விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படிமம் உதவி[தொகு]

ஆங்கில விக்கிப் பக்கத்தில் உள்ள படிமம் ஒன்றை தமிழ் விக்கிப்பக்கத்தில் எவ்வாறு பயன்படுத்துவது? --வினோத் 07:16, 16 திசம்பர் 2011 (UTC)[பதில் அளி]

விக்கிமீடியா காமன்சில் இருந்தால், அப்பெயரைக் கொண்டு அப்படியே இங்கும் பயன்படுத்தலாம். இல்லையெனில் உங்கள் கணினியில் தரவிறக்கி, பின் இங்கு ஏற்ற வேண்டும் (ஏற்றும் போது மூல ஆங்கில விக்கிப் பக்கத்தைக் குறிப்பிடுங்கள்). எந்தப் படிமம் என்று சுட்டினால் சற்று ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 16 திசம்பர் 2011 (UTC)--சோடாபாட்டில்உரையாடுக 07:20, 16 திசம்பர் 2011 (UTC)[பதில் அளி]
நன்றி சோடாபாட்டில் அவர்களே. நீங்கள் குறிப்பிட்டபடியே ஆங்கிலப் விக்கிப் பக்கத்திலிருந்து இங்கு படிமத்தை இணைத்துள்ளேன்.--வினோத் 09:41, 16 திசம்பர் 2011 (UTC)[பதில் அளி]


நண்பர் சூர்யபிரகாசு அவர்களுக்கு, அன்பனின் வணக்கம். தாங்கள் வெளியிட்டிருந்த புகைப்படங்களை பார்த்தேன், மகிழ்ச்சி, நீண்ட நாட்களாக தங்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை, கட்சி, தொழிற்சங்க வேலைகள் காரணமாக காலம் ஒதுக்க இயலவில்லை, மன்னிக்கவும்,28 டிசம்பர் இரவு தங்களை மொபைலில் தொடர்பு கொண்டேன், தாங்கள் பதிலளிக்கவில்லை, நன்றி, நேரமிருப்பின் தொடர்பு கொள்ளவும்,(பயனரர் அன்பன்.(சேலம் நாராயணன்)

ஆங்கில பெரிய எழுத்துகளை எவ்வாறு குறிப்பது[தொகு]

சில நிறுவனங்களின் பெயர்கள் ஆங்கில பெரிய எழுத்துகளை மட்டும் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு எழுதுவது? ICICI என்பதை ஐசிஐசிஐ என்ற குறிப்பதா அல்ல ஐ சி ஐ சி ஐ என்ற குறிப்பதா

ஆங்கிலத்தில் உள்ளவாறு ஐசிஐசிஐ எனக் குறிப்பிடுவது சிறந்தது.--Kanags \உரையாடுக 21:22, 31 திசம்பர் 2011 (UTC)[பதில் அளி]

கோயில்களுக்கான தகவல் பெட்டியில் அம்மன் பெயர் வரவில்லை[தொகு]

 • நான் கோயில்களுக்கான தகவல் பெட்டியில் அம்மன்(ஆங்கில தகவல் பெட்டியில் primary_deity_Godess சரியாக வருகிறது) பெயரை சேர்த்தபோது வரவில்லையே.. யாராவது உதவமுடியுமா..? அந்த கட்டுரை இங்கேதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். மேலும் utsava_deity_God, utsava_deity_Godess, Direction_posture, Pushakarani போன்றவையும் நான் தேடியவரையில் எந்த கோயில் குறித்தான தமிழ் கட்டுரையிலும் இல்லை.. ஆனால் ஆங்கிலகட்டுரைகளில் இருக்கிறது(எ.கா Arunachaleswara Temple in english wiki).. :(. தமிழில் மூரத்தி(primary_deity_God), தீர்த்தம்(pushkarani, Temple tank), தலம், தல விருட்சம், மூலவர்(primary_deity_God), உற்சவர்(utsava_deity_God), தாயார்(primary_deity_Godess) போன்ற பல வார்த்தைகள் உள்ளன.. நிர்வாக அனுக்கம் உள்ளவர்கள் சரிசெய்ய வேண்டுகிறேன்.

கி. கார்த்திகேயன் 14:16, 9 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புரு:தகவற்சட்டம் கோயில் பக்கத்தை ஆங்கில் விக்கியில் உள்ளது போல இற்றைப்படுத்த வேண்டும். இதற்கு நிருவாக அணுக்கம் தேவையில்லை. நீங்களே கூட முயற்சிக்கலாம். இயலவில்லையெனில் நான் சில நாட்களுக்குப் பின் முயன்று பார்க்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:29, 9 சனவரி 2012 (UTC)[பதில் அளி]
நான் பலவாறு தேடிப்பார்த்தும், முயற்சித்தும் எப்படி இற்றைப்படுத்துவது என என்னால் அறிய முடியவில்லை :(... எனவே இற்றைப்படுத்தும் வேலையை உங்களிடமே தந்துவிடுகிறேன்... ;-).. யாருக்கேனும் எப்படி இற்றைப்படுத்துவது என்பது தெரியும் என்றாலோ, படித்து அறிந்துகொள்ள எதேனும் உதவி உரலி இருந்தாலோ எனக்கு தெரியப்படுத்தவும் நானே இற்றைப்படுத்த முயல்கிறேன். நன்றி. கி. கார்த்திகேயன் 05:34, 10 சனவரி 2012 (UTC)[பதில் அளி]
பரவாயில்லை. இது சற்று சிக்கலான விசயமே. en:Template:Infobox temple என்ற ஆங்கில பக்கத்தில் உள்ள நிரலைப் பார்த்து வார்ப்புரு:தகவற்சட்டம் கோயில் என்ற பக்கத்தை இற்றைப் படுத்த வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 06:03, 10 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புருக்களை இற்றைப்படுத்துவது எப்படி என அறிந்து கொண்டேன். வார்ப்புரு:தகவற்சட்டம் கோயில்-ல் சிற்சில திருத்தங்களையும் செய்துள்ளேன். பின்னர் நேரம் கிடைக்கும்போது முழுமையாக(பிழையிருக்கும் மற்ற வார்ப்புருக்களையும்) திருத்துகிறேன். நன்றி :-) கி. கார்த்திகேயன் 12:05, 13 சனவரி 2012 (UTC)[பதில் அளி]

