எஸ்பெராண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Esperanto
எஸ்பெராண்டோ
எஸ்பெராண்டோ
உருவாக்கப்பட்டது எல். எல். சாமன்ஹோஃப்
Users unknown (தாய்மொழியாக: 200 - 2000 (1996, மதிப்பிடு.);[1]
சரளமாக பேசும் மக்கள்: 100,000 - 2 மில்லியன் cited 1887)
நோக்கம்
constructed language
  • பன்னாட்டு உருவாக்கப்பட்ட மொழி
    • Esperanto
      எஸ்பெராண்டோ
மூலம் ஜெர்மானிய மொழிகள் மற்றும் ரோமானிய மொழிகளிலிருந்து சொல்லகராதி; சிலாவிய மொழிகளிலிருந்து உச்சரிப்பு
அலுவலக நிலை
Regulated by அகடெமியோ டெ எஸ்பெராண்டோ
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 eo
ISO 639-2 epo
ISO 639-3 epo


எஸ்பராண்டோ (இந்த ஒலிக்கோப்பு பற்றி Esperanto) உலகில் அதிகம் பேசப்படும் உருவாக்கப்பட்ட மொழியாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய உனுவா லிப்ரோ நூலில் எஸ்பெராண்டோ பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன. கற்றலுக்கு எளியதாக மொழி இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சாமன்ஹோஃப் இம்மொழியை தொடங்கியுள்ளார். இன்று உலகில் கிட்டத்தட்ட 1,000 மக்கள் இம்மொழியை தாய்மொழியாக பேசுகின்றனர். மதிப்பீட்டின் படி 100,000-2 மில்லியன் மக்களால் இம்மொழியை சரளமாக பேசமுடியும். ஆனால் உலகில் எங்கேயும் எஸ்பெராண்டோ ஆட்சி மொழியாக இல்லை.

1887 இல் டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப், எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் டாக்டர் எஸ்பராண்டோ என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு நம்பும் டாக்டர் என்று பொருள். நாடுகட்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. உருசியாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954 வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அகரவரிசை[தொகு]

Letter Pronunciation
a
b like bee (no aspiration)
c த்ஸ்
ĉ ச்
d like Denmark
e
f like fine
g like ago
ĝ ஜ்
h ஹ்
ĥ spanish j
i
j ய்
ĵ like measure
k க்
l ல்
m ம்
n ந்
o
p ப்
r ர்
s ஸ்
ŝ like she
t த்
u
ŭ like auto
v வ்
z like zero

சொற்தொகுதி[தொகு]

இம்மொழிக்கான சொற்தொகுதி சில நூற்றுக்கணக்கான வேர்ச்சொற்களைக் கொண்டது. இவற்றைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சொற்களை உருவாக்கிவிடலாம். எனினும், இதன் பெரும்பாலான சொற்களும் அவற்றின் வேர்ச்சொற்களும் ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை.

கல்வி[தொகு]

இம்மொழியினைக் கற்கும் பெரும்பான்மையினர் இணைய வழியிலும், உதவிப் புத்தகங்களின் வழியும் கற்றுவருகின்றனர். சில நாடுகளில் பள்ளிகளிலும் இம்மொழி கற்பிக்கப்படுகிறது.

பல ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் இம்மொழி கற்பதற்கு எளிதானது எனக் கூறப்படுகிறது.

பிரெஞ்சு மாணவர்கள் கற்ற வேற்று மொழிப் பாடங்களின் நேரத்தைக் கணக்கிட்டால், கீழ்க்கண்ட முடிவு கிட்டியதாம்.

   2000 மணி நேரம் இடாய்ச்சு= 1500 மணி நேரம் ஆங்கிலம் = 1000 மணி நேரம் இத்தாலியம் = 150 மணி நேரம் எசுப்பெராண்டோ படிப்பதற்கு ஆகும்.மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. எஸ்பராண்டோ (Esperanto a, b, c)
  2. 'Ĉu vi scias pri esperanto?' : ஓர் மொழித்தேடல்!

"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்பெராண்டோ&oldid=1641112" இருந்து மீள்விக்கப்பட்டது