திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
| அருளாளர் இரண்டாம் அருள் சின்னப்பர் John Paul II |
|
|---|---|
| 264ஆம் திருத்தந்தை | |
![]() 1993-இல் இரண்டாம் அருள் சின்னப்பர் |
|
| ஆட்சி துவக்கம் | 16 அக்டோபர் 1978 |
| ஆட்சி முடிவு | 2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்) |
| முன்னிருந்தவர் | அருளப்பர் சின்னப்பர் I |
| பின்வந்தவர் | பதினாறாம் ஆசீர்வாதப்பர் |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | 1 நவம்பர் 1946 ஆடேம் ஸ்தேபான் சபியா-ஆல் |
| ஆயர்நிலை திருப்பொழிவு | 28 செப்டெம்பர் 1958 இகுனுஸ் பாசிக்-ஆல் |
| கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 26 ஜூன் 1967 |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | கரோல் யோசேப் வொய்த்திவா |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | மே 18, 1920 வடோவிஸ் போலந்து |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | ஏப்ரல் 2 2005 (அகவை 84) அப்போஸ்தலர் மாளிகை, வத்திக்கான் நகர் |
| குடியுரிமை | போலந்து நாட்டவர் |
| மதம் | கத்தோலிக்கம் |
| கையொப்பம் | |
| புனிதர் பட்டம் | |
| திருவிழா | 22 அக்டோபர் |
| ஏற்கும் சபை | கத்தோலிக்கம் |
| பகுப்பு | ஆயர் |
| முத்திப்பேறு பெற்ற பட்டம் | 1 மே 2011 புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் |
| முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தவர் | பதினாறாம் ஆசீர்வாதப்பர் |
| பாதுகாவல் | உலக இளையோர் நாள் |
அருளாளர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II),[1] (இலத்தீன்: Ioannes Paulus PP. II - இயோன்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை இருந்த திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520 க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும்.
இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்[2][3][4][5][6].
இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார்.[7]
தன் ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[8] தன் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் தெரிந்திருந்தன.[9]
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 1929ல் எமிலியா என்ற தனது தாயை இழந்தார். தனது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932ல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941ல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939ல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் கல் குவாரியிலும் பின்னர் சொல்வாய் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946ல் குருவானார். 1964ல் கிராக்கோவ் பேராயராகவும் 1967ல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.
1978ம் ஆண்டு அக்டோபர் 16 இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ம் நாள் காலமானார்.
இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள்[தொகு]
அருளாளர் பட்டம்[தொகு]
இவருக்கு புனிதர் பட்டம் தருவதற்காண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 19, டிசம்பர் - 2009 அன்று திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். மேலும் 1, மே - 2011- அன்று அருளாளர் பட்டம் வழங்கினார்[10][11].
அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு[தொகு]
-
இரண்டாம் அருள் சின்னப்பரின் அருளிக்கத்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் முத்தி செய்கிறார்
-
இரண்டாம் அருள் சின்னப்பரின் உடலின் முன் பதினாறாம் ஆசீர்வாதப்பர் செபிக்கிறார்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ Winfield, Nicole "Pope John Paul II moves a step closer to sainthood" Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011
- ↑ இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முனிருந்த பல திருத்தந்தயர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.
- ↑ Hollingshead, Iain (1 April 2006). "Whatever happened to ... canonising John Paul II?". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2006/apr/01/catholicism.religion. Retrieved 2009-01-01.
- ↑ Gertz, Steven (10 January 2003). "Christian History Corner: John Paul II's Canonisation Cannon". Christianity Today. பார்த்த நாள் 2009-01-01.
- ↑ Walsh, Sister Mary Ann. "Beatifications During Pope John Paul II’s Pontificate, 1988". From: ‘John Paul II: A Light for the World’, Popebook.com. United States Conference of Catholic Bishops, Inc.. பார்த்த நாள் 2009-01-01.
- ↑ "Table of the Canonisations during the Pontificate of His Holiness John Paul II". The Holy See. பார்த்த நாள் 2009-01-01.
- ↑ CBC News Online (April 2005). "Pope stared down Communism in homeland - and won". Religion News Service. http://www.cbc.ca/news/obit/pope/communism_homeland.html. Retrieved 2009-01-01.
- ↑ Maxwell-Stuart, P.G. (2006). Chronicle of the Popes: Trying to Come Full Circle. London: Thames & Hudson. p. 234. ISBN 978-0-500-28608-6.
- ↑ "Pope John Paul II". The Robinson Library (20 October 2008). பார்த்த நாள் 2009-01-01.
- ↑ Benedict XVI Will Beatify John Paul II On 1 May, The Vatican Information Service
- ↑ Pope John Paul II will be beatified in Rome this May, Irish Times.