நல்லது கார்த்தி :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:00, 13 சனவரி 2012 (UTC)[பதில் அளி]


வரலாற்று காலங்களுக்கு தமிழ் பெயர்[தொகு]

இங்கு - விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/சமூக அறிவியல் - நகர்த்தப்பட்டுள்ளது

இதழ் அட்டைப்பட காப்புரிமை[தொகு]

இதழ் ஒன்றின் அட்டைப்படத்தில் ஒளிப்படத்தை விக்கி பொதுமத்தில் ஏற்றியுள்ளேன். இதற்கு நான் அளிப்புரிமை வழங்கி உள்ளேன். இது பொருத்தமா ??--Natkeeran 03:37, 8 பெப்ரவரி 2012 (UTC)[பதில் அளி]

அட்டைப்பட வடிவமைப்பாளர் / இதழ் வெளியாட்டாளர் நீங்கள் இல்லையென்றால் “சொந்த ஆக்கம்” ஆகாது. (ஒளிவருடியவர்/எண்மியப்படுத்தியவர் நீங்கள் எனினும்). ஒளிவருடியது/புகைப்படம் மட்டும் நீங்கள் என்றால் நியாயப் பயன்பாடு அடிப்படையில் விக்கிப்பீடியாவில் தான் ஏற்ற இயலும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:32, 8 பெப்ரவரி 2012 (UTC)[பதில் அளி]

விக்கிமேற்கோள் css[தொகு]

இங்குள்ள வார்ப்புருகளைப் படியெடுத்து விக்கிமேற்கோளில் இடும்போது வார்ப்புருப் பெட்டிகள் வடிவமைப்பு மாறி வருகிறது. இது தொடர்பாக எந்த css கோப்பைப் படியெடுத்து எங்கு இட வேண்டும்? நன்றி--இரவி 10:09, 15 பெப்ரவரி 2012 (UTC)[பதில் அளி]

சுண்ணாம்புக் கல்[தொகு]

Limestone என்பது சுண்ணாம்புக் கல் என LIFCO அகராதியில் காணக்கிடைத்தது. இது சரியானதா? --Anton (பேச்சு) 09:42, 23 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

சரியாக இருக்குமென்றே நினைக்கின்றேன். Limestone என்பதற்குத் தமிழ் விக்சனரியில் சுண்ணாம்புக் கல், சுண்ணப் பாறை ஆகிய சொற்களும் கூகுள் அகராதியில் சுண்ணாம்புக் கல் என்ற சொல்லும் தமிழியில் சுண்ணாம்புக் கல் என்ற சொல்லும் ஐரோப்பிய அகராதியில் சுண்ணாம்புக் கல், சுண்ணப் பாறை ஆகிய சொற்களும் அகராதியில் சுண்ணாம்புக் கல் என்ற சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. --மதனாஹரன் (பேச்சு) 09:53, 23 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]
மிக்க நன்றி மதனாஹரன்! இச் சொல்லையே பாவிக்கிறேன். --Anton (பேச்சு) 10:04, 23 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புரு[தொகு]

மேலேயுள்ள வார்ப்புரு பேச்சு பக்கங்களிற்கான உங்கள் உதவி எதிர்பார்க்கப்படுகின்றன. --Anton (பேச்சு) 19:45, 23 மார்ச் 2012 (UTC)[பதில் அளி]

மின்னஞ்சல்[தொகு]

நாம் உருவாக்கிய பக்கத்தை யாரவது மாற்றம் செய்தால் அதை பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா.−முன்நிற்கும் கருத்து Sathish434 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இது வரை இல்லை. உங்கள் வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்கெடுப்பு ஆலமரத்தடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. --மதனாஹரன் (பேச்சு) 11:00, 10 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

படிமத்துக்கு பதிப்புரிமை[தொகு]

N.Varatharajan.jpg படிமம்:N.Varatharajan.jpg இந்தப் படிமத்துக்கு பதிப்புரிமை தொடர்பான விவரங்கள் அனுமதி தெரியாது நியாயபயன்பாடு கருதி என். வரதராஜன் தகவல் பெட்டியில் இணைத்துள்ளேன் கவனிக்க.--ஸ்ரீதர் (பேச்சு) 04:45, 11 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

கட்டற்ற படிமங்களைப் பெற முடியாது என்பதை இணைத்துள்ளேன். என். வரதராஜன் என்ற கட்டுரையில் மாத்திரம் இப்படிமத்தைப் பயன்படுத்தலாம். --மதனாஹரன் (பேச்சு) 09:15, 11 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

Russian SFSR[தொகு]

 • Russian Soviet Federative Socialist Republic என்பதற்கான சரியான தமிழ் என்ன?
Российская Советская Федеративная Социалистическая Республика - உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு எனலாமா?--Kanags \உரையாடுக 02:56, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
 • உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு இந்த வார்ப்புரு தமிழ் விக்கியில் இயங்கவில்லை. இதை மீண்டும் இங்கு உருவாக்க வேண்டுமா?

