உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங் துவா நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′24″N 101°42′21″E / 3.14000°N 101.70583°E / 3.14000; 101.70583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 AG9   SP9   MR4  ஆங் துவா
| எல்ஆர்டி | மோனோ
BBCC-Hang Tuah Station
ஆங் துவா நிலையம் (2024)
பொது தகவல்கள்
அமைவிடம்புக்கிட் பிந்தாங் நகர மையம், ஆங் துவா சாலை, புடு, 55200, கோலாலம்பூர்
ஆள்கூறுகள்3°8′24″N 101°42′21″E / 3.14000°N 101.70583°E / 3.14000; 101.70583
உரிமம் பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  அம்பாங் 
 செரி பெட்டாலிங் 
 கோலாலம்பூர் மோனோ 
நடைமேடை4 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2 (எல்ஆர்டி); 2 (மோனோரெயில்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை AG9   SP9  நிலத்தடி
 MR4  உயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்4
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AG9   SP9   MR4 
வரலாறு
திறக்கப்பட்டது16 திசம்பர் 1996 (எல்ஆர்டி); 31 ஆகத்து 2003 (மோனோரெயில்)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
பிளாசா
செந்தூல் தீமோர்
 
அம்பாங் வழித்தடம்
 
புடு
அம்பாங்
பிளாசா
செந்தூல் தீமோர்
 
செரி பெட்டாலிங்
 
புடு
புத்ரா
மகாராஜாலேலா
கேஎல் சென்ட்ரல்
 
கோலாலம்பூர் மோனோரெயில்
 
இம்பி
தித்திவங்சா

ஆங் துவா நிலையம் அல்லது பிபிசிசி - ஆங் துவா நிலையம் (ஆங்கிலம்: BBCC-Hang Tuah Station; மலாய்: Stesen BBCC-Hang Tuah; சீனம்: 漢都亞站) என்பது மலேசியா, கோலாலம்பூர், புடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாற்றுவழிப் போக்குவரத்து (Interchange station) நிலையமாகும். பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும். பொதுவாக இந்த நிலையம் ஆங் துவா நிலையம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.[2]

இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், செரி பெட்டாலிங் வழித்தடம், கோலாலம்பூர் மோனோரெயில், ஆகிய 3 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.[3]

2012 மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து ஆங் துவா நிலையத்தைப் பயன்படுத்தும் மூன்று தொடருந்து வழித்தடங்களுக்கும் இடையே ஒரு தடையற்ற கட்டண ஒருங்கிணைப்பு முறைமை பயன்பாட்டில் உள்ளது.

அமைவு

[தொகு]

புக்கிட் பிந்தாங் நகர மையத்திற்கு வலதுபுறம் அமைந்துள்ள இந்த நிலையம், மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளி, விக்டோரியா கல்விக்கழகம், புக்கிட் அமான் மலேசிய காவல் துறையின் தலைமையகம் (Royal Malaysia Police Headquarters) மற்றும் கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) ஆகியவற்றின் அருகிலும் அமைந்துள்ளது.

ஆங் துவா எல்ஆர்டி நிலையம் 1996-இல் உருவாக்கப்பட்டது. இதுவே கோலாலம்பூர் நகரில் திறக்கப்பட்ட முதல் 13 இஸ்டார் விரைவு போக்குவரத்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நிலையத்தின் மேல்தளம், பயணச்சீட்டுகள் வழங்கும் முகவர் பகுதியுடன் இணைக்கப்பட்ட இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. மேல்தளத்தின் வழியாக ஆங் துவா சாலைக்குச் செல்லலாம்.

வசதிகள்

[தொகு]

இலகு விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் உள்ள நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயரத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேல் தளத்தில் இயங்குதளங்கள் உள்ளன. நடு தளத்தில் பயணச்சீட்டு தானியங்கிகள், பொருட்கள் வைக்குமிடம்; பயணத்திற்காகக் காத்திருக்கும் வசதிகள் உள்ளன.

ஆங் துவா நிலையத்தில் உள்ள இரண்டு நிலையங்களும் (எல்ஆர்டி நிலையம்; மோனோரெயில்) தனித்தனியாக இயங்குகின்றன. அவற்றுள் ஆங் துவா மோனோரயில் நிலையம் என்பது கோலாலம்பூர் மோனோரெயில் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் தனி ஒருதொடருந்து நிலையமாகும்; 31 ஆகத்து 2003 அன்று திறக்கப்பட்டது.

மற்ற எல்லா மோனோரயில் நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையில் கட்டப்பட்டுள்ளது. ஆங் துவா சாலைக்கு மேலே உள்ளது. கோலாலம்பூர் தங்க முக்கோணத்திற்குச் சேவை செய்யும் நான்கு கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்களில் ஆங் துவா மோனோரெயில் நிலையமும் ஒன்றாகும்.

ஆங் துவா நிலைய தள அமைப்பு

[தொகு]
L1 - முதலாவது மாடி பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்
மோனோரெயில் தெற்கு திசை  MR1  கேஎல் சென்ட்ரல்மகாராஜாலேலா
மோனோரெயில் வடக்கு திசை  MR11  தித்திவங்சா நிலையம்இம்பி நிலையம்
பக்க மேடை, தொடருந்து கதவுகள் வலதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்
மோனோரெயில் காத்திருக்கும் இடம் கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் LRT ஊனமுற்றவர் அணுகல்
G - தெருநிலை சாலைவழி நுழைவாயில்கள், பயணச்சீட்டு தானியங்கி நிலையங்கள், கட்டண வாயில்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், மோனோரயில் கட்டண நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள், டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஊனமுற்றவர் அணுகல்
LG - நிலத்தடி நிலை
எல்ஆர்டி
பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்
AG/SP தெற்கு திசை  AG18  அம்பாங்புடு
 SP31  புத்ரா அயிட்ஸ்புடு
AG/SP வடக்கு திசை  AG1  செந்தூல் தீமோர்பிளாசா ராக்யாட்
 SP1  செந்தூல் தீமோர்பிளாசா ராக்யாட்
பக்க மேடை, தொடருந்து கதவுகள் இடதுபுறத்தில் திறக்கப்படும் ஊனமுற்றவர் அணுகல்

காட்சியகம்

[தொகு]

ஆங் துவா நிலையக் காட்சிப் படங்கள்:

நிலையச் சுற்றுப்புறம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. Retrieved 15 November 2024.
  2. "Hang Tuah LRT Station, also known as BBCC - Hang Tuah Station due to the new transit hub, is an interchange station in the Pudu district of Kuala Lumpur". mrt.com.my. Retrieved 25 November 2024.
  3. "LRT Ampang Line / Sri Petaling Line meant both stations are designated in transit maps as interchange stations". mrt.com.my. Retrieved 25 November 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_துவா_நிலையம்&oldid=4203415" இலிருந்து மீள்விக்கப்பட்டது