அக்பர் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்பர் சாலை என்பது இந்தியாவின் புதுதில்லியில் ஓர் முக்கிய சாலையாகும். வடகிழக்கு முனையில் இது இந்தியாவின் வாயில் பகுதியிலிருந்து தென்மேற்கு முனையில் இது தீன் மூர்த்தி பவன் வரை நீண்டுள்ளது. லோக் கல்யாண் சாலை, ராஜாஜி சாலை, தீன் மூர்த்தி சாலை மற்றும் சப்தர்ஜங் சாலையினை அணுகலாம். இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் இந்த சாலையில் தான் அமைந்துள்ளது.[1][2][3][4]

சந்திப்புகள்[தொகு]

  • மான்சிங் சாலை மற்றும் மவுலான ஆசாத் சாலையை இணைக்கும் சுற்று வட்ட சந்திப்பு
  • மோதிலாலால் நேரு பகுதி மற்றொரு சந்திப்பு ஆகும். இங்கு மோதிலால் நேரு சாலை மற்றும் ஜன்பத் சாலை ஆகியவை இந்த சாலையை குறுக்கிடும்.
  • கிருஷ்ண மேனன் சாலை, துக்ளக் சாலை மற்றும் தீசு ஜனவரி மார்க் சந்திக்கும் ஒரு சுற்று வட்ட சந்திப்பு.

இந்த சாலையும் இதன் அருகிலுள்ள சாலைகளும் இந்தியாவின் மிகப் பிரபலமான அரசியல்வாதிகள் வசிக்கும் பிரத்தியேக வி.வி.ஐ.பி. மண்டலத்தை உருவாக்குகின்றன. இதில் அமைச்சர்கள், மூத்த எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து மிக அருகில் உள்ளது.

சர்ச்சை[தொகு]

அக்பர் ஒரு முகலாயர் (எனவே ஒரு படையெடுப்பாளர்) என்பதால் அக்பர் சாலையை மகாராணா பிரதாப் சிங் சாலை என மறுபெயரிட வேண்டும் என்ற பிரச்சினையை 2016ஆம் ஆண்டில் தளபதி விஜய் குமார் சிங் எழுப்பினார்.[5] 2018ஆம் ஆண்டில், மஹாராணா பிரதாப் சிங் சாலை என்ற பெயரில் சுவரொட்டியானது ஏற்கனவே இருந்த பெயர்ப்பலகைமீது ஒட்டப்பட்டது. சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Name games". The Indian Express (in ஆங்கிலம்). 2016-05-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  2. "Indian National Congress - Locate Offices". Indian National Congress. Archived from the original on 2021-01-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  3. "24, Akbar Road, which saw rise and fall of Congress for last 40 years". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/24-akbar-road-which-saw-rise-and-fall-of-congress-for-last-40-years/articleshow/50968724.cms?from=mdr. 
  4. "The sign of times" (in en-IN). 2015-09-02. https://www.thehindu.com/features/metroplus/the-sign-of-times/article7608093.ece. 
  5. "Re-Naming Akbar Road Is About Politics and Hindutva". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  6. "Akbar Road ‘renamed’ Maharana Pratap Road". https://www.thehindu.com/news/cities/Delhi/akbar-road-renamed-maharana-pratap-road/article23829976.ece. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_சாலை&oldid=3777305" இலிருந்து மீள்விக்கப்பட்டது