உள்ளடக்கத்துக்குச் செல்

தீன் மூர்த்தி பவன்

ஆள்கூறுகள்: 28°36′09″N 77°11′56″E / 28.602608°N 77.198774°E / 28.602608; 77.198774
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீன் மூர்த்தி பவன்
இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேருவின் தங்குமிடம்
Map
பொதுவான தகவல்கள்
இடம்தீன் மூர்த்தி ஹைபா சால
முகவரிகன்னாட்டு பிளேசு, புது தில்லி, இந்தியா
ஆள்கூற்று28°36′09″N 77°11′56″E / 28.602608°N 77.198774°E / 28.602608; 77.198774
நிறைவுற்றது1930
உரிமையாளர்இந்திய அரசு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இராபர்ட் தோர் ரஸ்சல்
நேரு கோளகம், தீன் மூர்த்தி பவன், புது தில்லி


தீன் மூர்த்தி பவன் (Teen Murti Bhavan - Teen Murti House), இந்தியாவின் முதல் பிரதம அமைச்சரான ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாகும். ஜவகர்லால் நேரு பிரதமராக 27 மே 1964-இல் இறக்கும் வரை, 16 ஆண்டுகள் தீன் மூர்த்தி பவனில் தங்கி பிரதமர் கடமைகளை ஆற்றினார்.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 1930-இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமைப்படைத்தலைவர் தங்குவதற்காக 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இக்கட்டிடம் புது தில்லியின் கன்னாட்டு பிளேசு பகுதியில் கட்டப்பட்டது.[1]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இக்கட்டிடம் ஜவகர்லால் நேருவின் தங்குமிடமாக விளங்கியது. 1964-இல் நேருவின் மறைவிற்குப்ப் பின், இக்கட்டிடம் நேரு அருங்காட்சியகம், கோளரங்கம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teen Murti Bhavan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_மூர்த்தி_பவன்&oldid=3777316" இலிருந்து மீள்விக்கப்பட்டது