, page 12-14
  5. Light Rail Transit Stations பரணிடப்பட்டது 20 ஆகத்து 2017 at the வந்தவழி இயந்திரம், page 4

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]