உள்ளடக்கத்துக்குச் செல்

நகரிடை தொடருந்து சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்காவில், போஸ்டன்- வாஷிங்டன் நகரங்களுகு இடையிலான சேவைகளை வழங்கும் அசெலா விரைவுத் தொடருந்து; (2011)

நகரிடை தொடருந்து சேவை (ஆங்கிலம்: Inter-city rail) என்பது நீண்ட தூர நகரங்களை இணைக்கும் தொடருந்து சேவை ஆகும். பொதுவாக, இந்தச் சேவையில் விரைவுத் தொடருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தச் சேவை, பயணிகள் அல்லது பிராந்திய ரயில்களை விட நீண்ட தூரத்திற்கு நகரங்களை இணைக்கிறது. இவை அவற்றின் புறப்படுமிடம் மற்றும் சேருமிட நிலையங்களுக்கு இடையில் சில அல்லது நிறுத்தங்களே இல்லாமல் பயணிக்கும்.

பொது

[தொகு]

நகரிடை தொடருந்து சேவை என்பது வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களைக் கொண்டவை; மற்றும் நீண்ட தூரப் பயணத்திற்குச் சேவை செய்யும் தொடருந்து வண்டிகளைக் கொண்டவை.

நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் சில வேளைகளில் பன்னாட்டுச் சேவைகளையும் வழங்குகின்றன. ஐரோப்பாவில் இந்த வழக்கம் மிகவும் பரவலாக உள்ளது. 10,180,000-சதுர-கிலோமீட்டர் (3,930,000-சதுர-மைல்) பரப்பளவிற்கு ஐரோப்பாவின் 50 நாடுகளும் அருகாமையில் இருப்பதால் இந்த நிலைமை சாத்தியமாகிறது.[1] யூரோஸ்டார் (Eurostar) மற்றும் யூரோசிட்டி (EuroCity) போன்ற தொடருந்துச் சேவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

வேகநிலை

[தொகு]

நகரங்களுக்கு இடையிலான தொடருந்து வழித்தடங்களின் வேகம் மிகவும் மாறுபட்டது. இந்தச் சேவையின் தொடருந்துகள் மலைப் பகுதிகளில் 50 கிமீ (31 மைல்) குறைவான வேகத்தில் செல்லும். புதிதாகக் கட்டப்பட்ட தடங்களில் அல்லது மேம்படுத்தப்பட்ட தடங்களில் அவற்றின் வேகம் 200-350 கிமீ (124-217 மைல்) வரையில் இருக்கும்.

கார், பேருந்து மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் போட்டியிடும் வகையில், நகரிடை தொடருந்து சேவையின் சராசரி வேகம் 100 கிமீ (62 மைல்)-ஐ விட கூடுதலாக இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nunno, Richard (19 July 2018). "Fact Sheet: High Speed Rail Development Worldwide". eesi.org. Environmental and Energy Study Institute. பார்க்கப்பட்ட நாள் 11 January 2024.
  • Overseas Timetable: Independent Traveller's Edition, Winter 2008/9; Thomas Cook Publishing
  • Thomas Cook European Timetable|European Rail Timetable: Independent Traveller's Edition, Winter 2008/9; Thomas Cook Publishing

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரிடை_தொடருந்து_சேவை&oldid=4124124" இலிருந்து மீள்விக்கப்பட்டது