--Anton (பேச்சு) 01:26, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

ஆமாம், இதே பெயரில் இங்கு வார்ப்புரு ஒன்றை உருவாக்க வேண்டும். உங்களுக்காக இதனை உருவாக்கியிருக்கிறேன். Russian SFSR இற்கு சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்துவிட்டு வார்ப்புருவில் சரியான சொல்லைச் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 02:56, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
Face-wink.svg நன்றி!

உருசிய சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே, சோவியத் ஒன்றியம் என்ற கட்டுரையில் இதை ஒத்த பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 03:03, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

 • நன்றி! உருசிய சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசு சரியாகத் தெரிகிறது. --Anton (பேச்சு) 05:27, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
உருசிய சோவியத் சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு என்ற பெயரும் நன்றாக உள்ளது. அதனையே பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 06:50, 12 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

வல்லுனர்கள் உதவுங்கள்[தொகு]

இந்த வழுவிற்கு என்ன காரணம்? பயனர் பங்களிப்புகளில் உள்ள தொகுப்பு எண்ணிக்கை 1 இணைப்பு வழு காட்டுகிறது. http://toolserver.org/~tparis/pcount/index.php?name=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&lang=ta&wiki=wikipedia

எவரேனும் உதவவும். --எஸ்ஸார் (பேச்சு) 16:36, 16 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

தமிழ் பயனர் பெயர்களுக்கு மட்டும்தான் இவ்வாறு வருகிறது.. ஆங்கில பயனர் பெயர்களுக்கு சரியாக வருகிறது. இது பற்றி w:en:user:TParis இடம் கேட்டிருக்கிறேன்.. --shanmugam (பேச்சு) 18:02, 16 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
ஒருங்குறி ஏற்பு இக்கருவியில் இல்லை. tparis க்கு முன் இதை எழுதி பராமரித்து வந்தவர் soxred அவரது வழுப் பட்டியலில் ஒருங்குறி ஏறுபு வேண்டுமென பலர் பதிந்திருந்தனர். --சோடாபாட்டில்உரையாடுக 03:43, 17 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

எனக்கும் இதே சிக்கல் தான். மற்றைய தொகுப்பு எண்ணிக்கைக் கருவி சரியான தரவுகளைக் காட்டுவதில்லை... --மதனாஹரன் (பேச்சு) 13:25, 17 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

tparisன் பதில்--shanmugam (பேச்சு) 15:48, 17 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

@shanmugam: நன்றி! --மதனாஹரன் (பேச்சு) 16:00, 17 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

திருத்தம் வேண்டி...[தொகு]

மாகாபாரதம் என்ற பிரிவில் சாலியன் என்ற த்லைப்பில் கர்ணனு என்பதிற்க்குப் பதிலாக கண்ணன் என்றுள்ளது.எப்படித்திருத்துவது?−முன்நிற்கும் கருத்து Chandrasekarankavin (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

 • கண்ணன் என்பது கிருஷ்ணனைக் குறிக்கும்.
 • கன்னன் என்பதுதான் கர்ணனைக் குறிக்கும் -விக்சனரியில் கர்ணன் என்பதற்கான விளக்கத்தினைப் பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 16:55, 22 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]
பிழை திருத்தப்பட்டது. துப்புரவுப் பணி மேற்கொள்வோர் சமய நம்பிக்கை உள்ளோர் மனம் நோகாது பங்களிக்க கவனம் கொள்ள வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 03:09, 23 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

திருத்தம் வேண்டி...[தொகு]

மகாபாரதம் என்ற பிரிவில் சாலியன் என்ற தலைப்பில் கண்ணன் என்று தான் வன்துள்ளது.கன்னன் என்ற பெயரில் வரவில்லை.கிருட்டிணன் என்ற பொருள் தருவது அபத்தமாக இருக்கிறது.--Chandrasekarankavin (பேச்சு) 17:07, 22 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

தேனீ.எம்.சுப்பிரமணியன் அவர்களுக்கு ....[தொகு]

தமிழக அரசின் விருது பெற்ற உழைப்பின் சிகரத்திற்க்கு என் வாழ்த்துக்க்ள்...--Chandrasekarankavin (பேச்சு) 17:15, 22 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

பயனர் பேச்சு:Theni.M.Subramani இந்த பக்கத்தில் நீங்கள் அவருக்கு நேரிடையாக வாழ்த்துகளை தெரிவிக்கலாம்--shanmugam (பேச்சு) 17:53, 22 ஏப்ரல் 2012 (UTC)[பதில் அளி]

ஈழத்து கவிஞர்கள் பக்கத்தில் மேலும் ஒருவருடைய விபரத்ததை எப்படி சேர்ப்பது.−முன்நிற்கும் கருத்து 223.224.8.38 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் பகுப்பைப் பற்றிக் கேட்கிறீர்கள் என நினைக்கின்றேன். அதில் சேர்ப்பதற்கு, முதலில் அவ்வீழத்துக் கவிஞர் பற்றிய கட்டுரையை உருவாக்க வேண்டும். அதற்காக இந்தப் பக்கத்தில் உள்ள பெட்டியில் தலைப்பை இட்டுக் கட்டுரையைத் தொடங்கவும் என்பதில் சொடுக்கவும். ஈழத்துக் கவிஞர் பற்றிய கட்டுரையின் இறுதியில் [[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]] என்பதையும் இணைத்து விட்டால் நீங்கள் குறிப்பிட்ட பகுப்பில் அவருடைய பெயரும் சேர்ந்து விடும். உங்களுக்கென ஒரு பயனர் கணக்கை உருவாக்கினால் உங்களைத் தொடர்பு கொள்வது இலகுவாக இருக்குமே! --மதனாகரன் (பேச்சு) 11:09, 5 மே 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புரு உதவி[தொகு]

