விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்மடல், அரட்டை மூலமும் உதவி அளிக்க விரும்பும் பயனர்கள் தகவல்[தொகு]

விக்கிப்பீடியாவில் உதவி கேட்பதை விட மின்மடல் மூலமாகவோ கூகுள் அரட்டை மூலமாகவோ உதவி பெறுவது இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எந்தப் பயனர் தற்போது இணையப் பயன்பாட்டில் இருக்கிறார் என்று அறிந்து உடனடியாக உதவி பெற விரும்புகிறீர்களா? பின் வரும் பயனர்களுக்கு மின்மடல் அனுப்பி வேண்டுவதன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருக்கலாம்:

வார்ப்புரு:Location map[தொகு]

{{Location map}} இந்த வார்ப்புருவில் பிழைச் செய்திகள் காணப்படுகின்றன. ஆங்கில விக்கியிலுள்ள வார்ப்புருவை ஒப்பிட்டுப் பார்த்தபோது வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதுபற்றி தெளிவுபடுத்த முடியுமா? நன்றி. --Anton (பேச்சு) 06:26, 9 சூலை 2012 (UTC)

பெரும்பாலான நேரங்களில் குறிப்பிட்ட நிலவரை படம் (map) தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்காது. --மணியன் (பேச்சு) 12:33, 9 சூலை 2012 (UTC)
நன்றி. புது வாயில் இக்கட்டுரையில் நிலவரை படம் பாவிக்கக்கூடியவாறு உள்ளது. ஆனால் பிழைச் செய்தியினை தவிர்க்க முடியவில்லை.--Anton (பேச்சு) 14:42, 9 சூலை 2012 (UTC)

இந்த வார்ப்புருவிலும் பல நபர் தொடர்பான வார்ப்புருக்களிலும் படிமத்திற்கான இணைப்பில் பிழைகள் உள்ளன. இதனாலேயே பல பக்கங்களில் அறுபட்ட கோப்பு இணைப்புகள் உருவாகின்றன. வார்ப்புருக்களில் தேவையான நுட்ப அறிவும் பொறுமையும் உள்ளவர்கள் ஆய்ந்து இவற்றைக் களைந்தால் பல பக்கங்களில் பிழைச்செய்தி/பிழைக்கான பகுப்பு நீக்கப்படும்.--மணியன் (பேச்சு) 15:20, 11 சூலை 2012 (UTC)

பிரச்சனை தீர்க்கப்பட்டாயிற்று. சிக்கல் இருந்தது {{Infobox building}} வார்ப்புருவில். சிக்கலான பகுதிகளை நீக்கிவிட்டு ஆங்கில விக்கியிலிருந்து பிரதி செய்துள்ளேன். ஆயினும், சில பகுதிகள் சேர்க்கப்படவில்லை. தேவையேற்படும்போது சேர்க்கலாம் என்பதால் விட்டுவிட்டேன்.--Anton (பேச்சு) 18:45, 13 சூலை 2012 (UTC)

நீண்ட கட்டுரைகள்[தொகு]

நீண்ட்டிருக்கும் கட்டுரையை பல பக்கங்கள் கொண்டதாக மாற்றுவது எப்படி? கட்டுரையை பிரிக்க வேண்டுமா? தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலைப்(அகரவரிசை) பார்த்து விட்டு பதில் கூறவும். சில சொற்களில் பிழை ஏற்பட்டால் அவற்றை தானியங்கி மூலம் திருத்துவது எப்படி. நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:54, 24 சூலை 2012 (UTC)

எரிதக் காப்பு வடி[தொகு]

நீங்கள் சேமிக்க முற்பட்ட பக்கம் எரித வடியால் தடுக்கப்பட்டது. இது தடை செய்யப்பட்ட வெளி இணையத்தளம் ஒன்றுக்கான இணைப்புக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.

பின்வரும் உரையே எரித வடியை தூண்டியது: www(dot)biblewalks(dot)com

மேலேயுள்ள செய்தி ஏன் வருகின்றது? "எரிதக் காப்பு வடி" என்பதற்கான ஆங்கிலம் என்ன? --Anton (பேச்சு) 11:52, 9 சூலை 2012 (UTC)

"எரிதக் காப்பு வடி --Spam filter. Wikipedia backend software has evaluated that "www(dot)biblewalks(dot)com site is a spam infested site.
மேற்கோள்களிலோ வெளி இணைப்புகளிலோ உள்ள இந்த வலைத்தள முகவரியை நீக்கினால், இச்செய்தி நீக்கப்படும்.--மணியன் (பேச்சு) 12:30, 9 சூலை 2012 (UTC)
m:spam blacklist இங்குள்ள அனைத்து வலைத்தளங்களையும் சேமிக்க இயலாது--சண்முகம்ப7 (பேச்சு) 14:13, 9 சூலை 2012 (UTC)
இருவருக்கும் நன்றிகள்!! m:spam blacklist இங்குள்ள பட்டியலில் bbiblewalks(dot)com உள்ளது. நான் இணைப்புக் கொடுக்க முனைந்தது biblewalks(dot)com. இது "spam" போன்று தெரியவில்லை.

--Anton (பேச்சு) 14:37, 9 சூலை 2012 (UTC)

redwood[தொகு]

Redwood மரத்தின் தமிழ் பெயரை தெரிந்து கொள்ளலாம?--220.247.236.38 08:26, 11 சூலை 2012 (UTC)

 • Sequoiadendron giganteum / Giant sequoiaஎன்பதனை குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.அது தமிழக மரமில்லை. நாம் பெயர்வைப்பதற்கு முன் இந்தியாவில் Soymida febrifuga/ செம்மரம் என ஒன்றுண்டு. அதனையும் கருத்தில் கொண்டு,மிகப்பெரிய மரம் நீங்கள் சொன்னது என்பதால், மாசெம்மரம் எனலாம். செம்மாமரம்என்றால் மாமர வகை என தவறாக புரிந்து கொள்ள வாய்புண்டு.-- உழவன் +உரை.. 08:39, 11 சூலை 2012 (UTC)
Sequoia என்னும் சொல் ஆங்கிலத்தில் /sɪˈkwəʊɪə/ /sɪˈkwɔɪə/ (ஏறத்தாழ ஃசீக்வொய்ய அல்லது ஃசீக்வொய என்பது போல ஒலிக்கும்). இப்பெயர் 1847 இல் தற்கால இலத்தீன் மொழியில் எண்டுலிசர் (Endlicher, 1847) என்பார் ஆக்கினார் என்று ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி கூறுகின்றது. அதே அகராதி இப்பெயரானது "Sequoiah" என்னும் செரோக்கி (Cherokee) அமெரிக்க இந்திய இனத்தைச் சேர்ந்த ஒருவர் பெயரால் உருவானது. இந்தச் செரோக்கி இந்தியராகிய ஃசெக்வொயா என்பார், அவருடைய மொழிக்கான எழுத்துவரிசையை உருவாக்கினார். இதற்குச் செரோக்கி அசையெழுத்து வரிசை (Cherokee syllabary) என்று பெயர். எனவே இந்த மரத்தின், மர இனத்தின் பெயரில் வரும் ஃசெக்வொய என்பது ஒரு தனி மாந்தரின் பெயர்; அவரைப் பெருமைப்படுத்தும் முகமாக சூட்டப்பட்டப் பெயர். இவர் செரோக்கி இனத்தவர். இதே மரத்தை வெலிங்ட்டோனியா (Wellingtonia) என்றும் அழைப்பர். எனவே சேண், சேடு என்னும் சொற்களின் பொருளாகிய உயரமானது, பெருமைமிக்கது (great) என்பதை அடிப்படையாகக் கொண்டு, செக்கச்சேண் மரம் எனலாம். இதில் செக்க என்பது சிவப்பு என்பதோடு செக்வொய (Sequoiah) என்னும் பெயரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே செக்வோயா 'என்று சிறிது திருத்தி ஒரு பெயராலும், செக்கச்சேண் மரம் என இன்னொரு பெயராலும் சுட்டலாம் என்பது என் கருத்து. --செல்வா (பேச்சு) 01:25, 13 சூலை 2012 (UTC)--மிகவும் சுருக்கமாக சேடு என்றும் கூறலாம். சே என்றாலும் சிவப்பு. சேடு என்றால் உயரமானது, பெருமை மிக்கது. எனவே இம்மரத்தைச் சேடு என்று அழைக்கலாம்.--செல்வா (பேச்சு) 02:58, 13 சூலை 2012 (UTC)
செந்நெடு மரம் அல்லது செம்பரு மரம் என்பவை இலகுவான சொல்லாட்சிகளாயிருக்கும் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:25, 13 சூலை 2012 (UTC)

