தேன் (தாவரம்)
Appearance
தேன் பழம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | Malvales
|
குடும்பம்: | Muntingiaceae
|
பேரினம்: | Muntingia |
இனம்: | M. calabura
|
இருசொற் பெயரீடு | |
Muntingia calabura L |
தேன் பழம் (Muntingia calabura, ஆங்கிலம்:Jamaican cherry, Panama berry, Singapore cherry, Bajelly tree, Strawberry tree) என்பது முன்டிங்கியா இன பூக்கும் தாவரம் ஆகும்.[1] இதன் தாயகமாக தென் மெக்சிக்கோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இலங்கை பேச்சு வழக்கில் இது "ஜேம் பழம்" என அழைக்கப்படுகின்றது.
இது ஒரு 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம். இதன் இலை 2.5–15 செ.மீ. நீளமும் 1–6.5 செ.மீ அகலமும் உடையது. இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது 1–1.5 செ.மீ சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது. இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய (0.5 மி.மி) மஞ்சல் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்.