பார்க்க:வார்ப்புரு:ஒலிம்பிக் போட்டிகள்..இதில் bodyclass = hlist என்பது வேலை செய்யவில்லை. மீடியாவிக்கியில் ஏதேனும் செய்ய முடியுமா ? மற்ற இந்திய மொழிகளிலும் இது வேலை செய்யவில்லை; இந்த வார்ப்புருவில் அவர்கள் (இந்தி, வங்காளம்,மராட்டி) {{.}} பயன்படுத்தி உருவாக்கி உள்ளனர். நானும் அவ்வாறு செய்யும் முன்னர் இந்த கிளாசை உருவாக்க முடியுமா என்று அறிய ஆவல்.--மணியன் (பேச்சு) 03:40, 14 மே 2012 (UTC)[பதில் அளி]

பார்க்க [1].. ஏற்கனவே சோடாபாட்டிலிடம் கேட்டிருந்தேன். அது சிக்கலான விஷயம், எனவே நேரம் கிடைக்கும் போது சரி செய்வதாக கூறியுள்ளார்.--shanmugam (பேச்சு) 05:52, 14 மே 2012 (UTC)[பதில் அளி]
மேலும் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பக்கத்தில் {{Reflist|2}} அல்லது {Reflist|30em}} வேலை செய்யவில்லை..ஏன் ?--மணியன் (பேச்சு) 03:48, 14 மே 2012 (UTC)[பதில் அளி]

எவ்வாறு வர வேண்டும் (எடுத்துக்காட்டுப் பக்கம்) எனக் கூறினீர்கள் என்றால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும். --மதனாகரன் (பேச்சு) 13:18, 14 மே 2012 (UTC)[பதில் அளி]

மேற்கோள்கள் இரண்டு பத்திகளாக வரவேண்டும். தற்போது தமிழ் விக்கிப் பக்கங்களைக் காணும்போது அனைத்து பக்கங்களிலிலுமே (கோலாலம்பூர் - 3 பத்திகளாக இருந்தது) இப்போது வேலை செய்யவில்லை.--மணியன் (பேச்சு) 15:33, 14 மே 2012 (UTC)[பதில் அளி]


கட்டுரையில் புகைப்படம் சேர்ப்பது எப்படி[தொகு]

நான் விக்கிப்பீடியாவிற்கும் புதிதாக வந்துள்ளேன். கட்டுரையில் புகைப்படம் சேர்ப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை.உதவவும். --Gopikumar.ila (பேச்சு) 12:36, 21 மே 2012 (UTC)[பதில் அளி]

பொதுவாக ஒரு படிமத்தை இணைப்பதற்கு [[படிமம்:<படிமத்தின் பெயர்>|thumb|<விளக்கம்>]] எனும் முறையைப் பயன்படுத்தலாம். இப்பக்கத்தில் உதவிக் குறிப்புகள் நிறையவே உள்ளன. --மதனாகரன் (பேச்சு) 13:23, 21 மே 2012 (UTC)[பதில் அளி]

ஒத்தகட்டுரைத் தலைப்புகள்[தொகு]

en:insurgency மற்றும் en:rebellion என்ற நூலிழை வேறுபாடுகள் கொண்ட கட்டுரைகளுக்கு தமிழில் எப்படி பெயர் வைக்கலாம்? எதேனும் நடைமுறையுள்ளதா? எது கிளர்ச்சி என்ற வரைமுறைகளுக்கு வரும்?--நீச்சல்காரன் (பேச்சு) 04:11, 22 மே 2012 (UTC)[பதில் அளி]

அதிகமாக யோசிக்காது எனக்குத் தோன்றுவன: insurgency=கிளர்ச்சி, rebellion=எழுச்சி--மணியன் (பேச்சு) 11:25, 22 மே 2012 (UTC)[பதில் அளி]

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) என்று பெயரிடப்பட்டுள்ளதே. கிளர்ச்சி என்பதை விட எழுச்சியே பொருத்தமாக இருக்கும். 1857 Indian Uprising என்ற பதத்தையும் கருத்திற்கொள்ள வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 15:00, 22 மே 2012 (UTC)[பதில் அளி]

Sepoy Mutiny என்பது தமிழில் சிப்பாய்க் கிளர்ச்சி என்றழைக்கப்படுகிறது. அப்படியானால், Insurgencyஐயும் Mutinyஐயும் எவ்வாறு வேறுபடுத்துவது? --மதனாகரன் (பேச்சு) 15:02, 22 மே 2012 (UTC)[பதில் அளி]

Chembox எதிர் Taxobox[தொகு]

பிரிசிட்டேன் வேதியியல் கட்டுரையில் உள்ளது போல, கறையான் போன்ற உயிரியல் அட்டவணையையும் ({{Chembox எதிர் {{{{Taxobox) மாற்றினால் சிறப்பாகும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