ஆம் சஞ்சீவி சிவகுமார், அப்படியும் சொல்லலாம். தமிழில் சேண்மரம் என்று ஏற்கனவே ஒரு மரம் உள்ளது. அது இன்னது என்று தெரியவில்லை. தமிழ்ப் பேரகராதியைப் பாருங்கள். சேண், சேடு முதலான சொற்களையும் பயன்படுத்துவது நல்லது. சே என்றால் சிவப்பு என்பதும் ஓரளவுக்கு நன்கு அறிந்த சொல். சேப்பு = சிவப்பு, சேதா = சிவந்த மாடு, இருக்கும் பல சொற்களை நாம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தலாம், அதனால் இன்னும் கலைச்சொல் ஆக்கம் சிறக்கலாம். சேடன் என்றாலும் ஒரு மரத்தின் பெயர் (இதுவும் அகராதியில் உள்ளது).

சேடன் cēṭaṉ : (page 1627)
82.) 2. A kind of tree; உச்சிச்செலுந்தில் என்னும் மரம். (சிலப். 13, 153.)
சேடன்¹ cēṭaṉ
n. < சேடு. 1. Great man; பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக. 2112). 2. God; கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள் (தேவா. 923, 7).
சேடு, சேடன், சேண்மரம், முதலியன சுருக்கமான பெயர்கள் நான் செக்கச்சேண் எனக் கூறமுற்பட்டது செக்வோயா என்பதையும் உள்வாங்கிக் கூறத்தான். செஞ்சேண்மரம் என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 04:55, 13 சூலை 2012 (UTC)

நல்லது செல்வா. நல்லதொரு விளக்கம். ஏற்றுக்கொள்ளுகின்றேன்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு)--192.248.66.3 05:13, 13 சூலை 2012 (UTC)
நன்றி.--செல்வா (பேச்சு) 05:20, 13 சூலை 2012 (UTC)

வார்ப்புரு Taxobox[தொகு]

{{Taxobox}} வார்ப்புரு சில சிக்கல்களைக் கொண்டுள்ளது. இது {{Taxobox/core}} மற்றும் {{Taxobox/species}} ஆகியவற்றுடன் இயங்குகின்றது. {{Taxobox}} வார்ப்புருவின் சிக்கல்களைத் தீர்த்தால் பல அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்களைக் குறைக்கலாம். {{Taxobox}} வார்ப்புருவை ஆங்கில விக்கியில் உள்ளதுபோல் மாற்றியபோதும் {{Taxobox/species}} இயங்கவில்லை. ஆனால் {{Taxobox/species}} வை இணைத்த கட்டளைகள் {{Taxobox}} காணப்படுகின்றன. இதனுடன் வேறு வார்ப்புருக்கள் சேர்ந்து இயங்குகின்றதா? --Anton (பேச்சு) 04:05, 14 சூலை 2012 (UTC)

| status_system = iucn3.1 எனும் வரியில்தான் சிக்கலுள்ளது. பெரிய, சிறிய எழுத்துக்களாகவும் மாறி மாறி உள்ளன. எனவே ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்து இங்கு கொண்டுவரும்போது கவனிக்கவும். --Anton (பேச்சு) 08:28, 14 சூலை 2012 (UTC)

வார்ப்புரு:Convert[தொகு]

{{Convert}} மற்றும் இதனுடன் தொடர்புபட்ட வார்ப்புருக்களில் உள்ள ஆங்கில பதங்கள், குறியீடுகள் என்பவற்றை அளவீடுகள் பற்றி தெரிந்த ஒருவர் மாற்றினால் உதவியாகவிருக்கும். (எ.கா: kg, lbs, ton, mph, ipm, mm, etc) அல்லது அவை ஆங்கிலத்திலேயே இருப்பது பொருத்தமென்றால் தேவையில்லை. --Anton (பேச்சு) 11:11, 19 சூலை 2012 (UTC)

இது ஒரு சிக்கலான வார்ப்புரு மட்டுமல்ல சில பிரச்சினைகளும் உள்ளன. எதிர் மறையான எண்களைப் பயன்படுத்தும் போது கட்டுரை முழுவதும் மாயமாக மறைந்து விடுகிறது. இதனால் இவ்வார்ப்புருவில் மிகக் கவனமாகத் திருத்தங்கள் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 11:35, 19 சூலை 2012 (UTC)

பொருத்தமான தமிழ்ச் சொற்கள்[தொகு]

 • cissoid of Diocles
 • Mandelbrot set
 • caustics -இம்மூன்று சொற்களுக்கும் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகிறது. (இம்மூன்றுக்கும் ஆங்கில விக்கியில் கட்டுரைகள் உள்ளன.)) பரிந்துரைத்தால் நல்லது.--Booradleyp (பேச்சு) 21:13, 19 சூலை 2012 (UTC)
 • "Mandelbrot", "Diocles" ஆகியவை தனிமாந்தப்பெயர்கள் ஆகையால் அவை அப்படியே இருக்கலாம். பொதுவாகவே "cissoid" என்னும் கிரேக்கவழிச்சொல் கூறும் கணிதக் கருத்தை உள்ளடக்கிக் குறிப்பாகக் கூறுவதும் கடினமாகத் தெரிகின்றது. cissoid என்பது "ivy" போன்ற (ivy-like) என்ற பொருள் தருகின்றது. இதில் ivy என்பது ஒரு படரும் கொடியைக் குறிக்கும் பெயர். cissoid என்பதை இடைவெளி விளைகோடு என்று கூறலாம் என்று நினைக்கின்றேன். ஏனெனில் இங்கு ஒரு தொடக்கப் புள்ளியில் இருந்து வரையும் ஒரு நேர்கோடானது, இரு வேறு கோடுகளை (இவை வளைகோடுகளாகவும் இருக்கலாம்) வெட்டும்பொழுது அந்த இரண்டு வெட்டுப்புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவை (அந்த நேர்க்கோட்டில் விழும் இடைவெளித் தொலைவை), நேர்கோட்டின் ஒரு தொடக்கப்புள்ளியில் இருந்து குறித்து, அதே போல பல கோடுகளை அதே தொடக்கப்புள்ளியில் இருந்து வரைந்து விழும் இடைவெளிகளைக்குறித்து வந்தால் உருவாகும் அல்லது விளையும் ஒரு "கோடு" (வளைவு). எனவே "cissoid of Diocles" என்பதை தையாக்கிளசின் இடைவெளி விளைகோடு எனலாம். (ஆக்ஃசுபோர்டு அகராதி, "A curve of the second order invented by Diocles." என்கிறது.
 • "Mandelbrot set" = மாண்டல்பிராட்டுக் கணம்.
 • "caustics" என்பதும் சிக்கலான கருத்துரு. எரிக்கு வைசுட்டைனின் மேத்வோர்ல்டு (MathWorld) விளக்கத்தின் படி, "The curve which is the envelope of reflected (catacaustic) or refracted (diacaustic) rays of a given curve for a light source at a given point (known as the radiant point). ". எனவே கேட்டாக்காசிட்டிக்கு (catacaustic) என்பதை எதிர்கதிர் விளைகோடு (பரப்பாகவும் இருக்கலாமோ என்று நினைக்கின்றேன்) என்றும், டைய-சாசிட்டிக்கு (diacaustic) என்பதை விலகுகதிர் விளைகோடு (பரப்பும்?) என்றும் கூறலாம் என்று நினைக்கின்றேன். வெறும் caustics என்பதை கதிர்விளைகோட்டியல் என்றும் கூறலாம். --செல்வா (பேச்சு) 18:08, 20 சூலை 2012 (UTC)--செல்வா (பேச்சு) 00:06, 21 சூலை 2012 (UTC)(சிறுதிருத்தங்கள்)--செல்வா (பேச்சு) 00:40, 21 சூலை 2012 (UTC)
 • உங்கள் பரிந்துரைக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 01:15, 21 சூலை 2012 (UTC)

