நுரையீரல்மீன்
நுரையீரல்மீன்கள் புதைப்படிவ காலம்: | |
---|---|
Queensland Lungfish | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Dipnoi Müller, 1844
|
Orders | |
See text. |
நுரையீரல்மீன் (lungfish) நன்னீரில் வாழுகின்ற மீன் வகையாகும். எலும்புமீன்கள் (Osteichthyes) வகையின் நீருக்கு வெளியே சுவாசித்தல் போன்ற தோற்றநிலை சிறப்பியல்புகளையும், தசையாலான துடுப்பு (Sarcopterygii) கொண்டுள்ள மீன் வகையின் அமைப்புகளை ஒத்த சோணைத் துடுப்பையும் சிறப்பாக விருத்தியடைந்த அகவன்கூட்டையும் கொண்டது. இன்றைய காலப்பகுதியில் நுரையீரல்மீன்கள் ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அவுத்திரேலியா போன்ற பகுதிகளில் மட்டுமே வசிக்கின்றன. உயிரினத்தொகுதியின் குழுக்கள் அவைகளுக்கிடையே ஏற்பட்ட நிலவியல் வேறுபாட்டால் (மலை, நீர் தோன்றுதல்) வெவ்வேறு இடங்களுக்குப் பிரிக்கப்பட்டதால் மெசொசொயிக் காலத்து மீபெரும்கண்டமான கோண்டுவானாவில் மட்டுமே இவை பரவிக் காணப்பட்டன என அறியப்படுகின்றது. இது வாழும் நீர்நிலையில் நீர் வற்றிவிட்டால் மண்ணைத் தோண்டிக்கொண்டு உள்ளே சென்று வசிக்கும்; இந்த மீனால் மண்ணுக்குள் நான்கு ஆண்டு காலம் உறங்குநிலையில் உயிர்வாழ முடியும். தசையாலான துடுப்பு கொண்டுள்ள மீன் வகையில் இருந்தே நான்குகால் உயிரினங்கள் கூர்ப்படைந்தன என்று நம்பப்படுகின்றது. [1]
உடலமைப்பியல்
[தொகு]எல்லா வகை நுரையீரல் மீன்களும் தொடர்ச்சியான கசியிழையத்திலான முதுகுநாண்களுடன் நன்கு விருத்தியடைந்த அண்ணப் பல்வரிசைகளையும் கொண்டிருக்கும். நுரையீரல் மீன் ஒரு ஊனுண்ணியாகும். அடிப்படையான நுரையீரல்மீன் ஓரப்பற்களையும் எலும்பாலான மூளைக்கவசத்தையும் கொண்டிருக்கையில் பரிணாம வளர்ச்சியடைந்த தற்போதைய நுரையீரல் மீனில் ஓரத்து எலும்புகள் குறைவடைந்தும் மூளைக்கவசம் கசியிழையத்தாலும் ஆக்கப்பட்டிருக்கும். இனப்பெருக்கக் காலத்தின்போது தென் அமெரிக்க நுரையீரல் மீனில் ஒரு சோடி இறகுபோன்ற நீட்டங்கள் உருவாகும். இவை முட்டைகளைச் சுற்றி வாயுப்பரிமாற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது என நம்பப்படுகின்றது. [2]
நுரையீரல்
[தொகு]எல்லா நுரையீரல் மீன்களும் இரண்டு நுரையீரலைக் கொண்டிருக்கும், ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் இதற்கு விதிவிலக்கு, அவற்றில் ஒரு நுரையீரலே காணப்படும். நுரையீரல் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். நாற்காலி விலங்குகளின் நுரையீரலும் நுரையீரல்மீனின் நுரையீரலும் ஒத்தமைப்பு கொண்டதாக இருக்கின்றது. [3]'[4].
வாயுப்பரிமாற்றம்
[தொகு]வாழுகின்ற நுரையீரல் மீன்களுள் ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் மட்டுமே செதிலைப் (gill) பயன்படுத்திச் சுவாசிக்கும். ஏனையவற்றில் செதில் உருவச்செயலிழப்பு அடைந்திருக்கும், இது போதுமான வாயுப்பரிமாற்றத்துக்கு ஏற்றதாக இராது. செதிலைப் பயன்படுத்தி நீருக்குள் வாயுப்பரிமாற்றம் நிகழும்போது சாதாரண மீன்களைப்போலவே ஒட்சிசனை உள்ளெடுக்கின்றது. நீருக்கு வெளியே தனது வாயைப் பயன்படுத்திக் காற்றை உள்ளெடுத்து வெளிவிடுகின்றது.
சூழலியல்
[தொகு]ஆபிரிக்க தென் அமெரிக்க நுரையீரல் மீன்கள் பருவகாலத்துக்கு ஏற்ப தம்மைக் காத்துக் கொள்ளும் திறன் உடையவை. பருவகால மாற்றத்தின் போது, நன்னீர்த் தேக்கங்கள் வற்றும் போது இவை சேற்றுள் சென்றுவிடும், பின்னர் உலர்ந்த காலம் முழுவதும் வளை தோண்டி மண்ணுக்குள் வசிக்கும். நான்கு வருடங்கள் இவ்வாறு உறக்கநிலையில் வசிக்கும் வல்லமை கொண்டது.[5] இதன்போது நுரையீரல் மீனுடைய உடற்செயலியலில் மாற்றம் ஏற்படுகின்றது; இதன் வளர்சிதைமாற்ற வீதம் அறுபதில் ஒன்றாகக் குறைகின்றது, புரதக் கழிவுப்பொருட்கள் அமோனியாவில் இருந்து குறைந்த நச்சுத்தன்மை கொண்ட யூரியாவாக மாற்றப்படுகின்றது. (நீரில் இது நேரடியாக அமோனியாவையே கழிவுப்பொருளாக வெளியேற்றும்)
உசாத்துணைகள்
[தொகு]- ↑ http://en.wikipedia.org/wiki/Tiktaalik
- ↑ Piper, Ross (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press.
- ↑ "Chapter 24: The Respiratory System Evolution Atlas". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.
- ↑ "LAB 2 - GNATHOSTOME FORM & FUNCTION". Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2011-02-12.
- ↑ காணொளி, animal planet video link: http://animal.discovery.com/videos/fooled-by-nature-lungfish.html
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Dr Anne Kemps - Lungfish Information site
- Lungfish information site பரணிடப்பட்டது 2019-07-25 at the வந்தவழி இயந்திரம்
- Dipnoiformes at Palaeos.com பரணிடப்பட்டது 2006-03-13 at the வந்தவழி இயந்திரம்
- Dipnoi at the University of California Museum of Paleontology
- Tree of life illustration showing lungfish's relation to other organisms பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம்
- Lungfish video