{{Chembox vs. Taxobox}} என்ற வார்ப்புருவை உருவாக்க விரும்புகிறீர்களா? அல்லது வார்ப்புருவில் மேலதிக தகவல்களைச் சேர்க்க விருப்புகிறீர்களா? --Anton (பேச்சு) 13:08, 29 மே 2012 (UTC)[பதில் அளி]
பெருங்குடும்பம்: Mastotermitidae என்ற பகுதியைக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். இவ்வாறுதான் வரவேண்டுமா எனப்பாருங்கள். --Anton (பேச்சு) 13:37, 29 மே 2012 (UTC)[பதில் அளி]
உயிரியலில் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று சிலவருடத்திற்குமுன், எழுதத் துவங்கிய கட்டுரை கறையான். அதனை அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் அதை அடிப்படையாகக் கொண்டு, பல கட்டுரைகள் எழுத முற்படுகிறேன். அதற்காக,இப்பொழுது கறையானைக் கையாள்கிறேன். உயிரியல் வகைப்பாட்டு வார்ப்புருவுக்கு (Taxoboxக்கு), பல நுட்பங்கள் தேவைப்படுகிறது. முதலில் தேவைப்படுவது, இந்த [http://fr.wikipedia.org/wiki/Isoptera

அட்டவணை] போன்ற தோற்றம். இதனையே குறிப்பிட்டேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

அந்த அட்டவணை வார்ப்புருவின் உதவியின்றியே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கறையான் கட்டுரையை எளிமைப்படுத்தியுள்ளேன். {{Taxobox}}யில் போதுமான தகவல்கள் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு உயிரியல் பதங்கள் பற்றிய தெளிவு மற்றும் வகைப்படுத்தல் தெரியாததால் மேற்கொண்டு வார்ப்புருவை தொகுக்க முடியவில்லை. வார்ப்புரு:Taxobox இல் பல பகுதிகள் வெற்றுப் பகுதிகளாகவும் பாவிக்கப்படாமலும் உள்ளன (எ-கா binomial2, trinomial2, etc) இவை பயனுள்ளவையென்றால் தொகுத்துவிடலாம். --Anton (பேச்சு) 02:05, 30 மே 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புரு:Taxobox/doc வை ஒரு சில மாற்றங்களோடு ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்துள்ளேன். பயன்படுமா எனப்பாருங்கள். --Anton (பேச்சு) 02:22, 30 மே 2012 (UTC)[பதில் அளி]

{{linked species list}} வார்ப்புரு பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். அதனையும் கட்டுரையில் சேர்த்துள்ளேன். பொருத்தமானதை விட்டுவிட்டு மற்றதை அழித்துவிடுங்கள்.--Anton (பேச்சு) 02:44, 30 மே 2012 (UTC)[பதில் அளி]

அன்டன்! உடன் பதிலுரைக்க முடியவில்லை. பொறுத்தருளவும்.உயிரின வகைப்பாட்டில் முன்பு, புறத்தோற்றங்களை அடிப்படையாக வைத்து வகைப்படுத்தப்பட்டது. இப்பொழுது மரபியல் கருத்துக்கள் அதில் மேலோங்கி விட்டன. தற்பொழுதுள்ள சிந்தனைக்கு, இம்முறை பொருந்தாது. எனினும், பல அருமையான நூல்கள், இங்குள்ள பழைய முறையிலேயே அமைந்துள்ளதால், நாம் பின்பற்றுகிறோம். அறிமுக நிலையில், இம்முறை அவசியமே. நீங்கள் இதுகுறித்த செய்த ஒத்தாசைகள் பயனுடையவையே. இதனை இன்னும் எளிமை, அழகு படுத்த விரும்பியே, இப்பக்கம் வந்தேன். நான் தேவையெனக் கருதும் மாற்றங்கள் வருமாறு;-

 1. இதைப் போல, கட்டங்களுக்குள் தகவல்கள் வேண்டும். ஆனால், Wikispecies-logo.svg இப்படம் தேவையில்லை.
 2. , ஆனால், ஒரே கட்டத்தில் கொடுக்கப்படும் தகவல் முறையே முதலில் தமிழிலும், அதற்கு கீழேயே அதன் உயிரியல் பெயரும் வர வேண்டும்.
  (எ.கா) இறகிகள் என்பதற்கு உயிரியல் பெயர் Pterygota என்பதாகும்.
 3. இப்பக்கம் நமது முயற்சிக்கு உதவலாம்.மற்றவை பிறகு.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
விளங்கிவிட்டது. முயற்சிக்கிறேன். --Anton (பேச்சு) 06:39, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]

வார்ப்புரு:ஒளிப்படவியல்[தொகு]

வார்ப்புரு:ஒளிப்படவியல்

மேலேயுள்ள வார்ப்புருவில் உள்ள ஆங்கிலப் பதங்களுக்காக சரியான தமிழ்ப்பதங்களை தட்டச்சு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் முடிந்ததும் வார்ப்புருவிலுள்ள ஒளிப்படவியல் பற்றிய தலைப்புக்கள் அனைத்தையும் தமிழ் விக்கியில் சேர்த்துவிடுவதுதான் நோக்கம். என்னால் சரியான தமிழ் சொற்களை கண்டுபிடிப்பது கடினமாகவுள்ளதால் உங்கள் உதவியினை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இவைதான் கட்டுரைக்களுக்கான தலைப்புக்களாக அமையப்போகின்றன. நன்றி! --Anton (பேச்சு) 15:50, 1 சூன் 2012 (UTC)[பதில் அளி]

தமிழ் திங்கள் மற்றும் நாட்களை பயன்படுதலாமே.[தொகு]

நாம் விக்கிபீடியாவில் நாட்களை குறிக்க ஆங்கில நாட்குறிப்பிலிருந்து சனவரி 1 போன்ற குறிகளை பயன்படுதிக்கிறோம். இதற்க்கு பதிலாக நாம் நமது தமிழ் தேதிகளை பயன்படுதினால் மிகவும் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை போன்று நமது தமிழ் எண்களையும் பயன்படுதலாமே.--Jayabharat (பேச்சு) 16:35, 4 சூன் 2012 (UTC)[பதில் அளி]