நிர்வாகியொருவரின் கவனத்திற்கு[தொகு]

நிர்வாகியொருவரின் கவனத்திற்கு: இங்கு {{Infobox military unit}} மொழிபெயர்ப்பு உதவி தேவை. --Anton (பேச்சு) 03:48, 20 சூலை 2012 (UTC)

பார்க்க வார்ப்புரு பேச்சு:Infobox military unit--சண்முகம்ப7 (பேச்சு) 04:05, 20 சூலை 2012 (UTC)
நன்றி!--Anton (பேச்சு) 04:08, 20 சூலை 2012 (UTC)

காவடியாட்டம்[தொகு]

காவடியாட்டம் என்ற கட்டுரையின் முன்னுரையில் //கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது[1][2].[3]// என அமைந்துள்ளது. இதில் 3 என்பது (தமிழ்நாட்டு நாட்டுப்புறக்கலைகள்) எனப்து மேற்கோள் பகுதியில் அமைய வேண்டும். ஏன் அவ்விதம் அமையவில்லை?-- உழவன் +உரை.. 10:48, 22 சூலை 2012 (UTC)

{{Reflist}}, <references/> இவை இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் இல்லை. குழுக்களாகப் பிரித்துப் பயன்படுத்துவது உங்கள் தேவைக்கு உதவும். காவடியாட்டம் கட்டுரையில் வித்தியாசத்தைப் பார்க்கவும். --Anton (பேச்சு) 11:55, 22 சூலை 2012 (UTC)
மிக்க நன்றி ஆன்ன்.இதற்கும் சேர்த்துத்தான் ;) இதோடு கறையான் பகுதியிலுள்ள குறிப்பு வசதிக்கும்(<.references group=note/>) உள்ள வேறுபாடு என்ன? அதனையும் பயன்படுத்தலாம் அல்லவா?
ஆம், பாரிய வேறுபாடு இல்லை. {{Reflist}} வகை விக்கியின் cssஐ பாவிக்க, மற்றது உலவியில் தங்கியிருப்பதாகப் பார்த்த நினைவு. --Anton (பேச்சு) 12:12, 22 சூலை 2012 (UTC)
சரி.css -இல் உள்ளதையே கையாளக்கருதுகிறேன். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.-- உழவன் +உரை.. 12:46, 22 சூலை 2012 (UTC)
உதவிப்பக்கங்கள் mw:Help:Extension:Cite & en:Help:Footnotes.--சண்முகம்ப7 (பேச்சு) 05:16, 27 சூலை 2012 (UTC)

படங்கள்[தொகு]

படங்கள் பேடும் முறைகள் பற்றிய விளக்கம் தருக −முன்நிற்கும் கருத்து Arulr123 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி பக்கமும் உதவலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 05:08, 25 சூலை 2012 (UTC)

புதிய பகுப்பு[தொகு]

ஆண்டு நிறைவுகள் எனும் புதிய பகுப்பை உருவாக்கி சீராக்கும் முயற்சியிலீடுபடுகிறேன். ஆண்டுநிறைவுகள் வார்ப்புருவை இட்டதும், அது அப் பகுப்பினுள் சேருமாறு செய்ய வழி உள்ளதா?--பிரஷாந் (பேச்சு) 11:12, 25 சூலை 2012 (UTC)

ஆம். வழியுள்ளது. அதற்காக ஆண்டு நிறைவுகள் வார்ப்புருவின் இறுதியில் [[பகுப்பு:<<சேர்க்க வேண்டிய பகுப்பின் பெயர்>>]] என்பதை இட்டு விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:50, 25 சூலை 2012 (UTC)

ஒட்டு மொத்த நீக்கல்[தொகு]

விக்சனரியில் துப்புரவு செய்யும் போது, பல பக்கங்களை ஒட்டு மொத்தமாக நீக்கல் செய்ய வேண்டியுள்ளது. அவைகளை அவ்விதம் நீக்க முடியுமா? -- உழவன் +உரை.. 05:30, 26 சூலை 2012 (UTC)

ஒரே பயனரின் அனைத்து பக்கங்களையும் நீக்க சிறப்பு:Nuke உள்ளது. ஆனால் இது போன்ற பகுப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் நீக்க நானறிந்தவரை வழி இருப்பதாக தெரியவில்லை--சண்முகம்ப7 (பேச்சு) 07:26, 26 சூலை 2012 (UTC)
பயனர்_பேச்சு:Ravidreams#ஒட்டு மொத்த நீக்கல் என்ற இதே தலைப்பில் ஆலோசிக்கப்பட்டது.-- உழவன் +உரை.. 09:57, 28 சூலை 2012 (UTC)

பயனர் வெளிப்பக்கங்களை நகர்த்துதல்[தொகு]

எனது பயனர் வெளிப்பக்கங்களை பொதுவெளிக்கு ந்கர்த்துவது எவ்வாறு? சாதாரணமாக "நகர்த்தவும்" கட்டளையை பிரயோகித்து நகர்த்தலாமா?--பிரஷாந் (பேச்சு) 06:18, 27 சூலை 2012 (UTC)

அதை உபயோகித்தே நகர்த்தலாம் பிரசாந். பார்க்க உதவி:பக்கத்தை நகர்த்துதல்--சண்முகம்ப7 (பேச்சு) 06:30, 27 சூலை 2012 (UTC)
அவ்வாறு நகர்த்தும் போது பயனர் வெளிப்பக்கத்தில் வழிமாற்றொன்று உருவாக்கப்படுகிறதே?--பிரஷாந் (பேச்சு) 06:32, 27 சூலை 2012 (UTC)
ஆம் பிரசாந், பக்கங்களை வழிமாற்றின்றி நகர்த்தும் அனுமதி நிர்வாகி குழுவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே நகர்த்திவிட்டு பயனர் வெளி பக்கத்தில் நீக்கல் வேண்டுகோள் விடுத்துவிடுங்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 06:46, 27 சூலை 2012 (UTC)

How to I insert image in my wiki article.−முன்நிற்கும் கருத்து Karthiprabha (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

isoptic என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் வேண்டும். பரிந்துரைத்தால் நல்லது. (en:isoptic) --Booradleyp (பேச்சு) 01:16, 31 சூலை 2012 (UTC)
ஒருகோணமுட்டுப் புள்ளிகள் என்பன ஒரு வளைகோட்டுக்கு இரண்டிரண்டான புள்ளிகளில் இருந்து வரையப்படும் தொடுகோடுகள் ஒரே கோணத்தை முட்டுக்கோணமாகக் கொண்டிருப்பவை. சுருக்கமாக ஒருமுட்டிகள் என்றும் கூறலாம், அதாவது தொடுகோடுகள் முட்டும் பொழுது ஒரே கோணம் விழும்படியாக அமைந்த, வளைகோட்டின் மீதுள்ள புள்ளிகள்.--செல்வா (பேச்சு) 01:30, 31 சூலை 2012 (UTC)

