ஆற்காடு
ஆற்காடு
ஆர்க்காடு | |
---|---|
முதல் நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 12°54′17″N 79°19′26″E / 12.904700°N 79.323800°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
சட்டமன்றத் தொகுதி | ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | அரக்கோணம் மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | ஆற்காடு நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | ஜெகத்ரட்சகன் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஜெ. இல. ஈசுவரப்பன் |
• மாவட்ட ஆட்சியர் | திவ்யதர்ஷினி[1] |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 70,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN 73 |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 46 கிமீ |
சென்னையிலிருந்து தொலைவு | 114 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 91 கி.மீ |
வேலூரிலிருந்து தொலைவு | 24 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 28 கிமீ |
சித்தூரிலிருந்து தொலைவு | 53 கிமீ |
பெங்களூரிலிருந்து தொலைவு | 233 கிமீ |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 120 கிமீ |
இணையதளம் | ஆற்காடு நகராட்சி |
ஆற்காடு அல்லது ஆர்க்காடு (ஆங்கிலம்:Aarkadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டம் மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.
பெயராய்வு
[தொகு]ஆர் என்றால் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாயிருந்ததால் ‘ஆர்க்காடு’ எனப்பட்டது.[2]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°54′N 79°20′E / 12.9°N 79.33°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 164 மீட்டர் (538 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. ஆற்காடு மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பொருளாதாரம்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர, தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால், முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய, வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக, இவ்வூர் மக்களுக்கு, பெரும்பாலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தொழிலாளர்களில் சுமார் 85% பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10% தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில், ஆண்களின் பங்கு 50%; பெண்களின் பங்கு 20% ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும், வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு, ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஆற்காடு நகரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை நகரத்தில், நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல் பொருட்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்தத் தோல் ஏற்றுமதியில், வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37% ஆகும்.
நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]- ஆற்காடு நகரம், மூன்றாம் நிலை நகராட்சியாக 1959 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது.
- 1998 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. 30 வார்டுகளுக்கும், ஒவ்வோர் உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கல்வி
[தொகு]இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில், ஆற்காடு சுற்றியுள்ள கல்வி பங்கு, முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
போக்குவரத்து
[தொகு]சாலை வசதிகள்
[தொகு]சுமார் 104.332 கி.மீ., அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை, வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில் 50.259 கி.மீ. (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கி.மீ. நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித் தார்ச்சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டிணகிரியையும், வாலாசாவையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 46, ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் மாநில நெடுஞ்சாலை எண் 4
- ராணிப்பேட்டை – ஆரணி - விழுப்புரம் மற்றும்
- கடலூர் – திருவண்ணாமலை - சித்தூர்
சாலைகளை இணைத்துச் செல்கிறது.
சென்னையிலிருந்து, ஆரணிக்கு செல்ல வேண்டுமென்றால் ஆற்காடு வழியாக தான் செல்ல முடியும்.
தேசிய நெடுஞ்சாலை 46 - சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை 4 - இராணிப்பேட்டை - ஆற்காடு - ஆரணி - சேத்துப்பட்டு - செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை 5 - இராணிப்பேட்டை - செய்யாறு - வந்தவாசி - திண்டிவனம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - இராணிப்பேட்டை - ஆற்காடு - காவனூர் - கண்ணமங்கலம் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - ஆற்காடு - வாலசாபேட்டை - சோளிங்கர் நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை - ஆற்காடு - இராணிப்பேட்டை - சித்தூர் நெடுஞ்சாலை
ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேருந்து வசதிகள்
[தொகு]தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன், ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது.
வழி | சேருமிடம் |
---|---|
ஆரணி மார்க்கமாக | ஆரணி, போளூர், திருவண்ணாமலை, திருச்சி, செங்கம், சேத்துப்பட்டு, மேல்மலையனூர், செஞ்சி, விழுப்புரம் செல்லும் பேருந்துகள் |
கண்ணமங்கலம் மார்க்கமாக | கண்ணமங்கலம், காளசமுத்திரம், படவேடு, போளூர் செல்லும் பேருந்துகள் |
வேலூர் மார்க்கமாக | வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பதி, ஆம்பூர், திருப்பத்தூர், அரூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, தருமபுரி, ஒகேனக்கல், மேட்டூர், சேலம் செல்லும் பேருந்துகள் |
இராணிப்பேட்டை மார்க்கமாக | இராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு, தாம்பரம், அடையாறு, திருப்பதி, சோழிங்கநல்லூர் செல்லும் பேருந்துகள் |
வெம்பாக்கம் மார்க்கமாக | வெம்பாக்கம், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் |
செய்யாறு மார்க்கமாக | செய்யாறு, வந்தவாசி, மேல்மருவத்தூர், புதுச்சேரி, திருச்சி, நாகப்பட்டினம், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் |
கலவை மார்க்கமாக | கலவை, செய்யாறு, வாழைப்பந்தல் செல்லும் பேருந்துகள் |
அதுமட்டுமின்றி தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கி.மீ. அருகிலுள்ள புறநகரங்களை, நகரப்பேருந்து சேவை, ஆற்காடு, வேலூருடனும் மற்றும் ஆரணியுடனும் இணைக்கிறது.
இரயில் வசதிகள்
[தொகு]ஆற்காடு நகரில் இரயில் சேவை ஏதுமில்லை. எனினும், ஆற்காடு நகரின் வழியாக இரயில்களை இணைக்கும் வகையில் திண்டிவனம் - ஆரணி - நகரி இரயில் பாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.[5]. அதுமட்டுமின்றி, சென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம், சென்னை, பெங்களூர், திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள், இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன.
- விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, சீரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்மு தாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா, புது தில்லி, கோயம்புத்தூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர்
மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
விமான சேவை
[தொகு]இங்கிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும், சுமார் 250 கி.மீ. தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ. தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
- ↑ "Maps, Weather, and Airports for Arcot, India". fallingrain.com.
- ↑ "Arcot". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ |திண்டிவனம் - ஆரணி - நகரி ரயில்பாதை திட்டம் மண்டகதியில் நடைபெறும் திட்டப் பணி