நீங்கள் உணர்வது போலவே இன்னும் பலரும் உணர்ந்தாலும் இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அலுவல் முறையில் நாம் சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு போன்ற மாதங்களைப் பயன்படுத்துகின்றோம். திருமணம் போன்ற சில சடங்குகளில் சித்திரை, வைகாசி என்று "தமிழ்" மாதங்களைப் பயன்படுத்துகின்றோம். பெரும் சிக்கல் என்னவென்றால் தமிழ்-ஐரோப்பிய மாதங்களின் தொடக்க நாட்கள் மாறி மாறி வருவதே. அதேபோல தமிழ் எண்ணெழுத்துகளையும் பயன்படுத்தலாம் எனினும் (விரைவில் பழகிவிடும்), அது தேவை இல்லை. கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற பற்பல கணக்கு சார்ந்த பதிவுகள், செயற்பாடுகள் போன்றவை இன்று இந்து-அரபி முறை என்னும் அழைக்கப்படும் எண்ணெழுத்துகளையே (0,1,2,3..) பயன்படுத்துகின்றன. ஒரு 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நூல்களில் பக்க எண்கள் தமிழ் எண்ணெழுத்துகளில் இருந்தன. இதே போல வேதியியல் தனிமங்களுக்கான பெயர்களும் (ஐதரசனுக்கு H, ஈலியத்துக்கு He, ஆக்சிசனுக்கு O என்றும்..) குறியீடுகளும் நாம் கூடியமட்டிலும் அனைத்துலக முறையைத் தழுவி அப்படியே எடுத்து ஆள்கின்றோம். எண்ணெழுத்துகளைப் பொருத்த அளவிலே அவை தமிழ் எண்ணெழுத்துகளின் சிறு மாற்றம்தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 2, 3, 5, 7, 8, 10 ஆகியவை உருவொத்து இருப்பதை எளிதாக உணரலாம். அபப்டியே தமிழ் எண்ணெழுத்துகளுக்கும் இந்த இந்து-அரபிய எழுத்துகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனினும், நாம் தற்கால இந்து-அரபி எழுத்துகளை எடுத்து ஆள்வதே நல்லது. --செல்வா (பேச்சு) 00:05, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]
சில இடங்களில் உரோமன் எண்ணெழுத்துகளாகிய I, II, III, IV போன்றவற்றைப் பயன்படுத்துவது போல தமிழ் எண்ணெழுத்துகளையும் சில இடங்களில் பயன்படுத்தலாம் என்பது சிலர் கருத்து. (தேதிகளிலும், சாலை ஊர்திகளில், எ.கா. தமிழ்நாடு அரசு பேருந்துகளில், கடிகாரம், மணிகாட்டிகளில்.. இப்படி). ஆனால் தேதிகளில் பயன்படுத்துவது தேவையா? பெரும்பாலும் ஈரிலக்க எண்கள், ஆண்டுகள் 4-இலக்க எண்கள். இப்படி எழுதத் தேவை இல்லை என்பது என் தனிக்கருத்து. --செல்வா (பேச்சு) 00:10, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]
செல்வாவின் கருத்தே எனது கருத்து. ஒரு நபர் பிறந்தது சித்திரை 5 என்று பழைய நூல்களில் எழுதியிருப்பார்கள். இது ஆங்கில ஏப்ரல் 5 ஆ அல்லது தமிழ் சித்திரை 5 ஆ எனக் கூறுவதில்லை. இதனைக் கணிப்பதும் இலகுவானதல்ல.--Kanags \உரையாடுக 00:40, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]
நானும் செல்வா, கனகு கருத்துக்களுடன் ஒப்புகிறேன். குறிப்பாக நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியே உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தமிழ் மாதங்கள் நிலையான நாட்களைக் கொண்டிருப்பதில்லை. காட்டாக ஒரு மாதத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் 30, 31,32 என நாட்கள் மாறுகின்றபடியால் வானவியல் அறிவு உள்ளோரே அகவை போன்ற கால அளவைகளைக் கணக்கிட முடியும். ஏப்ரல் மாதத்தை சித்திரை என்றழைத்தால் உண்மையான சித்திரை மாதத்துடன் (ஏப்ரல் 15-மே 14) குழப்பம் ஏற்படும். மேலும் விக்கிப்பீடியா மூலம் மாணவர்கள் பல நேர்முகங்களுக்கு தயார் செய்து கொள்ளும்படி இருப்பது முதல் தேவையாகும். இந்தியா எப்போது விடுலை பெற்றது என்றால் ஆகத்து 15 என்று கூறினால் உலங்கெங்கும் பதிலளிக்கலாம்; ஆவணி 1 (துல்லியமாகத் தெரியாது..1947ஆம் ஆண்டு நாட்காட்டித் தேவை) எனின் மாணவர் கூடவே கிரெகொரியின் நாட்காட்டி நாளையும் மனதில் இருத்தவேண்டும்.
அண்மைய மாற்றங்கள் போன்றவற்றிலும் உள்ள நாள்,மணிகள் பலவகை காலளவைகளை கணிக்கப் பயன்படுகின்றன. இவை கிரெகொரியின் நாட்காட்டியின்படி இருந்தால் மற்ற விக்கிகளில் ஏற்கெனவே உள்ள வார்ப்புருக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் தனி வார்ப்புருக்கள், கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். இவை நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும்.
நமது திங்கள் மற்றும் எண்ணுருத்துக்களை சில கட்டுரைகளில் கூடுதல் தகவல்களாகத் தரலாம்.
--மணியன் (பேச்சு) 02:40, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]
இவ்வாறு நாம் சிக்கல்களை மட்டும் பார்த்தால் நமது மாதங்களும் தேதிகளும் பயன்பாட்டில் இல்லாமல் மறைந்து போகும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழ் தேதிகளை ஆங்கிலதிற்கு மாற்றாக பயன்படுத்தாவிட்டாலும் ஆங்கிலத்துடன் சேர்த்து இதை பயன்படுதலாம் என்பது எனது எண்ணம். --Jayabharat (பேச்சு) 03:54, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]
தமிழ் குறித்தவை மறைந்து போகாமல் இருக்க, நாம் பின்பற்றப்பட வேண்டிய கடப்பாடுகளில் இதுவும் ஒன்றே. நல்ல சிந்தனை. சிந்திக்கத் தூண்டியமைக்கு நன்றி. எழுத்துருக்களை மாற்றிக் கொள்ள வசதி இருப்பது போல, தேதியை எண்களாகக் கொடுத்தால், மாற்றத்தர வல்ல செயலிகள் ஏதேனும் உள்ளதா?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