ஒலிக்கோப்புச் சீராக்கம்[தொகு]

பேச்சு:தமிழ் எழுதும் முறைமை#ஒலிக்கோப்புச் சீராக்கம் என்பதில் தொழில்நுட்ப உதவி கோரிக்கையுள்ளது.-- உழவன் +உரை.. 04:38, 31 சூலை 2012 (UTC)

குறுங்கட்டுரைப் பகுப்பு[தொகு]

குறுங்கட்டுரைகளைப் பகுக்க முயன்றேன். ஆனால், சில வார்ப்புருக்களில் குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பு தானாகவே சேர்க்கப்படுவதால் இதை நடைமுறைப்படுத்த முடியாமலுள்ளது. இதை எப்படி மாற்றுவது--பிரஷாந் (பேச்சு) 13:14, 2 ஆகத்து 2012 (UTC)

<references.> நுட்பத்தில் புது வசதி.[தொகு]

ஒரு கட்டுரையைப் படிக்கும் போது, அதுபற்றிக் குறிப்புகளை எண்களாக அமைக்கிறோம். அத்தகைய குறிப்பைக் காண, ஒருகட்டுரையின் அடிப்பகுதி வரை செல்லவேண்டியுள்ளது.ஆனால், அக்குறிப்பிட்ட எண் மீது நமது சொடுக்கியை(mouse) வைக்கும்போதே, அது தெரியுமாறு ஆங்கில விக்கிப்பீடியாவில் செய்துள்ளனர். நாமும் அதனை இங்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்.(எ.கா) w:World Heritage Committee-- உழவன் +உரை.. 08:33, 8 ஆகத்து 2012 (UTC)

Reference Tooltips என்ற கருவியைத் தமிழுக்கும் கொண்டு வர வேண்டும். இதனை ஒரு நிருவாகியாலேயே செய்ய முடியும். நிருவாகிகளின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 09:33, 8 ஆகத்து 2012 (UTC)

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) இங்கு பதிலளிக்கவும்--சண்முகம்ப7 (பேச்சு) 11:40, 19 ஆகத்து 2012 (UTC)

பேச்சுப்பக்க ஒன்றிணைப்பு[தொகு]

பேச்சு:தமிழ் மற்றும் பேச்சு:தமிழ் மொழி இரண்டையும் ஒன்றிணைக்கவும்--பிரஷாந் (பேச்சு) 04:35, 13 ஆகத்து 2012 (UTC)

இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:04, 13 ஆகத்து 2012 (UTC)

புதிய மணல்தொட்டி[தொகு]

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மணல்தொட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்த முடியுமா?--பிரஷாந் (பேச்சு) 07:36, 22 ஆகத்து 2012 (UTC)

உங்கள் பயனர் பக்கத்திலேயே பயனர்:பிரசாந்/மணல்தொட்டி, பயனர்:பிரசாந்/மணல்தொட்டி-2 என்று பயன்படுத்தலாம். நானும் இப்படி தான் பயன்படுத்துகிறேன். இவையெல்லாம் பயனர்வெளிப் பக்கங்கள். 49.137.65.72 08:33, 22 ஆகத்து 2012 (UTC)

கழுகு இனப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்[தொகு]

மேலேயுள்ளவற்றிற்கான தமிழ்ப் பதங்கள் என்ன?

ஆகியவற்றையும் கருத்திற் கொள்ளவும். --Anton (பேச்சு) 03:15, 30 ஆகத்து 2012 (UTC)

Harrier-பூனைப் பருந்து
Kestrel-கரைவணை --மதனாகரன் (பேச்சு) 06:34, 30 ஆகத்து 2012 (UTC)
நன்றி மதனாகரன்!--Anton (பேச்சு) 06:39, 30 ஆகத்து 2012 (UTC)

பக்கத்தை நகர்த்தல்[தொகு]

எனது கட்டுரை வத்ச நாடு எனும் தலைப்புக்குப் பதிலாக தவறுதலாக பயனர்:வத்ச நாடு எனும் பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுவிட்டது. சரிசெய்து உதவவும்.--பிரஷாந் (பேச்சு) 07:14, 4 செப்டெம்பர் 2012 (UTC)

Yes check.svgY ஆயிற்று-சோடாபாட்டில்உரையாடுக 07:35, 4 செப்டெம்பர் 2012 (UTC)

இசுலாத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் நிறுபிக்கப்பட்டவையாக இருக்க வேண்டுமா?[தொகு]

விமர்சனம் என்பது நிறுபிக்கபடாவிட்டாலும் ஒன்றின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்று நம்புகிறேன். இங்கு இசுலாத்தின் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகளை இசுலாம் குறித்தான விமர்சனங்கள் பகுதியில் வைத்துள்ளேன். அவற்றிற்கு எவ்வாறான ஆதாரத்தினை நான் தரவேண்டும். செய்தி தாள்கள், சமூக நல விரும்பிகளின் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து உள்ள செய்திகளை எவ்வாறு மேல்கோள் காட்டுவது.

இசுலாத்தின் நூலான குரானில் உள்ள தவறுகள் மீதான விமர்சங்களை தனி இணையதளமாகவே பலர் வைத்துள்ளார்கள், நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. தமிழில் கட்டுரை எழுதும் போது ஆங்கில மேற்கோளாக ஆங்கில தளங்களை குறிப்பிடலாமா. மதம் சம்மந்தப்பட்டவைகளை எழுத தனி பயனர்கள் யாரெனும் இருக்கிறார்களா. அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏதேனும் இங்கு உள்ளதா. துதி பாட வேண்டும் என்ற கொள்கை இல்லை என்றாலும், இறைமறுப்பு கொள்ளகை அதிக அளவில் இசுலாத்தின் மீதான விமர்சங்களில் வைக்கப்படும் என்றால், அதனை களைய எத்தனை பயனர்கள் முன்வருவார்கள்.

தயவு செய்து இந்த கேள்விகளுக்கு விடையளித்தால் இது போல இந்து மதம், கிறிஸ்துவ மதன், பௌத்தம் குறித்தான விமர்சனங்களை முன் எடுக்க உதவியாக இருக்கும்.

Sivane (பேச்சு) 06:30, 20 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் என்பதற்கு உட்பட்டவாறு எழுலாம். மீறப்படுபவை நீக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. --Anton (பேச்சு) 07:23, 20 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி. விக்கியின் இரண்டாவது தூண், நடுநிலை பற்றி பேசுகிறது. ஆனால் மதம் சார்ந்த கட்டுரையில் இது கடைபிடிக்கப் படவில்லை. மேலும் இதை சுட்டி காட்டினால் குறை சொல்லுவதாகவே பயனர்கள் எண்ணுகிறார்கள். இதன் தீர்வு என்ன. மத சார்புடைய கட்டுரைகளை விமர்சனங்கள் பகுதியை இணைக்க வேண்டாவா?

