விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 323: வரிசை 323:


நிர்வாகிகள் எவரெனும் [[பயனர்:Vatsan34]] க்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேற்கோள் இல்லை என்று மேற்கோள் உள்ள சில கட்டுரைகளிலும், குறுங்கட்டுரைகள் என்ற வார்ப்புருவை கட்டுரையின் கீழிருந்து வெட்டி கட்டுரையின் மேல் ஒட்டுவதுமாக இருக்கிறார். மிகவும் ஆர்வமாக உழைக்கும் பயனருக்கு வழிகாட்டியாக சிறந்த நிர்வாகி இருந்தால் விக்கிப்பீடியாவிற்கு நன்மை கிடைக்குமென நினைக்கிறேன். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 18:37, 31 மே 2013 (UTC)
நிர்வாகிகள் எவரெனும் [[பயனர்:Vatsan34]] க்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேற்கோள் இல்லை என்று மேற்கோள் உள்ள சில கட்டுரைகளிலும், குறுங்கட்டுரைகள் என்ற வார்ப்புருவை கட்டுரையின் கீழிருந்து வெட்டி கட்டுரையின் மேல் ஒட்டுவதுமாக இருக்கிறார். மிகவும் ஆர்வமாக உழைக்கும் பயனருக்கு வழிகாட்டியாக சிறந்த நிர்வாகி இருந்தால் விக்கிப்பீடியாவிற்கு நன்மை கிடைக்குமென நினைக்கிறேன். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 18:37, 31 மே 2013 (UTC)

Mathu Kasthuri rengan என்கிற பெயரில் பணியை ஆரம்பித்திருக்கிறேன்..
ஹம்ப்ரி போகர்ட், மற்றும் எக்ஸ்எம்எம் நியூட்டன் என்கிற இரண்டு கட்டுரைகளை தொட்டுவைத்திருகிறேன்.. எப்படி செய்திருக்கிறேன் என்று பார்வையிடவும் விமர்சனங்களும் அவசியம்..

தொடர்ந்த வழிகாட்டுதல் இருந்தால் ... தொடர வாய்ப்பாக இருக்கும்.
கட்டுரை போட்டிகளில் பங்குபெறுவது குறித்தும் கூறவும்...


== கட்டுரைப் பெயர் மாற்றம் ==
== கட்டுரைப் பெயர் மாற்றம் ==

03:31, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:HD
WP:HELP
தொகுப்பு

தொகுப்புகள்


1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8
எப்படி தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமாகக் கட்டுரை எழுதுவது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தலைப்பைச் சேர்" என்பதை அழுத்துங்கள். கேள்வியை எழுதுவதற்கான கட்டம் திறக்கும். அக் கட்டத்தில் உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

வார்ப்புரு உதவி

கோட்டார், Kottar இவ்விரு கட்டுரைகளிலுமுள்ள அமைவிட உள்ளீடு சரியாக இருந்தும் கோட்டார் கட்டுரையில் அமைவிடம் பிழையாகக் காட்டுகின்றது. வார்ப்புருவில் சிக்கல் உள்ளதுபோல் உள்ளது. முடிந்தவர்கள் திருத்தி உதவவும். நானும் முயல்கிறேன். --Anton (பேச்சு) 01:25, 1 மார்ச் 2013 (UTC)

எனக்கு இரண்டிலும் ஒரே இடத்தில் தானே காட்டுகிறது?--சோடாபாட்டில்உரையாடுக 01:42, 1 மார்ச் 2013 (UTC)

கட்டுரை எப்படி எழுதுவது,எதை பற்றி எழுதுவது?

புதிய பக்கங்கள் திறனாய்வு

https://en.wikipedia.org/wiki/Special:NewPagesFeed உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் செய்யலாமா? உதவி தேவை--இரவி (பேச்சு) 13:55, 2 மார்ச் 2013 (UTC)

மற்ற அரசியல் தகவல் இருக்கும் நம் வலையதளத்தில் குறவன் சமுதாயத்தின் தற்போது உள்ள நிலவரத்தை விளக்கீனேன். தவறூ இருந்தால் மன்னிக்கவும்.

மொழி மாற்றம் செய்வது குறித்த ஐயம்!

அய்யா வணக்கம்! விக்கிபீடியாவில் புதிதாகக் கட்டுரைகள் எழுதத் துவங்கியுள்ளேன்.என்னிடம் ஒரே தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை விக்கிபீடியாவில் உள்ளது.இவற்றை எவ்வாறு மொழி மாற்றத் தலைப்பினூடாக இணைப்பது என்பதை தயை கூர்ந்து விளக்கவும்.நன்றி! - பட்டுக்கோட்டை சத்யா

நீங்கள் எதைப்பற்றி கேட்கிறீர்கள் என்பது எனக்கு முழுமையாக விளங்கவில்லை. ஒருவேளை நீங்கள் கேட்பது தமிழ் விக்கிபீடியாவிலிருக்கும் ஒரு கட்டுரைக்கு, ஆங்கில விக்கிப்பீடியாவிலிருக்கும் அதே தலைப்பிலான கட்டுரைக்கும் விக்கி இடையிணைப்பை ஏற்படுத்துவது குறித்து எனில், [[en:<நீங்கள் கருதிய ஆங்கில விக்கி கட்டுரையின் பெயர்>]] என தமிழ் கட்டுரையின் கடைசியில் இடவும் (அ) [[ta:<நீங்கள் கருதிய தமிழ் விக்கி கட்டுரையின் பெயர்>]] என ஆங்கில கட்டுரையில் இடவும். கி. கார்த்திகேயன் (பேச்சு) 22:01, 3 மார்ச் 2013 (UTC)
Y ஆயிற்று மாற்றங்களை காணவும் --ஸ்ரீதர் (பேச்சு) 01:35, 4 மார்ச் 2013 (UTC)

நிலப்பட இணைப்பு வார்ப்புருக்களில் பிழை

பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து தகவற்பெட்டிகளை இணைக்கும்போது அங்கு தரப்பட்டுள்ள நிலப்படம் தமிழ் விக்கியில் இல்லையென்றால் இவ்வாறான பிழைச்செய்தி வருகிறது;

Expression error: Unrecognised punctuation character "[".

இதனை சரிசெய்ய அந்த விக்கியாலிருந்து நிலப்படத்தை, பிற இல்லாத படிமங்களைப் போல, தரவிறக்கினால் போதுமா அல்லது வேறேதும் திருத்த வேண்டுமா ? --மணியன் (பேச்சு) 04:01, 4 மார்ச் 2013 (UTC)

எந்தக் கட்டுரை என உதாரணம் தந்தால் நல்லது. நகரம் குறித்த கட்டுரையா?--Kanags \உரையாடுக 07:46, 4 மார்ச் 2013 (UTC)
இன்று நான் எழுதியுள்ள கெம்பெகவுடா அருங்காட்சியகம் காணவும். பிழை ஏற்பட்டதால் வார்ப்புருவில் location map தரவுகளை மறைத்துள்ளேன்.--மணியன் (பேச்சு) 08:59, 4 மார்ச் 2013 (UTC)
Y ஆயிற்று. வார்ப்புரு:Location map India Bengaluru ஐ மட்டும் இங்கு சேர்த்தால் போதுமானது. வரைபடம் பொதுவில் உள்ளது.--Kanags \உரையாடுக 09:15, 4 மார்ச் 2013 (UTC)
மிக்க நன்றி.--மணியன் (பேச்சு) 11:53, 4 மார்ச் 2013 (UTC)

குறவர் சமுதாயம்

அன்புடைய ரவி அவ்ர்களுக்கு, தாயுமானவர் எழுதி கொள்வது, தங்களின் ஆலோசனைப்படி குறவர் சமுதாயத்தின் வரலாறூ,மக்கள் தொகை, அவர்களீன் இன்றைய நிலை, இவர்களீன் தீர்வு தான் என்ன என்பதை உஙகள் உதவியால் விரைவில் எழுதுகிறேன்.அதே சமயம் அரசியல் கட்சிகள் பெயர்கள் என் டைப் செய்தால் ஒரு சில கட்சிகள் பெயர்கள் வருகின்றன, அதேபோல அந்த வரிசைஇல் வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னனி என்கிற கட்சி வருவற்க்கு எந்த பகுதிக்கு சென்றூ பதிவு செய்ய வேண்டும்.

