உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கலம்பேட்டை

ஆள்கூறுகள்: 11°38′04″N 79°16′54″E / 11.634331°N 79.281678°E / 11.634331; 79.281678
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கலம்பேட்டை (பொலிவு)
மங்கலம்பேட்டை (பொலிவு)
அமைவிடம்: மங்கலம்பேட்டை (பொலிவு), தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°38′04″N 79°16′54″E / 11.634331°N 79.281678°E / 11.634331; 79.281678
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் விருத்தாச்சலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,278 (2011)

7,668/km2 (19,860/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1.21 சதுர கிலோமீட்டர்கள் (0.47 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/mangalampettai

மங்கலம்பேட்டை (ஆங்கிலம்:Mangalampet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

விருத்தாச்சலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்துள்ள இப்பேரூராட்சி, விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கிமீ தொலைவில் உள்ள பூவனூரில் உள்ளது. இதன் கிழக்கில் நெய்வேலி 30 கிமீ; மேற்கில் கள்ளக்குறிச்சி 30 கிமீ; வடக்கில் உளுந்தூர்பேட்டை 5 கிமீ மற்றும் தெற்கில் விருத்தாச்சலம் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

1.21 சகிமீ பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 90 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,108 வீடுகளும், 9,278 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.30% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 829 பெண்கள் வீதம் உள்ளனர். [5]

சிறப்புகள்

[தொகு]

இங்கு இரண்டு மசூதிகள் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கின்றன. மேலும் கோவிலானூர் மற்றும் கோணாங்குப்பம் ஆகிய அருகில் உள்ள கிராமங்களில் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்களும் இருக்கின்றன. ஊரின் எல்லையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மங்கல நாயகி அம்மன் கோவிலும், ஊரினுள் சிவன், விநாயகர் ம்ற்றும் சுப்பிரமணியர் திருக்கோவில்களும் உள்ளன

அருகில் உள்ள விவசாயம் சார்ந்த கிராமங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக இருப்பதினால் அதைச் சார்ந்த தொழில்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. முன் காலங்களில் துணிகள் நெசவும் சிறப்பாகச் செய்யபட்டு வந்தன. தற்பொழுது மிகச் சிறிய அளவில் மட்டும் நெசவுத் தொழில் செய்யப்பட்டு வருகின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. மங்கலம் பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
  5. Mangalampet Population Census 2011




"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கலம்பேட்டை&oldid=3849660" இலிருந்து மீள்விக்கப்பட்டது