Sivane (பேச்சு) 08:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)

நூலகத் திட்டம் - தேவையான நூல்கள்[தொகு]

நூலகத் திட்டம் தற்போதும் இயங்குகின்றதா? சில நூல்களைத் தேடியபோது கிடைக்கவில்லை. எ.கா. கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு, மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச் சுவடுகள், மட்டக்களப்பு முற்குகர் வரலாறும் மரபுகளும், மட்டக்களப்பு பூர்வீக சரித்திர ஏடுகள், மட்டக்களப்பு கலைவளம், கிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள், The Monograph of Batticaloa, Eastern Province Ceylon. மற்றும் மலையாள நாடும் மட்டக்களப்பும் என்ற நூல் உள்ளபோதும் தரைவிறக்க முடியவில்லை. --Anton (பேச்சு) 03:27, 21 செப்டெம்பர் 2012 (UTC)

அன்டன் இது போன்றுதான் மற்ற கட்டுரை வரையும் பயனர்களுக்கு இருக்கு பிரச்சனை!! ஆனால் கட்டுரையை வரைந்த பயனர் எப்படியாவது ஆதாரம் காட்ட வேண்டும் என்ற முயச்சியில் இருப்பார். ஆனால் உங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? அப்படியானால் தமிழ் விக்கியின் நடு நிலை எங்கே?? காற்றில் பறந்து விட்டனவா??--சிவம் 09:22, 21 செப்டெம்பர் 2012 (UTC)

நான் கேட்டது வேறு. நீங்கள் சொல்ல முற்படுவது வேறு. --Anton (பேச்சு) 12:39, 21 செப்டெம்பர் 2012 (UTC)
அன்ரன், நூலகத் திட்டம் இன்னமும் இயங்குகிறது. போதிய வளம் இல்லாததால் போலும் அண்மையில் சேர்க்கப்பட்ட நூல்களைத் தரவிறக்க முடியவில்லை. இன்னும் தரவேற்றப்படவில்லைப் போல் தெரிகிறது. சிவம், நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது புரியவில்லை. விக்கிக் கட்டுரைகளுக்கு ஆதாரம் தேவையென்றால், அவை கட்டாயம் இணையத்தில் உள்ள ஆதாரங்களை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை. உங்களிடம் உள்ள நூல்களில் இருந்து மேற்கோள்கள் தரலாம். நூலாசிரியர் பெயர், நூலின் தலைப்பு, வெளியீடு, ஆண்டு, பக். போன்ற விபரங்களைத் தரலாம்.--Kanags \உரையாடுக 10:05, 21 செப்டெம்பர் 2012 (UTC)
நன்றி. நான் குறிப்பிட்ட நூல்கள் கடைகளில்கூட கிடைப்பது அரிதாகவுள்ளது. மீண்டும் முயற்சிக்கிறேன். --Anton (பேச்சு) 12:39, 21 செப்டெம்பர் 2012 (UTC)

பாஹிம். இவர் பயனர்களை அவதூறாக அவமதிபதொடு. கீழ்த்தனமான வார்த்தைகளை பாவிப்பதன் மூலம். விக்கிபீடியா செயல்பாட்டில் இருந்து நான் வெளிஎரிகிறேன். இவர் பொய்யான வேறு பயனர் பெயர்களின் இங்கு செயல்படுவது விக்கி நிர்வாகத்தை ஏமாத்துகிறார் ஆனால் மூத்த விக்கி அறிவாளிகளுக்கு இது புரியவில்லை அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனர். இவரின் செயலால் பல அதி உச்ச பயன்பட கூடிய பயனர்கள் வெளியேறுகின்றனர் அதேவேளை நானும் வெளியேறுகின்றேன் காரணம்: நடு நிலை அற்ற கொள்கை, விக்கியின் மேன்பாட்டுக்கு இவர் இடைஞ்சலாக உள்ளார்! விக்கியின் பாரிய வளர்ச்சிக்கு முன் வந்த பயனர்களை அடாவடி செய்தும், கொச்சை படுத்தியும் தனிப்பட்ட தாக்குதலை இவர் புரிந்துள்ளார்!!! இதனால் என் பங்களிப்பு இனி இல்லை அதே நேரம் விக்கியின் செயல்களில் பாரிய வேறுபாட்டை கொண்டுவர முயல்வேன்!!! அது என்னால் முடியும்!!! அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் உண்மை தன்மையை இன்று இழந்து நிக்கிறது தமிழ் விக்கி!!--சிவம் 10:21, 21 செப்டெம்பர் 2012 (UTC)

மொழிபெயர்க்க உதவி தேவை[தொகு]

Finite Element Method(Finite Element Analysis ) என்னும் தலைப்பில் கட்டுரை தொடங்கி எழுத விரும்புகிறேன். எமக்கு மொழிபெயர்பதில் சிக்கல் இருக்கிறது. தலைப்பை வைப்பதற்க்கே குழப்பமாக இருக்கிறது. யாரிடம் உறுதி செய்வது என்று தெரியவில்லை. உதவவும். :) --Jayabharat (பேச்சு) 10:08, 23 செப்டெம்பர் 2012 (UTC)

விக்சனரியில் இத்தொடர் உள்ளது. பாருங்கள். சிறுகூறு முறை அல்லது சிற்றுறுப்பு முறை என்கிறது விக்சனரி.--Kanags \உரையாடுக 10:25, 23 செப்டெம்பர் 2012 (UTC)
நான் இந்த கட்டுரையை தொடங்கி எழுத உள்ளேன். கட்டுரையை தொடங்குவதற்க்கு முன்பு இதன் தலைப்பை சில பொறியியல் வல்லுனர்கள் சரி என்று கூறினால் நன்றாக இருக்கும். உதவி தேவை.

கட்டுரையைத் திருத்துதல்[தொகு]

2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கட்டுரையில் பி பிரிவு ஆட்ட முடிவுகள் மற்றும் அதற்குக் கீழே இடம்பெற வேண்டிய அரையிறுதி, காலிறுதி, இறுதி ஆட்ட முடிவுகள், மேற்கோள்கள் பகுதி ஆகியன ஏ பிரிவு ஆட்ட முடிவுகள் பகுதியினுள் காணப்படுகின்றன. திருத்தவும்--பிரஷாந் (பேச்சு) 04:14, 24 செப்டெம்பர் 2012 (UTC)

திருத்தியிருக்கிறேன். நன்றி பிரசாந்த்.--Kanags \உரையாடுக 10:12, 24 செப்டெம்பர் 2012 (UTC)
ஏ பிரிவு, பி பிரிவு மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரையிறுதி, காலிறுதி, இறுதி ஆட்ட முடிவுகள், மேற்கோள்கள் பகுதிகள் இன்னமும் காட்சிப்படுத்தப்படவில்லை. என்ன காரணம் ?--மணியன் (பேச்சு) 13:43, 26 செப்டெம்பர் 2012 (UTC)

How can I link "MEYYARAM" to WIKI books? Marmiraja

see மெய்யறம்.--Kanags \உரையாடுக 11:58, 26 செப்டெம்பர் 2012 (UTC)

theni periyakulam

விவிலியமா பிபிலியமா எது சரியான சொல்[தொகு]

“பைபிள்” என்கிற ஆங்கில சொல் பிப்லியன் என்கிற கிரேக்க சொல்லிருந்து வருகிறது. பிப்லியன் என்றால் புத்தகம் என்று பொருள். பிப்லியா என்பது பிப்லியன் என்றும் சொல்லின் பன்மை வடிவமாகும். கிறிஸ்துவுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஹீப்ரு திருமறை (பழைய ஏற்பாடு) கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை “ட பிப்லியா ட ஹகிய” (பரிசுத்த புத்தகங்கள்) என்று அழைத்தனர். கி.பி.223-களில் கிறித்தவ திருமறைக்கு (பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய புத்தகங்களுக்கு) இப்பெயர் வழங்கப்பட்டது. இத்தலைப்பு பன்மையில் காணப்பட்டாலும் ஒருமையில் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் கிறித்தவர்கள் தங்கள் திருமறையை “வேதாகமம்” அல்லது “பரிசுத்த வேதாகமம்” என்று நூற்றாண்டுகளாக அழைத்து வருகிறார்கள். வேதாகமம் என்றும் சொல் பிராமண மதமான வேதாந்த மதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ருப்பதானால் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ மறைநூலை வேதாகமம் என்று அழைப்பதை கிறித்தவ இறையியலாளர்கள் வெகுவாய் தவிர்த்தனர். ஆரம்பகால கிறித்தவர்கள் கிறித்தவ மறைநூலுக்கு பயன்படுத்திய பதத்தையே தொடர்ந்து பயன்படுத்துவது இவ்குழப்பத்தை தவிக்கும் என்று கருதினர். இதன் தொடர்ச்சியாய் பிப்லியா என்றும் கிரேக்க சொல் தமிழ்படுத்தப்பட்டது. இங்வாறு பிப்லியா விவிலியம் ஆனது. இன்று பெருவாரியாக கிறித்தவர்கள் தங்கள் மறைநூலை “விவிலியம்” அல்லது “திருவிவிலியம்” என்று அழைகிறார்கள். இங்கு வேறு ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது, அதாவது பிப்லியாவை தமிழ்படுத்தியபோது மூலச்சொலின் ஒலி இழந்தும் பொருள் சிதைந்தும் நிற்கிறதென்பதாகும். எனவே பிப்லியாவை தமிழில் அதன் ஒலி இழக்காமல் பிபிலியம் என்று அழைப்பதே சிறந்தது. −முன்நிற்கும் கருத்து 112.79.40.250 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