தாயுமானவர், வள்ளி மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற கட்டுரை விக்கியில் இருந்தால்தான் வரும். அந்தக் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் ஊடகங்களில் வந்தாலே அது குறித்த கட்டுரை இடம்பெறும்.--மணியன் (பேச்சு) 08:59, 4 மார்ச் 2013 (UTC)
வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி என்ற தலைப்பில் கட்டுரை உருவாக்கி அதில் அதன் இறுதியில் [[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]] என்று சேர்த்தீர்கள் என்றால் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பக்கத்தில் இக்கட்சியும் பட்டியலிடப்படும். ஆனால், இக்கட்சி ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க அளவு குறிப்பிடத்தக்கமை உள்ளது என்று எண்ணும் அளவுக்கு கட்டுரையில் தகவல் இல்லை என்றால், நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, இக்கட்சியின் தோற்றம், வரலாறு, சமூகப் பங்களிப்பு, தேர்தல் பங்கெடுப்பு முதலிய விவரங்களைக் குறிப்பிட்டு விரிவாக எழுதுங்கள். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வந்திருந்தால் அதற்கு இணைப்பு கொடுத்து எழுதுங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், ஏற்கனவே உள்ள கட்சிகள் பற்றிய கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்று கவனியுங்கள். இது ஒரு புறம் இருக்க, சமூகவியல் சார்ந்த கட்டுரைகளிலும் உங்கள் பங்களிப்புகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, அம்பேத்கர் போன்ற கட்டுரைகளைத் தொகுத்து கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். தரமான தகவலைச் சேர்க்க ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்து எழுதலாம். அல்லது, உரிய தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி எழுதலாம். நன்றி--இரவி (பேச்சு) 15:21, 4 மார்ச் 2013 (UTC)
திரு.ரவி அவர்களுக்கு,தாயுமானவர் எழுதி கொள்வது,வணக்கம்.குறவர்கள் பற்றிய கட்டுரையில் எனது 

பங்களிப்பை தந்துள்ளேன். குறை இருந்தால் கூறவும், திருத்தி கொள்கிறேன்.நிறை இருந்தால் எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்.என் சமுதாய மக்கள் மட்டும்மல்ல அனைத்து மக்களும் படித்து அறிய வேண்டும் என்பதே என் விருப்பம்.கட்டுரை இன்னும் முழுமையடையவிலலை.விரைவில் முழு வடிவம் தந்து விடுகிறேன்.புதியவனான என்னை அரவணைத்து ஆலோசனை கூறியதற்கு மிக்க நன்றி.திரு.மணியன் அவர்களுக்கும் என் நன்றி.கண்டிப்பாக அம்பேத்கர் கட்டுரையை தொகுக்க முயற்சி செய்கிறேன் நன்றி

How to edit

How can i edit a page which is created by me earlier..--−முன்நிற்கும் கருத்து Nowsadam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்தப் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளின் பட்டியல் உள்ளது. இதன் படி நீங்கள் அஸ்சிராஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று என்ற கட்டுரையை மட்டும் தொடங்கியிருக்கிறீர்கள். இக்கட்டுரையைத் தெரிவு செய்து தொகுக்கத் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 06:57, 8 மார்ச் 2013 (UTC)

குறவர் கட்டுரையில் சில நீக்கம்

அன்புமிக்க நண்பர் திரு சூர்யா அவர்களுக்கு, குறவர் பற்றிய கட்டுரையில் சில பகுதிகளை தாங்கள் நீக்கம் செய்துள்ளீர்கள்.என்ன காரணம் என்பதை தாங்கள் கூறினால் எனக்கு பயனாக இருக்கும். முதன் முதலாக இந்த கட்டுரை அனைவருக்கும் என் மக்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மிகவும் சிரமப்பட்டு, என் முன்னோர்கள் சொன்னதை எழுதி இருந்தேன்.நீக்கியதிற்கு விளக்கம் கொடுத்தால் மிகவும் சந்தோசம் அடைவேன்.என் முதல் படைப்பினை முடித்து கொடுக்க எனக்கு ஊக்கம் கொடுத்த அன்பு நண்பர் திரு.இரவி அவர்களுக்கும்,என்னை பாராட்டி செயல் படுத்திய அன்பு நண்பர் திரு. மணியன் அவர்களுக்கும், முழு வடிவம் கொடுப்பதற்கு தலைப்புகளை சரி செய்து தந்த அன்பு நண்பர் திரு.சுப்ரமணி அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,நன்றி--தாயுமானவர் 09:37, 15 மார்ச் 2013 (UTC)

தாயுமானவர், நீங்கள் தந்துள்ள பகுதிகளில் ஒரு பகுதி மட்டுமே கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப அமைந்துள்ளது. அப்பகுதியை மட்டும் மீள்வித்திருக்கிறேன். மற்றும் கட்டுரைப் பக்கங்களில் உங்கள் கையொப்பங்களை இடாதீர்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:36, 15 மார்ச் 2013 (UTC
மன்னிக்கவும் தாயுமானவர். தாங்கள் ஒவ்வொரு வரிக்குக் கீழும் கையொப்பம் இட்டிருந்தீர்கள். அதுதான் கடைசி மாற்றமாகக் காட்டியது. எனவே, உங்களது அனைத்துத் தொகுப்புகளையும் முன்னிலையாக்கினேன். நீங்கள் எழுதியதை இணைத்துவிடுகிறேன். கட்டுரைகளில் கையெழுத்திட வேண்டாம். வரலாற்றுப் பக்கத்தில் (alt+shift+h) உங்களது பயனர் பெயர் இருக்கும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:37, 15 மார்ச் 2013 (UTC)

தொகுத்தல் உதவி

katturai ezhudha aasaiyaaga ulladhu. eppadi ezhuduvadhu?

வணக்கம், தமிழ் விக்கப்பீடியாவில் பங்களிக்க விருப்பத்துடன் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பேச்சுப்பக்கத்திலிருக்கும் வரவேற்பு செய்தியை படியுங்கள், அதிலிருக்கும் இணைப்புகளைப்(பக்கங்களை) படியுங்கள். அதிலேயே முழு வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும். அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:02, 21 மார்ச் 2013 (UTC)
தமிழில் எழுதுவதற்கு இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:11, 21 மார்ச் 2013 (UTC)

நான் விக்கிபீடியாவுக்கு புதியவன். கட்டுரைகளை தொகுக்க விரும்பிகிறேன். பயனர் பக்கம் ஊருவாக்க உதவ முடிமா?

Y ஆயிற்று. --ஸ்ரீதர் (பேச்சு) 16:33, 23 மார்ச் 2013 (UTC)

வார்ப்புரு

புதியவன். நான் கட்டுரைகளை உருவாக்கும் போது வார்ப்புருக்கைளை சேர்க்க விளைகிறேன்.தயவு செய்து யாரவது வற்புறு பற்றி விளக்கி எப்படி அமைப்பது என கூறவும்.நன்றி.--Aathavan jaffna (பேச்சு) 05:58, 24 மார்ச் 2013 (UTC)

ஒரே பொருளை பல பக்கங்களில் காட்ட விரும்பினால் வார்ப்புரூக்களைப் பயன்படுத்துகிறோம். இவை எந்த வடிவிலும் இருக்கலாம். தகவற்பெட்டி வார்ப்புருக்கள் இங்கு நிறைய உள்ளன. பிற வகையினையும் உருவாக்கிக் கொள்ளலாம். தற்போதைய தேவையை விளக்கினால் நானே வார்ப்புரு உருவாக்கித் தருவேன். -தமிழ்க்குரிசில்

வார்ப்புரு

நன்றி .நான் நல்ல பயணர் பக்கத்தை உருவாக நினைக்கிறேன்.உதவ முடியமா? --Aathavan jaffna (பேச்சு) 14:46, 24 மார்ச் 2013 (UTC)

சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்ப பெயர்களும் என்ற தலைப்பில் [1] கட்டுரை எழுதி இருக்கிறேன்.அதில் முதல் பத்தி சரியாக என்னால் தொகுக்க முடியவில்லை. மேலும் அடுத்தடுத்த பத்திகளின் தலைப்புகள் தடித்த எழத்துக்களில் வரவில்லை.

மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர்

அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர் தவறாக காட்டுகின்றது.(எ.கா) செந்துறை மாவட்ட ஆட்சியர் பெயர் = செந்தில்குமார் :சரியான பெயர் ரவிகுமார்

http://www.tn.gov.in/telephone/collectors.html
http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊர்கள் தகவல் பெட்டியில் மாவட்ட ஆட்சியர் பெயர் காட்டவில்லை வெற்று ஆக உள்ளது.--ஸ்ரீதர் (பேச்சு) 05:38, 9 ஏப்ரல் 2013 (UTC)
இவற்றை இற்றைப்படுத்த சிறந்தவழி விக்கித்தரவுகள் தான். தற்போதைய இரண்டாம் கட்ட விரிவுபடுத்தலில் தகவற்பெட்டிகளின் தரவுகள் மையப்படுத்தப் படுகின்றன. இதனை பயன்படுத்த நுட்பவியலாளர்கள் உதவி தேவை.

How will this work?

There are two ways to access the data:

  • Use a parser function like {{#property:p169}} in the wiki text of the article on Yahoo!. This will return “Marissa Mayer” as she is the chief executive officer of the company.
  • For more complicated things you can use Lua. The documentation for this is here.

--மணியன் (பேச்சு) 05:49, 9 ஏப்ரல் 2013 (UTC)

தகவல் பெட்டியில் பல ஆட்சியாளர்களின் பெயர்கள் ஆங்கிலத் தலைப்பெழுத்துடன் உள்ளன. இவற்றைத் திருத்த வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 14 ஏப்ரல் 2013 (UTC)

இப்போது உயரதிகாரிகள் பெயர்கள் இந்த வார்ப்புருவில் உள்ளன வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள். இதனைத் தொகுத்து இற்றைப் படுத்திக் கொள்ளுங்கள். (தமிழ்க்குரிசில் - தமிழ்த் தலைப்பெழுத்திடும் போது எம், எசு, கே. முறையில் தமிழ்ப்படுத்தவும், ம, ச, க என்று வேண்டாம். ஏனெனில் M என்பதன் விரிவாக்கம் ம, மா, மெ மே... ஏதேனும் ஒன்றாக இருக்கக் கூடும். எனவே விரிவாக்கம் தெரியாத நிலையில் தெரியாத நிலையில் ”எம்” போன்ற எழுத்துப்பெயர்ப்பு முறையைப் பயன்படுத்துங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 00:57, 19 ஏப்ரல் 2013 (UTC)

கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள்

வணக்கம் ,

கணினி மற்றும் கணினி துறைக்கான தமிழ்ச்சொற்கள் எங்கே இருகின்றன ? எனக்கு பல ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் தெரியவில்லை ..

உதரணமாக ,

ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் இருக்கும் பக்கம் ஒன்றை துவங்கி உதவி புரிந்தால் என்போன்ற ஆட்களுக்கு உதவியாக இருக்கும்

நன்றி சுரேஷ்

உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்கிறேன் சுரேஷ், எனக்கு தெரிந்த சில உதவிக் குறிப்புகள்:
1. விக்சனரி இணையத்தில் கிடைக்கும் தமிழ் அகராதி. இதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கிடைக்கும். பார்க்க சில வேற்று மொழிச் சொற்களும் உள்ளன.
2. தெரியாத சொற்களுக்கு ஆங்கிலச் சொல்லை எழுதுங்கள். எ.கா: நெட்வொர்க். ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் இதே போல கேள்வி கேளுங்கள். பிறர் தங்களுக்கு தெரிந்த சொற்களைப் பரிந்துரைப்பர். பொருந்தும் சொற்களை பயன்படுத்துவோம்.
3. நான் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அகராதியைப் பயன்படுத்துகிறேன். கூகுளில் கலைச்சொல் அகராதி எனத் தேடிப் பாருங்கள். கிடைக்கக் கூடும்.
4. விக்கிப்பீடியா:கலைச்சொல்_ஒத்தாசை/தொழில்நுட்பம் இந்த பக்கத்தில் தொழில்னுட்பம் தொடர்பான சொற்கள் சில உள்ளன.

நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:03, 15 ஏப்ரல் 2013 (UTC)

தொகுப்புக்கான ஆலோசனை

மரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:13, 18 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம்

தொகுப்புக்கான ஆலோசனை

மரு.பெ.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இதுதான் முதல். கட்டுரை எப்படி எழுத வேண்டும்? கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? என ஆலோசனை அல்லது கட்டுரை எழுத ஆலோசனை வேண்டுகிறேன்.--யோகி சிவம் 17:40, 18 ஏப்ரல் 2013 (UTC)

ஆலோசனை

நான் புதிதாக புகுபதிகை செய்ய வேண்டுமா? ஏற்கனவே செய்துள்ள YOKISHIVAM போதுமா?--182.156.22.243 15:54, 20 ஏப்ரல் 2013 (UTC)

ஏற்கனவே பதிவு செய்தது போதுமானது. அதையே பயன்படுத்துங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 16:01, 20 ஏப்ரல் 2013 (UTC)

ஆங்கில விக்கியில் உள்ள படிமம் பொதுவில் இல்லையே!

ஆங்கில விக்கியில் உள்ள படிமம் விக்கிபொதுவில் இல்லையே! என்ன செய்வது? File:PCT Globe.jpg இப்படிமம் தொடுதிரை என்ற கட்டுரைக்கு தேவையாகிறது. --இராஜ்குமார் (பேச்சு) 10:28, 21 ஏப்ரல் 2013 (UTC)

அதனை உங்கள் கணினிக்குத் தரவிறக்கி நியாயமான பயன்பாடு அடிப்படையில் மீண்டும் தமிழ் விக்கியில் தரவேற்றலாம்.--Kanags \உரையாடுக 10:57, 21 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி. சிறீதரன். நான் பதிவேற்றியுள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் கூறுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 11:06, 21 ஏப்ரல் 2013 (UTC)
அதே பெயரில் தரவேற்றுவது நல்லது. மூலத்தையும் குறிப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 11:44, 21 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி. சிறீதரன் --இராஜ்குமார் (பேச்சு) 17:18, 23 ஏப்ரல் 2013 (UTC)

calisthenic

calisthenic தமிழ் என்ன? யாராவது கூற இயலுமா? Why corals do calisthenics இக்கட்டுரையை தமிழில் எழுதும் பொழுது சிக்கலுற்றேன். --இராஜ்குமார் (பேச்சு) 17:18, 23 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ் விக்சனரியில் உள்ள callisthenic என்பதும் calisthenic என்பதும் ஒன்றா?? இரண்டு "l" உள்ளதே! --இராஜ்குமார் (பேச்சு) 17:21, 23 ஏப்ரல் 2013 (UTC)
"கட்டழகு பயிற்சிகள்" என்று அறிந்து கொண்டேன். --இராஜ்குமார் (பேச்சு) 20:00, 23 ஏப்ரல் 2013 (UTC)

நேர வலயம்

உள்ளூர் நேர வலயத்தை என் விருப்பத் தெரிவுகளில் எவ்வாறு சேர்ப்பது?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:53, 23 ஏப்ரல் 2013 (UTC)

"நாள் நேரம்" சென்று நேர வலயத்தில் ஆசியா/Kolkata தெரிவு செய்யவும்.--குறும்பன் (பேச்சு) 18:33, 23 ஏப்ரல் 2013 (UTC)

உதவி

அன்பு விக்கியர்களுக்கு வணக்கம்! கோபால் நாயக்கர் கட்டுரையை தொகுத்தேன், தொடர்ந்து தொகுக்க வேண்டும் உதவ மடியுமா?--யோகி சிவம் 03:50, 2 மே 2013 (UTC)