இலங்கையில் ஒரு முறையுள்ளது. அதாவது கிரெகொரியின் நாட்காட்டிக்கு இணையான ஆங்கிலப் பெயர்களுக்கு தமிழ் மாதங்களின் பெயரைப் பாவிப்பது. எ.கா: சனவரி = தை. இங்குள்ள தை என்பது சனவரி 1 -31 வரையான நாட்களுக்கான மாதமாகும். X என்பவர் சனவரி 1ம் திகதி பிறந்திருந்தால் அது தை 1 ஆக கருதப்படும். --Anton (பேச்சு) 06:47, 11 சூன் 2012 (UTC)[பதில் அளி]

அவ்வாறான முறையும் உள்ளது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் தமிழ்த் திங்களையே கருத்திற்கொள்வார்கள். --மதனாகரன் (பேச்சு) 13:36, 12 சூன் 2012 (UTC)[பதில் அளி]

வரிகளுக்கிடையிலான இடைவெளி[தொகு]

எழுதிக்கொண்டு போகும்போது சில பந்திகளில், வரிகளுக்கிடையிலான இடைவெளி ஒரே அளவாக இல்லாமல் ஒரு ஒழுங்கின்மை காணப்படுகின்றது. எ.கா. கருத்தரிப்பு நிகழ்வின் ஆரம்பம் பகுதியில் 2ஆம், 3ஆம் வரிகளுக்கிடையிலான இடைவெளி குறுகியதாக உள்ளது. இவ்வாறு பல இடங்களில் ஏற்படுகின்றது. இதனை எப்படித் தவிர்க்கலாம்?--கலை (பேச்சு) 09:51, 22 சூன் 2012 (UTC)[பதில் அளி]

முதலாவது பந்தியிலா? எனக்குத் தெரியவில்லை. சரியாகிவிட்டதென்று நினைக்கிறேன். --Anton (பேச்சு) 05:26, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]

படைப்புக்கள்[தொகு]

வணக்கம், ஏற்கனவே தட்டச்சு செய்துள்ள படைப்புகளை இதி ஏற்ற இயலுமா? −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 117.206.113.248 (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. 21:46, 22 சூன் 2012‎.

படைப்புக்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு ஏற்ப இருந்தால் ஏற்றலாம். இங்கு சொந்தக் கதை, கட்டுரைகளை தரவேற்ற இயலாது. நம்பகமான செய்தித்தாள்/நூல்களின் ஆதாரம் கொண்ட தகவல் கட்டுரைகளை தரவேற்றலாம். உங்கள் படைப்புக்கள் பிறரால் மாற்றப்படும் என்பதையும் அனைவராலும் பயன்படுத்தப்படக் கூடும் என்பதையும் நினைவிற் கொள்க. --மணியன் (பேச்சு) 16:30, 22 சூன் 2012 (UTC)[பதில் அளி]

வின்டோசில் பைத்தான் பயன்பாடு[தொகு]

பைத்தான் பற்றிய பல பயனுள்ள பை.கட்டளைகள் இதுபோலக் கிடைக்கிறது.இதனைக் கொண்டு பகுப்புகளை செய்ய இயலுகிறது. ஆனால், command prompt-இல் தமிழை உள்ளீடு செய்து பகுப்பினை உருவாக்க இயலவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் உருவாக்க முடிகிறது.(எ.கா) அது ஏன்? முயன்றதில், command prompt-இல் chcp மாற்ற வேண்டும் எனத்தெரிகிறது. தமிழுக்குரிய chcp எண் என்ன? இருக்கிறதா? எடுத்துக்காட்டுச்சொல்லின் கீழ் இருக்கும் பகுப்பினைப் பாருங்கள். தமிழ் உள்ளீடுகள் கேள்விக்குறிகளாக வருகிறது.தமிழை சரியாக, வின்டோசு XPயின், command prompt(cmd)-இல் உள்ளீடு செய்ய இயலுமா? பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

பைத்தானில் தமிழை உள்ளீடு செய்து பகுப்பினை உருவாக்குவது கடினம் என்றே நினைக்கறேன். முயற்சிக்கிறேன் வெற்றி பெற்றால் பகிர்ந்து கொள்கிறேன். --Anton (பேச்சு) 05:24, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]

கட்டுரை - கினிப் பன்றி[தொகு]