விவிலியம் என்பதே சரி[தொகு]

தமிழில் மகர மெய்யை அடுத்து வரும் பகரம் தவிர்ந்த ஏனைய இடங்களில் பகரத்துக்கு B ஒலிப்பு இல்லை. இதைத்தான் நான் முன்னரே சிலப்பதிகாரத்திலிருந்தும் ஏனைய சொற்களிலிருந்தும் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளேன். அவ்வாறு B ஒலிப்பு வருமிடங்களிலெல்லாம் பகரம் வகரமாகத் திரிபடையும். இதுவே சிலப்பதிகாரம் காட்டும் நடைமுறை. எனவே, பிபிலியம் என்று எழுதி bibiliyam என்று ஒலிக்க முடியாது. அது வகரமாகத் திரிபடைவதால், விவிலியம் என்ற சொல்லே சரியானது.--பாஹிம் (பேச்சு) 15:52, 27 செப்டெம்பர் 2012 (UTC) நீக்கப்பட்ட பக்க உரையாடலை இங்கு நகர்த்தியுள்ளேன்.--மணியன் (பேச்சு) 04:17, 28 செப்டெம்பர் 2012 (UTC)

வார்ப்புரு:Superherobox உருவாக்கம்[தொகு]

ஆங்கிலத்தில் இருக்கும் இந்த வார்ப்புருவினை தமிழ்விக்கியில் பயன்படுத்த இயலவில்லை. வரைகதை குறித்தான தமிழ் வார்ப்புருக்களை உருவாக்கி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேட்வுமன், ஸ்பைடர்மேன், வொன்டர் வுமன், எக்ஸ் மேன் போன்ற கட்டுரைகளை உருவாக்கவும் எண்ணியுள்ளேன். அலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தரவேண்டுகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)

இவ்வாறான தேவைகளுக்கு ஒத்தாசைப் பக்கத்தை நாடவும். நன்றி! --Anton (பேச்சு) 15:27, 28 செப்டெம்பர் 2012 (UTC)
en:Template:Infobox comics character கூடப் பொருத்தமாக இருக்குமா? --Natkeeran (பேச்சு) 16:26, 28 செப்டெம்பர் 2012 (UTC)
எனக்காக ஒத்தாசை பக்கத்திற்கு வேண்டுகோளை நகர்த்தியமைக்கு நன்றி. Natkeeran நண்பரேபேட்வுமன் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புருவையை பயன்படுத்தினேன். ஆனால் வார்ப்புருவை பார்க்க இயலவி்ல்லை. நான் சரியாக இட்டுள்ளேனா என்பதை கவனிக்கவும். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:59, 28 செப்டெம்பர் 2012 (UTC)
இது போன்ற ஒரு அழகான வார்ப்புரு தமிழ்ப் புதினக் கதை மாந்தர்களுக்கும் உருவாக்கப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் கட்டுரைக்கு அவசியம் தேவை.--Kanags \உரையாடுக 22:52, 28 செப்டெம்பர் 2012 (UTC)

{{Infobox Novel}} Yes check.svgY ஆயிற்று --Anton (பேச்சு) 02:00, 29 செப்டெம்பர் 2012 (UTC)

மிக்க நன்றி நண்பரே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:35, 29 செப்டெம்பர் 2012 (UTC)

வார்ப்புரு பற்றிய சிறுசந்தேகங்கள்[தொகு]

 1. பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் பக்கங்களுக்கு வார்ப்புரு:Infobox character ஐ பயன்படுத்திக் கொள்ளலாமா?
 2. வேறு சிறந்த வார்ப்புரு ஏதேனும் உள்ளதா?
 3. வார்ப்புருக்களின் பட்டியலை எங்கு சென்று காணுவது?
ஆம் அதனைப் பயன்படுத்தலாம். பட்டியலை இங்கு பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 06:15, 29 செப்டெம்பர் 2012 (UTC)

இதே போன்ற ஒன்றைத் தனியாக தமிழ்ப் புதின மாந்தர்களுக்கெனத் தனியே உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன். அன்ரன் போன்ற ஆர்வமுள்ளவர்கள் முயற்சி செய்யலாம். என்ன என்ன தரவுகள் இடம்பெற வேண்டும் என முன்னரே ஒருங்கிணைத்து அதற்கேற்ப உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 06:19, 29 செப்டெம்பர் 2012 (UTC)

நிச்சயமாக அவ்வாறு செய்யக்கூடிய திறன் நண்பர் அன்ரனுக்கு உள்ளது. சில மணித்துளிகளேயே காமிக்ஸ் வார்ப்புருவினை மேம்படுத்தி தந்தார். புனைவுக் கதாப்பாத்திரங்கள், நிறைய புத்தகங்களில் கையாளப்பட்டிருக்கின்றன. அவற்றின் தகவல்களையும், புனைவு கதைப்பாத்திரத்தின் தாய், தந்தை உறவு முறைகள், காதலர்கள், வசிப்பிடம், இயல்பு போன்றவைகளையும் உள்ளடக்கி தரலாம். யார் உருவாக்கியது என்பதையும், எந்த புதினத்தில் முதன் முதலாக கதாப்பாத்திரம் வந்தது என்பதுடன், வரலாற்று புனைவு என்றால் எவரை கொண்டு அக்கதாப்பாத்தரம் அமைக்கப்பட்டது என்பதையும் இணைக்கலாம். கோரிக்கையை அன்ரன் பரிசீலிக்க வேண்டும். பொன்னியின் செல்வன் கதைப்பாத்தரங்களின் மீது காதல்கொண்ட நண்பர் Kanagsக்கும், வார்ப்புருவை அமைத்துதரவிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:32, 29 செப்டெம்பர் 2012 (UTC)
வார்ப்புரு:Infobox character என்ற இப்போதிருக்கும் வார்ப்புருவிலேயே மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். உதாரணமாக, lbl1, lbl2, lbl3 போன்றவற்றை மேலதிக தகவல்களுக்குப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:51, 29 செப்டெம்பர் 2012 (UTC)

DOI[தொகு]

Digital object identifier இதனை எவ்வாறு தமிழில் தரலாம்? எண்ணிமப் பொருள் இனங்காட்டி எனலாமா?--Kanags \உரையாடுக 01:16, 29 செப்டெம்பர் 2012 (UTC)

எண்ணிமப் பொருள் இனங்காட்டி பொருத்தம் என நினைக்கிறேன். --Anton (பேச்சு) 02:02, 29 செப்டெம்பர் 2012 (UTC)