விருப்பாச்சி கோபால நாயக்கர் என்ற விரிவான கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் மேலதிக தகவல்களைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 04:16, 2 மே 2013 (UTC)[பதிலளி]
அன்பு கனகரத்தினம் அவர்களுக்கு வணக்கம்!விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டுரையில் மேலதிகத் தகவல்கள் எழுதியுள்ளேன்.ஆதாரங்களாக செப்புப் பட்டயம்,சத்திரப்பட்டி அரன்மனை, கோபால் நாயக்கரின் அரன்மனையின் சிதைந்த சுவர்களின் படங்கள் எனது கைபேசியில் உள்ளது.அதை எவ்வாறு பதிவேற்றுவது--யோகி சிவம் 14:11, 2 மே 2013 (UTC) \உரையாடுக
சிவம், படத்தைப் பதிவேற்றும் முன் உங்கள் சொந்தப் படம் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் பக்கத்தின் இடப்பக்கத்தில் உள்ள கருவிப் பெட்டியை சொடுக்கி, கோப்பைப் பதிவேற்று என்பதைச் சொடுக்குங்கள். (கைபேசியில் வேலை செய்யவில்லை என்றால், சிறப்பு:upload என்ற பக்கத்துக்கு செல்லுங்கள்.) படத்தை பதிவேற்றுங்கள். சில அடிப்படை வசதிகள் கொண்ட கைபேசிகளில், 300 கிலோபைட்டுகளை விட பெரிய படங்களை தரவேற்றுவது கடினமாக இருக்கலாம். பதிவேற்றிப் பாருங்கள். முடியவில்லை எனில், உங்கள் கைபேசியின் புளூடூத் வசதியின் மூலம், கணினி வழி தரவேற்றிப் பாருங்கள். தெளிவான படமாக இருந்தால் சிறப்பு :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:18, 2 மே 2013 (UTC)[பதிலளி]

இந்து சமய வலைவாசலை மேம்படுத்த உதவி வேண்டல்

இந்து சமய வலைவாசலை கடந்த சில நாட்களில் அமைத்துள்ளேன். சிறப்பு கட்டுரைகள், இந்து சமய கடவுள், சிறப்பு படம், உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றினை மேம்படுத்தவும், வலைவாசலில் இணைக்க வேண்டியவை பற்றியும் விக்கியன்பர்கள் எடுத்துரைக்க வேண்டி இங்கு விண்ணப்பம் செய்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:39, 2 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், ரவி கூறியது போல வாரம் ஒரு வலைவாசலை மேம்படுத்தி முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். உங்கள் வலைவாசலுக்குள் நானும் நுழையலாம் தானே?? :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:42, 2 மே 2013 (UTC)[பதிலளி]

தோழர் தமிழ்க்குரிசில் வணக்கம்!! மகாபாரதத்தில் சத்தியவதி,சாந்தனு,வீடுமர்,சகுனி, ஆகியோரை கவனித்தீர்களா?--யோகி சிவம் 14:55, 2 மே 2013 (UTC) \உரையாடுக

கண்டேன். மிக அருமையாக கதை விளக்கமும், கதைமாந்தரின் இயல்பும் தந்து அசத்தியிருக்கிறீர்கள். செம்மை, 👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 2 மே 2013 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில் நண்பரே, தங்களை அன்புடன் இந்து சமய வலைவாசலுக்கு வரவேற்கிறேன். மேலும் தாங்கள் இந்து சமயம் தேவைப்படும் கட்டுரைகளை உருவாக்கி முன்பே வலைவாசலை மேம்படுத்த தொடங்கிவிட்டீர்கள் என்பதையும் நினைவுகூற விரும்புகிறேன். நன்றி. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:37, 2 மே 2013 (UTC)[பதிலளி]
தங்களுக்கு உதவுவது என் பாக்கியம் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 2 மே 2013 (UTC)[பதிலளி]

இந்து சமயம்/தலைப்புகளை தமிழ்ப்படுத்த உதவி தேவை

ஆங்கில இந்து சமய வலைவாசலில் இடம்பெற்றுள்ள en:Portal:Hinduism/Topics என்பதனை தமிழில் இந்து சமய தலைப்புகள் என தமிழாக்கம் செய்துள்ளேன். அவற்றில் சிலவற்றிக்கு தமிழ்ப்படுத்த தெரியவில்லை. எனவே விக்கியன்பர்கள் உதவ வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:58, 3 மே 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு:சைவ சமயம்என்பதில் Category:Shaivism என பிற மொழி பகுப்பின் இணைப்பு தர முயற்சிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு செய்தி வருகிறது.

Site link [[tawiki:பகுப்பு:சைவ சமயம்]] already used by item [[Q9995472]].

ஆனால் ஆங்கில பகுப்பில் எந்தவொரு தமிழ்ப்பகுப்பினையும் காண இயலவில்லை. இந்த பிழையை திருத்தம் செய்து உதவ இயலுமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:46, 4 மே 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று சைவ சமயம் என்ற கட்டுரையுடன் ஆங்கிலப் பகுப்பும், பகுப்பு:சைவ சமயம் என்ற பக்கம் விக்கி பொது (காமன்ஸ்) சைவசமய பகுப்புப் பக்கத்திற்கான இணைப்புடனும் தரப்பட்டிருந்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 4 மே 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:55, 7 மே 2013 (UTC)[பதிலளி]

நான் உருவாக்கிய பக்கத்தில் எப்படி படத்தை பதிவேற்றம் செய்வது. மேலக்கால் முஹம்மது பிலால் என்ற பக்கத்தில் அவரது புகைப்படம் இடம் பெற செய்யுஙகள் நன்றி

விக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது?

விக்கியில் நான் எழுதிய கட்டுரை கூகிள் தேடு பொறியில் காட்டப்படவில்லை. என்ன செய்வது? ஒரு கட்டுரையை இன்று எழுதி முடித்தேன். கூகிளில் தேடிப்பார்க்கும்போது நான் எழுதிய கட்டுரை வரவில்லை. உள்ளடக்கம் செய்யப்படவில்லை என தோன்றுகிறது. என்ன செய்யலாம்?

வணக்கம் நண்பரே! நீங்கள் கட்டுரைகள் எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! எனக்குத் தெரிந்த வரையில், விக்கிப்பீடியாவில் எழுதிய கட்டுரைகள் மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் தெரியும். ஏதேனும் உதவி தேவையென்றால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:36, 6 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி தமிழ்க்குரிசில். காத்திருக்கிறேன். மேலும் பல கட்டுரைகள் எழுத ஆவலாய் உள்ளேன்.

தமிழ் ஓம் படிமம்

இந்து சமய வார்ப்புருக்கள் மற்றும் வலைவாசல் போன்றவற்றில் தேவநாகிரி எழுத்துமுறை ஓம் தற்போது இடப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்பில் தேவநாகிரி ஓம் கிடைப்பதாலும், உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படுவதாலும் நானும் இதனையே பயன்படுத்த ஆலோசிக்கிறேன். எனினும் சில நண்பர்கள் தமிழ் ஓம் என்பதை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அழகிய வடிவமைப்பில் தமிழ் ஓம் படிமத்தினை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. விக்கிப்பீடியாவில் உள்ள வடிவமைப்பாளர்கள் எவரேனும் தமிழ் ஓம் படிமத்தினை வடிவமைத்து தந்திட கோரிக்கை வைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 7 மே 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Anton (பேச்சு) 07:48, 7 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 08:14, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 09:41, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்நிறப்பின்னணியும் வடிவமைப்பும் அருமை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:54, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஆதவன் (பேச்சு) 13:12, 7 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:28, 8 மே 2013 (UTC)[பதிலளி]
அன்டன் அவர்களே, இரண்டாவது படம் வலைவாசலில் அமைக்க சிறப்பானதாக இருக்கிறது. முதல் மற்றும் இறுதி படிமத்தின் நிறத்தினை காவிப்பின்னனியில் வைத்து பார்க்கும்போது நன்கு தெரியும் படி அமைத்து தர வேண்டுகிறேன். இந்து தர்மம் வார்ப்புருவில் படிமங்களை பார்வைக்காக இணைத்திருக்கிறேன். அதனைக் கண்டு தாங்கள் நிறம் மாற்றிதர வேண்டுகிறேன். மிக விரைவில் கோரிக்கையை அழகாக நிறைவேற்றி தந்தமைக்கு நன்றிகள் பல. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:51, 7 மே 2013 (UTC)[பதிலளி]

முஹம்மது பிலால்

மேலக்கால் முஹம்மது பிலால் என்னும் பக்கத்தில் உள்ள புகைப்படத்தின் அளவை சிறிதாக்குவதற்கு உதவுஙகள். அல்லது செய்யுங்கள்.