கினிப் பன்றி பற்றிய கட்டுரையினை ஆரம்பிக்க முயன்றேன். ஆயினும் அக்கட்டுரை பயனர் ஒருவரின் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது. அவர் வருகை சமீபத்தில் இல்லை. எனவே, செய்தியை அனுப்பவில்லை. கட்டுரை:பயனர்:Chandrashekar/கினிப் பன்றி --Anton (பேச்சு) 05:24, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]

கட்டுரை முழுமையாக உள்ளது. சில ஆங்கிலப் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட வேண்டும். கினிப் பன்றி என்ற தலைப்புக்கு நகர்த்தி விடுங்கள் (வரலாற்றுடன் தான் நகரும்.). --மதனாகரன் (பேச்சு) 13:30, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]
இது பன்றி இனம் அன்று. எனவே கினிப் பன்றி என்று பெயரிடவேண்டாம். கினி எலி என்று வேண்டுமானால் சொல்லலாம். இது ஒரு கொறிணி வகை உயிரினம். இந்தக் கினி எலியை சுட்டுச் சாப்பிடுவதை நான் பெரு நாட்டில் கண்டிருக்கின்றேன். வட அமெரிக்காவில் இதனை வளர்ப்பு/செல்ல உயிரியாக வளர்க்கின்றார்கள். இது கட்டாயம் பன்றி இனம் அன்று. Caviinae என்னும் இனத்தைச் சேர்ந்தது. இதில் உள்ள Cavia என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. --செல்வா (பேச்சு) 14:54, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]
ஆம், இது "Guinea" நாட்டுக்கும் "பன்றி" இனத்திற்கும் தொடர்பற்ற ஓர் எலி என்பது சுவாரசியம்.

Yes check.svgY ஆயிற்று --Anton (பேச்சு) 14:59, 28 சூன் 2012 (UTC)[பதில் அளி]

பொருத்தமான தமிழ்ச் சொல்[தொகு]

வணக்கம். en:hypotrochoid, hypotrochoid-என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் வேண்டும். விக்சனரியில் உட்சில்லுரு என உள்ளது. அதைவிடப் பொருத்தமாக பெயரிட பயனர்களின் உதவி வேண்டும்.--Booradleyp (பேச்சு) 15:09, 1 சூலை 2012 (UTC)[பதில் அளி]

http://en.wiktionary.org/wiki/trochoid பக்கத்தில் From Ancient Greek τροχοειδής (trokhoeidēs), from τροχός (trokhos, “wheel”) + εἶδος (eidos, “form, image”) என்று கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்த்தால் உட்சில்லுரு, புறச்சில்லுரு / வெளிச்சில்லுரு போன்ற சொற்கள் மிகப் பொருத்தமாக உள்ளனவே?--இரவி (பேச்சு) 18:20, 1 சூலை 2012 (UTC)[பதில் அளி]
 • கிரேக்க மூலத்தில் wheel, curve (வளை, வளைவு, வளையல், வட்டு, வட்டம்) உள்ளடங்கியிருப்பதால் "உள்/வெளி/புற வளையுரு (வளைவுரு)" என்று அமைக்கலாமோ!--பவுல்-Paul (பேச்சு) 04:04, 2 சூலை 2012 (UTC)[பதில் அளி]
சில்லு என்றால் வட்டம் (ஆழி, சக்கரம்) என்னும் பொருளை உள்ளத்தில் கொண்டு பார்க்க வேண்டும். ஒரு வட்டத்துக்குள் ஒரு வட்டம் உருண்டு உருவாக்கப்படும் ஒரு வடிவம் அல்லவா? ஐப்போ (hypo) என்றால் உள்/உள்ளே (பிற இடங்களில் கீழே தாழ்வாக என்றும் பொருள் தரும்). திரொக்கோசு (τροχός, trokhos) என்றால் சில்லு=ஆழி=வட்டம்=சக்கரம். ஆகவே உட்சில்லுரு சரியான சொல். உள்வட்ட உருளுரு எனலாம். உருளுரு என்பதை அடிபப்டையாகக் கொன்டு உள்ளாழி உருளுரு. அகவட்ட உருளுரு என்றும் கூறலாம். உள்வட்டக் கோலம், உள்வட்ட உருள்வரை என்றும் கூறலாம். உள்ளாழிவரை என்றும் சுருக்கலாம். உள்ளாழிக்கீறு என்றும் சொல்லலாம்.--செல்வா (பேச்சு) 05:13, 2 சூலை 2012 (UTC)[பதில் அளி]
http://ta.wiktionary.org/wiki/trochoid பக்கத்தில் சில்லுரு என்பது தமிழ் இணைய கல்விக்கழகம் தரும் சொல் என்பதைப் பார்க்கலாம். சரியான பொருள் வரும் சொற்களை மாற்றாமல் பயன்படுத்துவதன் மூலம், விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள கல்வி வளங்களுடன் கலைச்சொல் சீர்மையைப் பேணலாம். எனவே, தேவையின்றி புதிய சொற்கள் ஆக்குவதைத் தவிர்க்கலாம். தனிப்பட்ட அளவில், இங்கு சில்லு என்ற பயன்பாடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சுருக்கமாக, அழகாக இருக்கிறது. பல்வேறு தமிழ்ச் சொற்களும் புழக்கத்திற்கு வரட்டுமே?--இரவி (பேச்சு) 06:48, 2 சூலை 2012 (UTC)[பதில் அளி]
உங்கள் விளங்களுக்கு நன்றி. உட்சில்லுரு என்றே பயன்படுத்திக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:29, 2 சூலை 2012 (UTC)[பதில் அளி]