உள்ளடக்கத்துக்குச் செல்

லால்தெங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்தெங்கா
மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர்
பதவியில்
21 ஆகஸ்டு 1986 – 7 செப்டம்பர் 1988
ஆளுநர்எச். எஸ். துபே
இதேஷ்வர் சைக்கியா
முன்னையவர்லால்தன்ஹவ்லா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி ]]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-06-11)11 சூன் 1927
புக்பூய், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது மிசோரம், இந்தியா
இறப்பு7 சூலை 1990(1990-07-07) (அகவை 63)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
காரணம் of deathநுரையீரல் புற்று
இளைப்பாறுமிடம்கருவூல சதுக்கம், அய்சால், மிசோரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிமிசோ தேசிய முன்னணி
துணைவர்லால்பியாக்டிக்கி
வேலைஅரசியல்வாதி
அறியப்படுவதுதலைவர், மிசோ தேசிய முன்னணி
மிசோரம் முதலமைச்சர்

லால்தெங்கா (Laldenga (11 சூன் 1927 – 7 சூலை 1990), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மிசோரம் பகுதியில் பிரிவினைவாத மிசோ தேசிய முன்னணி அரசியல் கட்சியை நிறுவிய அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் தனி மிசோரம் மாநிலத்தின் மிசோரம் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக 1986 முதல் 1988 வரை பணியாற்றியவர்.

லால்தெங்கா துவக்கத்தில் இந்திய இராணுவத்தில் ஹவில்தார் பதவி வகித்தார். பின்னர் அசாம் மாகாண அரசில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். 1950களின் பிற்பகுதியில் மிசோரமில் ஏற்பட்ட மௌடம் எனும் மூங்கில் பூப்பால் ஏற்பட்ட பெரும் பஞ்சம் காரணமாக மிசோ மாவட்டம் பெரும்பாதிப்புக்கு உள்ளானது. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சியைத் துவங்கினர். இதனால் லால்தெங்கா மிசோரம் பகுதியை, இந்தியாவிலிருந்து பிரித்து, தனி மிசோரம் நாட்டை உருவாக்க வேண்டி மிசோ தேசிய முன்னணி எனும் பிரிவினைவாத அமைப்பை நிறுவினார். 1986ம் ஆண்டில் மிசோரம் அமைதி ஒப்பந்தம் 1986 ஏற்பட்ட பிறகு லால்தெங்கா மிசோரம் மாநிலச் சட்டமன்றத்தின் முதல் முதலமைச்சரானார். லால்தெங்கா நுரையீரல் புற்று நோய் காரணமாக 1990ல் இலண்டனில் இறந்தார்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lalremruata, A.H. (2019-01-04). "Deputy Chief Minister Pu Tawnluia'n Pu Laldenga thlan a tlawh" [Deputy Chief Minister Pu Tawnluia visited Pu Laldenga's grave]. dipr.mizoram.gov.in (in Mizo). பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "28 years on, Laldenga is still Mizoram's tallest leader". The Indian Express (in ஆங்கிலம்). 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
  3. "Laldenga Passes due to Lung Cancer". Time of India. 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 17 June 2011.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்தெங்கா&oldid=3781762" இலிருந்து மீள்விக்கப்பட்டது