நன்றி Y ஆயிற்று--Anton (பேச்சு) 11:04, 7 மே 2013 (UTC) நன்றி[பதிலளி]

தமிழிலக்கியத்தின் மீதான உலக அறிஞர்களின் பார்வை

தமிழிலக்கியம் குறித்து பிற மொழி அறிஞர்கள் (மொழியியலாளர்கள், இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள்...) தெரிவித்துள்ள கருத்துகள் குறைந்தது 7 தேவைப்படுகிறது. ஆதார மூலத்துடன் கிடைத்தால் இன்னமும் சிறப்பு! அந்தக் கருத்துகளை இங்கே இடுங்கள். இதனை வலைவாசல்:தமிழிலக்கியம் எனும் பக்கத்தில் காட்சிப்படுத்த எண்ணம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:49, 9 மே 2013 (UTC)[பதிலளி]

உதவி

அன்பு விக்கியர்!குதிரை ஆறு அணை கட்டுரைக்கு உரிய படம் படிம பட்டியலில் உள்ளது,கட்டுரையில் இணைத்தால் படம் காட்சியாக வில்லை படத்தை இணைக்கவும் நன்றியுடன்--[[Yokishivam|Yokishivam]] (பேச்சு) 04:13, 12 மே 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--ஸ்ரீதர் (பேச்சு) 04:59, 12 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி!ஸ்ரீதர்--Yokishivam (பேச்சு) 17:09, 12 மே 2013 (UTC)[பதிலளி]

சொல்லுங்களேன்!

விக்கியர்களுக்கு வணக்கம்! ஒரு கட்டுரையின் பேச்சு பக்கம் எப்படி உருவாக்குவது. (உ.ம்)அப்பத்தா பேச்சு பக்கத்தில் குறும்பன் அவர்களும்,தென்காசி சுப்பிரமணியும்,நானும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.--Yokishivam (பேச்சு) 11:23, 15 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கிக் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு உரையாடல் (பேச்சு) பக்கத்தையும் கொண்டிருக்கும். கட்டுரையின் மேல் பகுதியில் இரண்டாவது நிரலில் அப்பக்கம் இருக்கும். பேச்சுப் பக்கம் இதுவரை உருவாக்கப்படாமல் இருந்தால் அது சிவப்பு இணைப்பாக இருக்கும். அதனைத் தெரிவு செய்து நீங்கள் உங்கள் உரையாடலை ஆரம்பித்து சேமிக்கலாம். ஏற்கனவே உரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது நீல இணைப்பில் தெரியும். நீங்கள் உங்கள் உரையாடலைத் தொடரலாம். இதைத்தான் நீங்கள் கேட்டீர்களா?.--Kanags \உரையாடுக 11:46, 15 மே 2013 (UTC)[பதிலளி]

நான் கேட்டது இதுவல்ல எனக்கு பேச்சுப் பக்கம் நீல வண்ணத்தில் தெரிகிறது.ஆனால் பேச்சுப் பக்கத்தை சொடுக்கினால் அனைத்து பேச்சுக்களும் தெரிகிறது.ஆனால் அப்பத்தா கட்டுரையின் பேச்சுப் பக்கம் கீழ் கண்டவாறு உள்ளது.

பேச்சு:அப்பத்தா (இதில் கீழ்கண்டவை மட்டுமே உள்ளது)

ஆத்தா என்றும் பாட்டியா என்றும் சில இடங்களில் சொல்லுவார்கள். -குறும்பன்

பாட்டி என்பது பொதுப் பெயர். அப்பாயி என்றும் அழைப்பர். தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:11, 14 மே 2013 (UTC)[பதிலளி]

கொங்கு தமிழில் ஐயம்மா அப்பம்மா என்று அழைத்து கேட்டதில்லை, பாட்டியா என்று அப்பாவின் அம்மாவையும் பாட்டன் என்று அப்பாவின் அப்பாவையும் சில இடங்களில் (கொங்கு பகுதியில்) அழைப்பதை கேட்டுள்ளேன். ஆத்தா என்ற பயன்பாடு கோவை, பொள்ளாட்சி, காங்கேயம், திருப்பூர், கோபி பகுதிகளில் அதிகம் --குறும்பன் (பேச்சு) 17:17, 14 மே 2013 (UTC)[பதிலளி]

தென்னகத்தில் அப்பாச்சி (அப்பா வழி ஆச்சி), அம்மாச்சி தான். ஆயா என்று சில இடங்களில் அழைப்பதுண்டு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:42, 15 மே 2013 (UTC)[பதிலளி]

பெத்தவளை அம்மா என்றும், அம்மாவின் அம்மாவை ஆத்தா என்றும்,ஆத்தாளின் அம்மாவை மூத்த ஆத்தா என்றும் தாய் வழி மண உறவு கொள்பவர்கள் இன்றும் (தற்போதைய இராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி,ஆகிய மாவட்டங்களில்,இல்லத்துப்பிள்ளை,கொண்டையங் கோட்டை மறவர்,ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்)அழைப்பதுண்டு. கொங்குப் பகுதியில் அப்பாவின் அம்மாவை அப்பத்தா என்றும்,அப்பாயி என்றும்,அப்பாவின் அப்பாவை அப்பார் என்றும்,அப்பாரின் அப்பாவை அப்பார் அய்யன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:01, 15 மே 2013 (UTC)[பதிலளி]

அப்பார் அய்யனின் அப்பாவை பாட்டன் என்றும் அழைக்கிறார்கள்.--Yokishivam (பேச்சு) 10:04, 15 மே 2013 (UTC)[பதிலளி]

மேற்கண்ட உரையாடல் மட்டுமே உள்ளது,அதுதான் கேட்க தூண்டியது--Yokishivam (பேச்சு) 14:28, 15 மே 2013 (UTC)[பதிலளி]

rand கமெண்டில் பூஜ்ஜியத்தினை எவ்வாறு தவிர்ப்பது.

வலைவாசல்களின் கட்டுரைகளை ரேன்டமாக காட்டுவதற்கு {{வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/{{Rand|1+1|1}}}} என இட்டேன், இருப்பினும் பூஜ்ஜியத்தினை தவிர்க்க இயலவில்லை. வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/0 என்று வராமல் தடுத்து, வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/1 என்று வருவதற்கு உதவுங்கள் நண்பர்களே,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:05, 17 மே 2013 (UTC)[பதிலளி]

அஷ்டாவக்ர கீதை

அன்பு கனக்ஸ் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை 24.05.2013ல் தொகுக்க முயன்றபோது அப்பக்கம் 13 செப்டம்பர் 2009லேயே தங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை செய்தியைக் கண்டேன். திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியிட்டுள்ள அஷ்டாவக்ர கீதை படிக்க நேர்ந்தது,விக்கிப்பீடியா வாசகர்களுக்கு அத்வைத உபதேசம் குறித்து தேடுவோருக்கு பலனளிக்கும் என்பதால் அஷ்டாவக்ர கீதைகட்டுரையை தொகுக்க ஓர் ஆலோசனை சொல்லுங்கள்.--Yokishivam (பேச்சு) 01:30, 24 மே 2013 (UTC)[பதிலளி]

2009 இல் நீக்கப்பட்டது போதிய தகவல் இல்லாமையால். நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்.--203.13.3.92 02:45, 24 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி பார்வதிஸ்ரீ --Yokishivam (பேச்சு) 09:39, 24 மே 2013 (UTC)[பதிலளி]
அந்தப் பதில் நான் எழுதியது. ஐபி பதிந்து விட்டது.--Kanags \உரையாடுக 10:26, 24 மே 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்...... :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:52, 24 மே 2013 (UTC)[பதிலளி]

"நீங்கள் புதிதாக எழுதத் தொடங்குங்கள்" என்ற அன்பு கனக்ஸ் தங்களுக்கு நன்றி!--Yokishivam (பேச்சு) 16:54, 24 மே 2013 (UTC)[பதிலளி]

naveenam pattiya ennakkarukkalai telivupaduttuka?

iroppija naveena nadaka varalaru naveena ennakaru arankil edpadutiya mattam

சரபம் கட்டுரைகள்

  1. சரபா
  2. சரப மூர்த்தி (தெய்வச்சிலை)
  3. சரபமூர்த்தி (இலக்கியக் குறிப்புகள்)
  4. சரபம் (உருவ வேறுபாடுகள்)