👍 விருப்பம் பொருளுக்கு மாற்றாக ஊடகம்/ஆவணம் கூடப் பொருந்தலாம்.--மணியன் (பேச்சு) 03:04, 29 செப்டெம்பர் 2012 (UTC)
மீண்டும் சிந்தித்தபோது இங்கு identifier என்பது இனம் அல்லது வகைப்பாடு காட்டி என்பதை விட எங்குள்ளது எனக் காட்டுவதால் இடஞ்சுட்டி அல்லது சுட்டி என்பது இன்னமும் கூட பொருந்துவதாகத் தோன்றுகிறது. எனவே எனது பரிந்துரை எண்ணிம ஆவணச் சுட்டி என்பதாகும்.--மணியன் (பேச்சு) 04:41, 29 செப்டெம்பர் 2012 (UTC)
நன்றி மணியன், இதுவே நல்லதாகத் தெரிகிறது. இது பற்றி ஒரு குறுங்கட்டுரை உருவாக்குவீர்களா:):).--Kanags \உரையாடுக 06:41, 29 செப்டெம்பர் 2012 (UTC)
மணியன் பரிந்துரைத்த எண்ணிம ஆவணச் சுட்டி என்பது சரியாக இருப்பதாக நானும் எண்ணுகின்றேன்.--செல்வா (பேச்சு) 20:09, 30 செப்டெம்பர் 2012 (UTC)

தகவற்சட்டம்[தொகு]

தனிமங்கள் குறித்த தகவற்சட்டங்கள் மிகப் பெரியனவாக (அகலம்) உள்ளன. இதனைத் தொகுக்க முற்பட்ட போது புதியதாக உருவாக்கும் பக்கம் வருகிறது. இதனை யாரேனும் அளவு குறைக்க முடியுமா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:46, 29 செப்டெம்பர் 2012 (UTC)

தமிழ் எழுத்துகள் பொதுவாக ஆங்கில எழுத்துக்களை விட அளவில் பெரிதாக இருப்பதாலேயே இவ்வாறு வருகிறது என நம்புகிறேன். வார்ப்புரு:Elementbox இல் மாற்றங்கள் செய்ய வேண்டும்..--Kanags \உரையாடுக 10:30, 29 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கிநூல் எழுத விருப்பம்[தொகு]

தற்போது ஜாவா கற்று வருகிறேன். அடிப்படைகள் மட்டும் தெரியும் என்றாலும் சி, சி++ பற்றிய அடிப்படைகளும் எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம். இது குறித்த விக்கி நூல் ஒன்றை எழுத விரும்புகிறேன். மூத்த பயனர்கள் உதவும்படி வேண்டுகிறேன். வழிகாட்டுங்கள்! ஆலோசனைகளை வழங்குக! நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:11, 30 செப்டெம்பர் 2012 (UTC)

நீங்கள் என் பேச்சுப்பக்கத்தில் கேட்டிருந்ததற்கு அங்கேயே மறுமொழி இட்டிருக்கின்றேன். விக்கிப்பீடியா போலவே விக்கிநூலிலும் எழுதலாம். விக்கிப்பீடியாவில் இல்லாத அளவுக்கு விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தேவைக்கு ஏற்ப விரித்து எழுதலாம். விக்கிநூலுக்கான இணைப்பு விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்திலேயே (கீழே கடைசியில்) உள்ளது. யாவா/சாவா மொழி பற்றி ஏற்கனவே தமிழில் நல்ல் நூல் ஒன்றும் உள்ளது (பேராசிரியர்கள் பொன்னவைக்கோ, கிருட்டிணமூர்த்தி ஆகியோர் எழுதியது என்று நினைவு).--செல்வா (பேச்சு) 20:16, 30 செப்டெம்பர் 2012 (UTC)
நிச்சியம் எழுதலாம். எ.கா b:நிரலாக்கம் அறிமுகம் என்ற விக்கிநூலைப் பார்க்கவும். சி++ பி.எச்.பி, பெர்ள் போன்ற கட்டுரைகளையும் பார்க்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:38, 30 செப்டெம்பர் 2012 (UTC)

மறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே! விக்கிநூல்கள் விக்கி போல் எளிமையாக இல்லை. இங்குள்ள பல தொகுத்தல் வசதிகள் அங்கே இல்லை. நிர்வாகிகள் கவனத்திற்கொண்டு விரைந்து உதவுமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:38, 1 அக்டோபர் 2012 (UTC)

தமிழ், குறிப்பாக உங்களுக்கு என்ன நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன எனக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:18, 1 அக்டோபர் 2012 (UTC)

இங்கே உள்ளது போன்றே, தொகுத்தல் பெட்டியின் கீழே, சிறப்புக் குறியீடுகள், வார்ப்புருக்கள், nowiki, references, anonymous, கிரேக்க லத்தீன் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளை அங்கும் வழங்குங்கள். என் திருத்தங்களையும் சரிபாருங்கள் - தமிழ்க்குரிசில்

விரைவில் இந்த வசதி செய்து தரப்படும். நன்றி. --Natkeeran (பேச்சு) 18:10, 1 அக்டோபர் 2012 (UTC)
தமிழ், நீங்கள் கோட்டுக்கொண்ட வசதிகள் ஏற்கனவே அங்கு உள்ளன. உங்கள் பயனர் preferences இல் சென்று ஏதுவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 23:38, 1 அக்டோபர் 2012 (UTC)

இல்லை நற்கீரன், அவ்வாறான வசதிகள் உள்ளனவா என விருப்பத்தேர்வுகளில் தேடிப் பார்த்துவிட்டேன். உதவுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:59, 2 அக்டோபர் 2012 (UTC)

இதற்கு மீடியாவிக்கி:Edittools இந்த பக்கத்தை b:மீடியாவிக்கி:Edittools இங்கும் உருவாக்க வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 05:37, 8 நவம்பர் 2012 (UTC)

பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து[தொகு]

கல்கியின் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களில் சிலர் முழுப் புனைவாகவும், சிலர் அடிப்படையான சில ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தும் புனைவாகவும், சில முழு வரலாற்று நபர்களாகவும் இருக்கின்றார்கள். இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான வரலாற்று புனைவில் எப்படி கட்டுரைகளை எழுதுவது என்று திட்டம் வைத்துள்ளீர்களா?

 1. உதாரணமாக [[செம்பியன் மாதேவி|செம்பியன் மாதேவியார்] கட்டுரையில் அவரை முழு வரலாற்று நபராக அடையாளம் காட்ட வேண்டும். பொன்னியின் செல்வன் வார்ப்புரு மற்றும், பகுப்புகளை சேர்க்க வேண்டாம் என்ற மூத்த பதிவர் கூறுகிறார். அப்போது பொன்னியின் செல்வன் வார்ப்புருவிலிருந்து இதுபோன்ற கதை மாந்தர்களை நீக்கினால், வார்ப்புரு மிக சொற்பமாக குறைந்துவிடும். மேலும் செம்பியன் மாதேவியார் பொன்னியின் செல்வனில் புனைவு கலந்த கதைமாந்தராக வருகிறார்.
 2. ஆங்கில விக்கிப்பீடியாவில் இன்னம் பொன்னியின் செல்வன் கட்டுரையே சரியாக முடிக்கப்படவில்லை. அவர்கள் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்தும் எழுதவில்லை. வரலாறு சார்ந்த நபர்களை பற்றி எழுதுகையில் செம்பியன் மாதேவி பற்றியும் எழுதியுள்ளார்கள். அவர்களை நாம் பின்பற்றுவது சரியாக இருக்குமா.
 3. பேட்மேன், மாயாவி போல புனைவு கதாப்பாத்திரங்களும் பொன்னியின் செல்வனில் வருகின்றன. வரலாற்று தொடர்புகள் இன்றி இருக்கும் இவர்களைப் பற்றி கட்டுரை எழுதுவதைப் போல வரலாற்றில் தொடர்புடைய புனைவு கலந்த கதாப்பாத்திரங்களை உதா. செம்பியன் மாதேவி(பொன்னியின் செல்வன்) என்று தனிப்பக்கத்தில் எழுதலாமா. வரலாற்று கதாப்பாத்திரம் எது. வரலாறு கலந்த புனைவு எது. முழுப் புனைவு எது என்பதை வார்ப்புரு:பொன்னியின் செல்வனில் குறிப்பிடலாமா.
 • மனதில் எழும் இக்கேள்விகளுக்கு விடையளித்தால் பொன்னியின் செல்வனின் கதைமாந்தர்கள் கட்டுரையை மேலும் விரிவுபடுத்த இயலும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:58, 30 செப்டெம்பர் 2012 (UTC)