சரபம் எனும் கற்பனை உயிரினத்திற்கும், சரபேசுவரர் என்ற சிவவடிவத்திற்கும் நான்கு கட்டுரைகள் அவசியமற்றது என்று எண்ணுகிறேன். இக்கட்டுரைகளை இரு கட்டுரையாகவோ, ஒரு கட்டுரையாகவே அமைத்து தர வேண்டுகிறேன். நன்றி,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:27, 25 மே 2013 (UTC)[பதிலளி]

இதில் இரு கட்டுரைகள் தெய்வத்தை குறிப்பதாகவும் (2,3), இரு கட்டுரைகள் (1,4) உயிரினத்தை குறிப்பதாகவும் உள்ளன. அதனால் சகோ கூறியது போல் இரு கட்டுரையாக்க கட்டுரை வரலாறு முன்னுரிமைப்படி 3ஐ 2இலும் 4ஐ 1இலும் இணைக்க வேண்டும். கட்டுரை எண் மூன்று நான்கு போன்றவற்றை ஒரு ஆசிரியரே எழுதியுள்ளதால் (மற்ற பங்களிப்புகள் சகோ செய்தது) அவரே வெட்டி ஒட்டி வழிமாற்று கொடுப்பது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:03, 27 மே 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி நண்பரே. செங்கை ஐயாவிடம் விண்ணப்பிக்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:19, 27 மே 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:47, 27 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 27 மே 2013 (UTC)[பதிலளி]

விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை

எனது விருப்பத்தேர்வுகளில் பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது. யாராவது தங்களது விருப்பத்தேர்வுகளை கவனித்து விட்டு சொல்லவும்.தெ.சுப்ரமணியனுக்கும் உள்ளது.யாராவது பார்க்கவும்.

என்ன பிரச்சினை?--Kanags \உரையாடுக 21:10, 28 மே 2013 (UTC)[பதிலளி]
பார்க்கவும்.படங்கள் காட்டுகிறது.:) Viruppangal2.JPG viruppathervukalil pirachchanai.jpeg


மீடியாவிக்கி மாறிகளை டிரான்ஸ்லேட் விக்கியில் ஒரு புதியவர் விக்கிப்ப்யன்பாடு தெரியாமல் லிடரலாக மொழிபெயர்த்ததால் வந்த சிக்கல். அவற்றை நானும் சங்கீர்த்தனும் மீளமைத்துள்ளோம். சில நாட்களாகும் சரியாக.--சோடாபாட்டில்உரையாடுக 04:01, 29 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி.சோடபோட்டில்

உதவி

அன்புடன் - விக்கியில் ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலோ, புதிதாக இணைக்கும் கட்டுரைகளிலோ புகைப்படங்களை எவ்வாறு இணைப்பது என்பது தெரியாமலிருக்கிறது. தெரியப்படுத்துங்கள்.

அன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:41, 31 மே 2013 (UTC)[பதிலளி]

உதவி

அன்பு விக்கியர்! மகாபாரதம் வலைவாசலில் கௌரவர் தலைப்பு கட்டுரையில் கௌரவர் பெயர் பட்டியலில் 59 முதல் 65 வரையிலான பெயர் (wikitable)லில் வரவில்லை சரி செய்யுங்கள்.--Yokishivam (பேச்சு) 04:47, 31 மே 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல்:மகாபாரதம் இன்னும் எழுதப்பெறவில்லை நண்பரே. தாங்கள் எதனை கூறுகின்றீர்கள்?. [[பக்கத்தின் பெயர்]] என இணைப்பினைத்தாருங்கள் திருத்திவிடலாம்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:06, 31 மே 2013 (UTC)[பதிலளி]
ஆம் மகாபாரத வலைவாசல் தொடுப்பு வைணவ வலைவாசலுக்கு செல்கிறது.--குறும்பன் (பேச்சு) 18:15, 31 மே 2013 (UTC)[பதிலளி]
திருத்தியிருக்கிறேன்,--Kanags \உரையாடுக 06:07, 31 மே 2013 (UTC)[பதிலளி]

பயனருக்கு வழிகாட்டல்

நிர்வாகிகள் எவரெனும் பயனர்:Vatsan34 க்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேற்கோள் இல்லை என்று மேற்கோள் உள்ள சில கட்டுரைகளிலும், குறுங்கட்டுரைகள் என்ற வார்ப்புருவை கட்டுரையின் கீழிருந்து வெட்டி கட்டுரையின் மேல் ஒட்டுவதுமாக இருக்கிறார். மிகவும் ஆர்வமாக உழைக்கும் பயனருக்கு வழிகாட்டியாக சிறந்த நிர்வாகி இருந்தால் விக்கிப்பீடியாவிற்கு நன்மை கிடைக்குமென நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:37, 31 மே 2013 (UTC)[பதிலளி]

Mathu Kasthuri rengan என்கிற பெயரில் பணியை ஆரம்பித்திருக்கிறேன்.. ஹம்ப்ரி போகர்ட், மற்றும் எக்ஸ்எம்எம் நியூட்டன் என்கிற இரண்டு கட்டுரைகளை தொட்டுவைத்திருகிறேன்.. எப்படி செய்திருக்கிறேன் என்று பார்வையிடவும் விமர்சனங்களும் அவசியம்..

தொடர்ந்த வழிகாட்டுதல் இருந்தால் ... தொடர வாய்ப்பாக இருக்கும். கட்டுரை போட்டிகளில் பங்குபெறுவது குறித்தும் கூறவும்...

கட்டுரைப் பெயர் மாற்றம்

மேல்காணும் கட்டுரைகளின் பெயர்களை மாற்றித் தருமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவற்றிக்கான காரணம் குறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விளக்கப்பெற்றுள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:12, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்கு மிக்க நன்றி கனகரத்தினம் அவர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

thendral

"thendral " ethai parttriya kuripukal vendum

தமிழ்த்தட்டச்சு

விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். கட்டுரைகள் எழுதுவதற்காக புகுபதிகை செய்தவுடன் வலது பக்க மேல் மூலையில் 'தமிழில் எழுத' என்று தோன்றும். அதைச் சொடுக்கியவுடன் 'செயலாக்குக' என்று வரும். ஆனால் இன்று அதைக் காணவில்லை. இதை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் கூறவும். அப்துல் றஸ்ஸாக்

தமிழ்த் தட்டச்சுக் கருவிக்கான இடத்தை மாற்றியுள்ளார்கள். புதிய முறையை அறிய விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பாருங்கள்.--இரவி (பேச்சு) 17:33, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம். நான் ஏற்காடு என்ற பெயரில் புதிதாகப் பதிவு செய்துள்ளேன். நேற்று ஏற்காடு பைசன் என்கிற காட்டுஎருமைகளும் சில நாய்களும் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப் பக்கத்தை சேமிக்கவும் என்ற பகுதியில் சேமிக்கவும் செய்தேன். இப்போது அதை எப்படித் திரும்பப் பார்ப்பது? விக்கிபீடியாவில் வந்துள்ளதா என்று எப்படிப் பார்ப்பது? தயவு செய்து விளக்கவும். இராசலட்சுமி

SANGA ILAKIYATHIL KUDIGAL/SAADHIGAL

வழிமாற்றுப் பக்கங்களை அறிவது குறித்து

வணக்கம், ஒரு விக்கிக் கட்டுரைக்கு வழிமாற்றுப் பக்கங்களாக உள்ள கட்டுரைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?. உதாரணமாக சிதம்பரம் நடராசர் கோயில் என்ற கட்டுரைக்கு எந்தெந்த பெயர்களில் வழிமாற்று உள்ளது என்பதை அறிய வேண்டும். எளிதான வழி இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:35, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

எந்தவொரு விக்கிப்பக்கத்தின் இடப்புறமுள்ள சட்டத்திலும் 'இப்பக்கத்தை இணைத்தவை' என்றோர் இணைப்பு இருக்கும். அதை அழுத்தினால் சிறப்பு:WhatLinksHere/சிதம்பரம் நடராசர் கோயில் என்பது போன்ற பக்கத்துக்குச் செல்லலாம். அங்கு வழிமாற்றுக்களை மட்டும் காட்டுமாறு தேர்வு செய்யும் வசதி உள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:42, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:27, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்

பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்பதிலுள்ள கட்டுரைகளை விரைந்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன். சிவத்தலங்கள் குறித்தான ஒழுங்கிற்கு தேவையுருகிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:21, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

உதவுங்கள் நண்பர்களே

நானும் 2 நாட்களாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் உதவுங்கள் எதுவும் புரியவில்லை எனக்கு இங்கு ஆவலும் திறமையும் இருக்கிறது என்னிடம் உதவுங்கள் தமிழ் வளர்ப்போம் வாருங்கள்

என்ன வகையான உதவி வேண்டும் நண்பரே. தயக்கமின்றி தங்களது கேள்விகளை முன்வையுங்கள்,.உதவ காத்திருக்கிறோம்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
முதலில் பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள். பயனர் கணக்கு வழியாக உங்களுடன் உரையாடுவதன் மூலம் சிறந்த முறையில் உங்களுக்கு உதவ முடியும்.--Kanags \உரையாடுக 09:03, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

திருக்குறள் பக்கத்தில் 1330 குறள்களும் முழுமையாக இல்லையே? அதுபோல அதன் பொருள்களும் இல்லையே?, என்ன காரணம், அதை முழுமை படுத்தலாமா என்னால் இயன்ற வரை?

வார்ப்புரு என்றால் என்ன?

the cities or towns names ends with patti

வண்ணம் - வர்ணம் - நிறம்

வண்ணம் என்பது நிறத்தையும் பாவகையையும் குறிக்கும். வர்ணம் கருநாடக இசை பாடத்தில் ஒரு படி. மேலும் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப் பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் படிமுறைகள் வர்ணம் என அழைக்கப்படுகிறன. நிறம் எனப் பொருள் தராது என நினைக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:58, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புருவிற்கு உதவி

எகிப்திய புதிய பேரரசு
ஜெபுசேயர்
இசுரயேல் - யூதேயா (தாவீதின் குலம்)
புது அசீரியர்
புது பாபிலோனியர்
மசிடோனியர்கள்
சசனிட் பேரரசு
அயூபிட் பேரரசு
மம்லுக் சுல்தான்
இசுரேல் மற்றும் யோர்தான்
கி.மு. 2000
கி.மு. 1500
கி.மு. 1000
கி.மு. 500
கி.பி. 0
கி.பி. 500
கி.பி. 1000
கி.பி. 1500
கி.பி. 2000
கி.பி. 2500

     யூதர்      இசுலாமியர்      கிறித்தவர்      யோர்தான் ஆக்கிரமிப்பு      பிறர்

{{Graphical Overview of Jerusalem's Historical Periods}} --Anton (பேச்சு) 15:45, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

படிமம் பிரச்சனை

வணக்கம் நண்பர்களே, நான் எடி மாபோ என்ற கட்டுரையை அதன் ஆங்கிலக்கட்டுரையிலிருந்து உருவாக்கினேன். ஆனால் ஆங்கிலக்கட்டுரையிலுள்ள EddieMaboportrait.gif என்ற கோப்பு (படிமம்) தமிழ் கட்டுரையில் கொண்டுவர இயலவில்லை. ஏன் என்று புரியவில்லை. இதை சரி செய்ய உதவ வேண்டுகிறேன். --Mugunth (பேச்சு) 14:44, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Anton (பேச்சு) 15:24, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]
இப்படிமம் பொதுவில் இல்லாததால், அதனை நேரடியாக இணைக்க முடியாது. குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் இணைக்கக்கூடியதாக நியாயமான பயன்பாடின் அடிப்படையில் இங்கு மீண்டும் தரவேற்றலாம்.--Kanags \உரையாடுக 21:14, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

subst:மேற்கோள் வார்ப்புரு வேலை செய்யவில்லை

வணக்கம், நமது விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பக்கத்தில் பயனர்களின் எளிதான செயல்முறைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள {{subst:மேற்கோள்}} என்பது வேலை செய்யவில்லை. அதனை உள்ளீடு செய்தால் ஆதாரங்கள் மேற்கோள் என்ற தலைப்பும், அதன் கீழ் மேற்கோள் தொகுப்பானும் இடம்பெறும். தற்போது {{subst:மேற்கோள்}} என்றே பதிகிறது. இது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. என்ன பிரட்சனை என்று கவனித்து மாற்றவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:14, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

பார்க்க வார்ப்புரு பேச்சு:மேற்கோள். மேற்கோள் வார்ப்புரு நீக்கப்பட்டுவிட்டது. எனவே இனி அந்த வார்ப்புரு வேலை செய்யாது.-சண்முகம்ப7 (பேச்சு) 09:17, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

Sir/ Madam, Good morning. In Wikipedia images, there were many photos of V.O.CHIDAMBARAM PILLAI. Now I can not find a single image. Can you help me? Thank you, Marmiraja

Tamil keyboard

could you tell me how to type in tamil?

you can learn that [2]

see this http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 08:42, 19 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் -என்றுதான் கோவில் தேவஸ்தானம் அறியப்படுகின்றது. சங்கரன்கோயில் என்னும் கட்டுரை அந்த நகரைப்பற்றியதாக அமையட்டு,ம். திருக்கோவிலைப்பற்றிய முழுச் செய்திகளையும் உள்ளடக்கிய கட்டுரையாக இது அமையும் உதவிடக் கோருகின்றோம். ஏனெனில், பல புதிய செய்திகள் கைவசம் உள்ளன. மேலும் அந்த ஊரைச் சார்ந்தவன் என்ற காரணத்தாலும் இக்கோரிக்கையை வைக்கின்றோம். அன்பு- -சீராசை சேதுபாலா, rssairam99@gmail.com

பதிவேற்றம்

புகைபடங்களை எப்படி பதிவேற்றம் செய்வதுநந்தினிகந்தசாமி (பேச்சு) 09:31, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி?, விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton (பேச்சு) 10:06, 2 செப்டம்பர் 2013 (UTC)

நான் ஒரு பெண் எழுத்தாளர். குழந்தைகளுக்காக சுமார் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன்.

விக்கிபீடியாவில்கட்டுரையில் படங்களை சேர்த்து பதிவு செய்வது எப்படி?--−முன்நிற்கும் கருத்து 117.208.233.168 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இவற்றை படியுங்கள்.

மேலும் உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:10, 15 செப்டம்பர் 2013 (UTC)

விககிபீடியாவின் கட்டுரையில் படங்களைச்சேர்ப்பது எப்படி?

ennaku neer veelchi patri katturai venum

பார்க்க: நீர்வீழ்ச்சி--Kanags \உரையாடுக 10:36, 30 செப்டம்பர் 2013 (UTC)

மொழிபெயர்க்க உதவி தேவை

வலைவாசல்:உள்ளடக்கங்கள்/வலைவாசல்கள் என்பதனை {{en:Portal:Contents/Portals}} ஆங்கில விக்கியில் உள்ளது போல மாற்றியமைக்க எண்ணியிருக்கிறேன். அதற்கு சில சொற்றொடர்களுக்கு மொழிபெயர்க்க உதவி தேவையுறுகிறது. உதவுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:48, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. People and self -சுயம் மற்றும் நபர்கள்?
  2. Natural and physical sciences - இயற்கை மற்றும் ? | இயற்கையும் பௌதீக விஞ்ஞானமும் ? --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:59, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. Mathematics and logic - தர்க்கம் மற்றும் கணிதம்?
நன்றி ஆதவன் அவர்களே, தற்போதைக்கு இவ்வாறே இயற்படுத்துகிறேன். மாற்றம் தேவையுற்றால் வருங்காலத்தில் மாற்றலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:00, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சில சந்தேகங்கள்