தமிழர் வரலாறு குறித்த கட்டுரைகளுக்கு செங்கைப் பொதுவன் உதவுவார். செம்பியன் மாதேவி உண்மையான நபர் என்றால் அவரைப் பற்றிய கட்டுரையில் அவர் குறித்த பழைய பாடல்களைச் சேர்த்து, சோழ வரலாற்றில் மாதேவியின் காலக்கோட்டினை அறிந்து பிற தகவல்களைத் தரலாம். கட்டுரையின் கீழே, இவர் பொன்னியின் செல்வனில் கதைமாந்தர் எனக் குறிப்பிடலாம். வரலாற்றை நன்கறியும்வரை கதைமாந்தர்களையும் வரலாற்று நபர்களையும் ஒரே கட்டுரையில் எழுத வேண்டாமென்பது என் கருத்து கதையில் திரித்து எழுத வாய்ப்புண்டு. பின்குறிப்பு: உங்கள் கட்டுரைகளின் மூலமே பொன்னியின் செல்வனைப் படித்து வருகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:21, 30 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றி நண்பரே. வரலாற்றில் இல்லாததை கல்கி புனைந்து எழுதியுள்ளார். ஏறத்தாள எல்லா கதாப்பாத்திரங்களிலும் சிறுபுனைவு உள்ளது. சேந்தன் அமுதன் எனும் கதாப்பாத்திரத்தினை உருவாக்கி அவர்தான் மதுராந்தக உத்தம சோழன் என்றும், செம்பியன் மாதேவியின் மகன் என்றும் கூறுகிறார். இது எத்தனை உண்மையானது என்பது தெரியவில்லை. இதுபோல நிறைய உள்ளது. அதனால் தனிப்பக்கத்தில் கதைமாந்தர்கள் பற்றி குறிப்பிடலாமா என்று கேட்டேன். நண்பர் செங்கைப் பொதுவனிடம் கோரிக்கை வைத்து பொன்னியின் செல்வனில் வருகின்ற உண்மை வரலாறு மக்களை இனம் கண்டபின்தான் மேற்கொண்டு செயல்பட முடியும். நன்றி.- சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:24, 30 செப்டெம்பர் 2012 (UTC)

இதைப்போல் உள்ள கட்டுரைகளில் en:Maravarman_Sundara_Pandyan#In_popular_culture இக்கட்டுரையில் உள்ளது போன்று எழுதுவர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 30 செப்டெம்பர் 2012 (UTC)

வரலாற்று நபர்களை வரலாற்றியல் ஆதாரங்களை மட்டும் வைத்தே எழுத வேண்டும். தென்காசி சுட்டியபடி in popular culture அல்லது பொதுப் பண்பாட்டில்/பரவலர் பண்பாட்டில் என்ற பகுதியில் பென்னியில் செல்வன் கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடலாம். பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய பாத்திரங்கள் அனைத்துக்கும் தனிக் கட்டுரைகள் இருக்கலாம். அதற்கு வரலாற்று நபரில் இருந்து இணைப்புத் தரலாம். --Natkeeran (பேச்சு) 20:42, 30 செப்டெம்பர் 2012 (UTC)
உணர்ந்து கொண்டேன். செங்கைப் பொதுவன் ஐயாவிடமும் கோரிக்கையை வைத்திருக்கிறேன். வரலாற்று காலத்தில் வாழ்ந்தவர்கள் குறித்து போதிய அறிவு இன்மையால், என்னால் வரலாற்று நபர்கள் பற்றிய கட்டுரைகளில் அதிகம் பங்கு கொள்ள இயலாது. இருப்பினும் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து தனிப்பக்கத்தில் எழுவதை தொடர்கிறேன். நண்பர்களுக்கும் பொன்னியின் செல்வன் கட்டுகளில் பங்கெடுத்து மேம்படுத்தி தருமாறு கோரிக்கை வைக்கிறேன். உறுதுணையாக இருந்து வழிகாட்டி செல்லும் அனைவருக்கும் நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:44, 1 அக்டோபர் 2012 (UTC)

கதைமாந்தர்கள் பெயரிடுதல் குறித்து சிறு யோசனை[தொகு]

நண்பர்களுக்கு வணக்கம், பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களில் சிலர் வரலாற்றில் வாழ்ந்தவர்களாக உள்ளமையினால் உண்மை, புனைவு இடையே ஏற்படும் குழப்பம் தவிர்க்க,. கதைமாந்தர் பெயருடன் அடைப்புக் குறிக்குள் பொன்னியின் செல்வன் என்று சுட்டிக்காட்டலாம் என்று நினைத்திருந்தேன். (உதா: செம்பியன் மாதேவி (பொன்னியின் செல்வன்)) ஆனால் அதே கதைப்பாத்திரங்களை பயன்படுத்தி வேறு சில புனைவுகளும் வந்துள்ளன. பொன்னியின் செல்வனுக்கு முன்னும் பின்னும் என்றெல்லாம் கதைகளத்தினை தேர்ந்தெடுத்து எழுதியுள்ள படியால், இதே கதைப்பாத்தரங்கள் மற்ற புதினங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது அடைப்புக் குறிக்குள் புதினம் என்றோ இல்லை பொதுவாக ஒரு சொல்லையோ பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறேன். (உதா: செம்பியன் மாதேவி (புதினம்) அல்லது செம்பியன் மாதேவி (நாவல்) இதன் மூலமாக நந்திபுரத்து புதினத்தில் உள்ள கதைப்பாத்திரத்தினையையும் ஒருங்கினைத்து ஒரே கட்டுரையில் எழுதலாம். இல்லையென்றால் குந்தவை (பொன்னியின் செல்வன்), குந்தவை (நந்திபுரத்து நாயகி) என்று பக்கங்கள் அதிகரிக்கும். இவைகளை குந்தவை (புதினம்) என்ற ஒரே கட்டுரையில் இணைத்துவிடலாம். இது குறித்து தங்களின் மேலான யோசனைகளை தெரிவிக்கவும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:37, 1 அக்டோபர் 2012 (UTC)

கதை மாந்தர்களுக்கு புதினம் அல்லது நாவலை அடைப்புக்குறிக்குள் போடுவதை தவிருங்கள். புதினம் என்பது புதினத்தைப் பற்றிய தலைப்பாக இருக்கும். அவ்வாறே புதினங்கள் பற்றிய பல கட்டுரைகள் தலைப்பிடப்பட்டுள்ளன. கதை மாந்தர் என அடைப்புக்குள் வரலாம். உ+ம்: செம்பியன் மாதேவி (கதை மாந்தர்) என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:45, 1 அக்டோபர் 2012 (UTC)
கனக்ஸின் யோசனையை ஏற்றுக்கொள்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:40, 1 அக்டோபர் 2012 (UTC)
நன்றி நண்பரே. கதைமாந்தர் என்று அடைப்புக்குறிக்குள் இட்டே கட்டுரையை துவங்குகிறேன். பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் போன்ற பெயர்களில் முன்பே எழுதப்பட்டு இருக்கும் கட்டுரைகளையும் இவ்வாறு மாற்ற வேண்டுமா?. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:28, 1 அக்டோபர் 2012 (UTC)
அவர்களைப் பற்றிய வேறு கட்டுரைகள் இல்லாவிட்டால் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:05, 1 அக்டோபர் 2012 (UTC)