வணக்கம். தமிழிலக்கியத்தில் ஆர்வமுள்ள நான் சில கட்டுரைகளை விக்கிபீடியாவிற்கு வழங்க விரும்புகிறேன்.கட்டுரையின் தலைப்பு எப்படி இருக்க வேண்டும்? அளவு உண்டா? விளக்கப் படங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா? வானொலி, மாதஇதழ்கள், நாளிதழ்கல் ஆகியவற்றிற்கு எழுதியுள்ளேன். என்னைப் பற்றிய விவரங்களை அனுப்பவேண்டிமானால் எப்படி அனுப்புவது? எங்கள் படைப்புகள் தேர்வானால் அதற்கு ஏதாவது சன்மானம் தரப்படுமா?உடன் விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். என் மெயில் முகவரி பதிவுசெய்யப்பட்டுள்ளது. நன்றி புதுப்பயனர் தே.இந்திரகுமாரி -−முன்நிற்கும் கருத்து Indirakumari.d (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம்,

1.கட்டுரை எந்தவொரு தலைப்பைப் பற்றியும் இருக்கலாம். புகழ்ச்சி, சொந்தக் கருத்து, விமர்சனம் ஆகியவை இருக்கக் கூடாது. கவிதைகள், கதைகள் எழுதக் கூடாது. படங்கள் சேர்ப்பது கட்டாயமில்லை. தகவல்களுக்கான ஆதாரம் இருந்தால் தரலாம். கட்டுரைத் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். (ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ இருக்கக் கூடாது). கட்டுரை எந்த அளவிலும் இருக்கலாம். 2.இங்கே எழுதுபவர்கள் தன்னார்வலர்களே! பணம், சன்மானம் பெறுவதில்லை. எங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை எழுதுகிறோம். எங்களை உற்சாகப் படுத்த அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் நீங்கள் கலந்துகொண்டு, சிறப்பாக எழுதி பரிசு பெறலாம். :) 3. உங்களைப் பற்றி நீங்களே கட்டுரையாக எழுதக் கூடாது. நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கதை/கவிதை/இலக்கிய ஆய்வு ஆகியவற்றை எழுதியிருந்தால், உங்களைப் பற்றி மற்றவர் எழுதலாம். 4. நீங்கள் எழுதும் கட்டுரை உடனே சேமிக்கப்படும். உங்கள் கட்டுரையை மற்றவர் தேர்வு செய்ய வேண்டியதில்லை. பிழைகள் இருந்தால் திருத்துவோம். தவறானதாய் இருந்தால் நீக்கப்படலாம். ,வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம். உதவிகள் தேவை என்றாலும் கேட்கவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:57, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனா் டிபயா் எஸ்.பி.எம்.ேதவா்3 என்ப ைத மலாின் மறுபக்கம் (மாத இதழ்) என மாற்றவும்?--−முன்நிற்கும் கருத்து 112.79.47.66 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தேவர் அவர்களே, விளம்பரங்கள் போன்று எழுதப்படும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒருவர் வெளியிடும் இதழ் பற்றி அவரே கட்டுரை எழுதுவதும் ஒரு விளம்பரமாகவே கருதப்படும்.--Kanags \உரையாடுக 02:43, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சைவம் பக்கத்தில் எப்படி இனைவது(தலைப்பு)

சைவம் பக்கத்தில் இனைய ஆசையே அசைவத்திர்கு அறிகுறி ஆசையை அகற்றினால் சைவத்திர்கு இனையலாம் சைவம் ஒரு ஆன்மீகம் ஆன்மீகம் அருகில் செல்ல அசைவம் அழிய செல்லும் அசைவம் அழின்து விட்டால் ஆன்மீகம் தலைதூக்கும் ஆன்மீகம் தலைதூக்கினால் அனுதின தியானம் தேவை தியானம் மேற்கொல்ல உபவாசம் தேவை உபவாசம் இருப்பின் உயர்வான என்னங்கள் தோன்றும் அப்பொழுது அன்த சைவம் உங்கல் பக்கத்தில் இருக்கும்

malarin maruppakkam(maatha ethal)

vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri

malarin maruppakkam(maatha ethal)

vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri--112.79.44.94 13:31, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வனக்கம் விலக்கம் தருவீர் எஙலுடைய பைலிலிருன்து ௩கலெடுத்து இன்த பகுதியி செர்க்க முடியுமா

வனக்கம் நன்பரே நாங்கள் சைவம் பக்கத்தில் இனைவது எப்படி? என்ற கேல்விக்கு பதில் எழுதி இருன்தோம் அப்பகுதியை நாங்கல் எஙுகு சென்று பார்ப்பது

பெயரிடாத அன்பருக்கு, சைவம் பக்கத்தில் இணைவது எளிதே. இந்தப் பக்கத்தில் சென்று சேர்ந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கினால், எங்களால் உங்களுடன் உரையாடி உதவ முடியும். காப்புரிமை பாதிக்காத எந்தத் தகவல்களையும் சரியான பக்கத்தில் நகல் எடுத்துச் சேர்க்கலாம். பிறகு நீங்கள் கட்டுரைகளை எழுதி மகிழ்ச்சிக் கடலில் எங்களைத் தள்ளலாம், ஆலோசனைகள் வழங்கி செல்லமாக எங்கள் காதையும் கிள்ளலாம்--நீச்சல்காரன் (பேச்சு) 15:47, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தக்கதொரு விளக்கம் நீச்சல்காரன் அவர்களே. தங்களுடைய வாக்கிய அமைப்பு முறை அசத்தலாக உள்ளது. தொடருங்கள்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:24, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

therar tippu sulthan

== # தலைப்பு

  1. therar tippu sulthan

Infobox settlement

{{Infobox settlement}} இந்த வார்ப்புரு சரியாக இயங்குவதில் சிக்கல் உள்ளது. உதவ முடியுமா? தமிழீழம் இங்கு அது சரியாக இயங்கவில்லை. ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்தால் எல்லா விபரங்களும் காட்டபப்டுகிறது. ஆனால் அகலம் மாறுகிறது. --Tamil23 (பேச்சு) 06:59, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

n.s.krishnan comedy collection

விக்கிமீடியா பொது படிமங்கள்

கவனிக்க:

கொடி

இக்கொடியை நீக்கக் கோரியுள்ளேன். விரும்பியவர்கள் ஆதரவளிக்கலாம். நன்றி. Deletion requests/File:Bandera LTTE.png --Tamil23 (பேச்சு) 02:40, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விரிதாள் கட்டுரை

நான் விரிதாள் என்ற கட்டுரையைத் திருத்தி அமைக்கலாமென எண்ணியுள்ளேன். யாருடன் நான் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் முதலில் செய்த சிறு மாற்றங்கள் நீக்கப்பட்டு உள்ளன. நன்றி.−முன்நிற்கும் கருத்து ‎Paramesh1231 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் திருத்தி எழுதுங்கள். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. உங்கள் தொகுப்புகள் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப இல்லாவிடின் நீக்கப்படலாம். உங்கள் நீக்கப்பட்ட பழைய தொகுப்பை வேண்டுமானால் மீள்வித்துத் தருகிறேன். நீங்களே திருத்தி எழுதலாம்.--Kanags \உரையாடுக 00:57, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

particulate

particle = துகள் எனலாம். particulate என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 10:48, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பெயர்ச்சொல்லாகப் பயன்படும்பொழுது "matter in the form of minute separate particles" என்று விளக்குகின்றார்கள். எனவே தூளகம், தூள்பொருள் எனலாம். பெயரைடையாய் வரும் பொழுது "relating to or in the form of minute separate particles" இங்கே இடம்சார்ந்து தூளாக, தூள்வடிவில், தூளிய என்று கூறலாம். காற்றின் மாசுபாட்டில் தூள்கள் இருந்தால் அவற்றை தூள்வடிவ மாசுபாடு, தூள்விரவிய மாசுபாடு, தூள் மாசுபாடு என்று பலவிதமாகச் சொல்லலாம். நாம் நேரடியாக மொழி பெயர்க்காமல், கருத்து என்னவோ அதனைத் தமிழில் சொல்லலாம். தூள், துகள், பொடி, தூசு (தூசுப்பொடி) போன்ற பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ உள்ளவாறு அப்படியே இருக்க வேண்டும் என்றில்லை, அவை குறிக்கும் பொருளைத் துல்லியமாகத் தமிழில் குறிக்க வேண்டும் அவ்வளவே.--செல்வா (பேச்சு) 11:57, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி செல்வா. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 13:02, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்சனரியில் துகள்மம், துகள்மப் பொருள் எனத் தந்திருக்கிறார்கள். அதுவும் பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 21:08, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]