பேட்வுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்வுமன்
பேட்மேன் மற்றும் ராபினுடன் பேட்வுமன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டிடக்டிவ் காமிக்ஸ், டிசி காமிக்ஸ்
உருவாக்கப்பட்டதுபாப் கார்னே, எட்மண்ட் ஹாமில்டன் மற்றும் ஷெல்டன் மால்டொப்
கதை தகவல்கள்
முழுப் பெயர்பேட்வுமன்*
பிறப்பிடம்பேட்மேன் குடும்பம்
பங்காளர்கள்பேட்மேன்
உதவி செய்யப்படும் பாத்திரம்ராபின், பேட்கேர்ள்
திறன்கள்தற்காப்பு கலை வல்லுனர், மிகவும் திறமையான துப்பறியும் திறனுடையவர்; நவீன ஆயுதங்களை கையாளும் திறன், மிக வேகமாக வாகனம் செலுத்தும் திறன்

பேட்வுமன் (Batwoman) டிசி காமிக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை பெண் மீநாயகன் கதாப்பாத்திரமாகும். இந்த பாத்திரத்தை எட்மண்ட் ஹாமில்டன் மற்றும் ஷெல்டன் மால்டொப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை கதாப்பாத்திரமாகும். பேட்மேன் எனும் மீநாயகன் கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டிடெக்டிவ் காமிக்ஸ் மற்றும் டிசி காமிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வரைகதைகளில் பேட்வுமன் தோன்றினார். இவர் பேட்மேன் குடும்பத்தின் உறுப்பினாக கருதப்படுகிறார்.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

நகரத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்தலே பேட்வுமன் கதாப்பாத்திரத்தின் இயல்பாகும். குற்றத்தினைப் பற்றி துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்தலும், குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தலும் பெரும் செயலாகும். அத்துடன் பேட்மேன், ராபின், பேட்-கேர்ள் போன்ற சக கதாப்பாத்திரங்களுக்கு உதவுதலும் அடங்கும்.

கேத்ரீன் கேன்[தொகு]

1950 களின் தொடக்கத்தில் காமிக்ஸ் மீதான தாக்குதல்களுக்கு பின்னர், 'பேட்மேன் குடும்பம்' உருவாக்கப்பட்டது. சூப்பர்மேன் வரைகதையில் இந்தமாதியான குடும்ப உறவுகளை வைத்து வெற்றி பெற்றப் பின் பேட்வுமன் கதாப்பாத்திரம் பாப் கேனாவால் உருவாக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டிடெக்டிவ் காமிக்ஸ் # 233 ல் பேட்வுமன் அறிமுகம் செய்யப்பட்டார். துப்பறியும் திறன், அறிவியல் அறிவு என பேட்மேனுக்கு சற்றும் குறைவில்லாத வலிமைமிகுந்த கதாப்பாத்திரமாக பேட்வுமன் இருந்தார்.

அதன் பின் பேட்மேன், ராபின், ரெட் ராபின் என்று ஆண்கள் மட்டுமே இருந்த பேட்மேன் குடும்பத்தில் பேட்கேர்ள், ஹன்ட்ரஸ் போன்ற பெண் கதாப்பாத்திரங்கள் இணைந்தன.

சக்திகள்[தொகு]

அமானுஸ்ய சக்திகள் ஏதுமற்ற சாதாரண பெண்ணாகவும், பேட்மேனைப் போலவே தற்காப்பு கலையில் வல்லமை மிக்கவராகவும், சட்டென சி்ந்தித்து செயல்படும் பெண்ணாகவும் பேட்வுமன் இருக்கிறார். கட்டிடங்களில் ஏறுவது, மிகவேகமாக வாகனங்களை ஓட்டுவது போன்ற சூப்பர்ஹீரோக்களின் கலையையும் பெற்றிருக்கிறார். துப்பறியும் திறனும், நவீன ஆயுதங்களை கையாளும் திறனும் உடையவர்.

ஆயுதங்கள்[தொகு]

உயரமான இடங்களை பற்றிப் பிடித்து ஏறுவதற்கு உதவும் எந்திர கருவியை, பேட்வுமன் அதிகமாக பயன்படுத்துவார். நவீன துப்பாக்கிகள், இருபுறமும் கூர்மையான வவ்வால் வடிவ இரும்பு ஆயுதங்கள் போன்றவகளையும் உபயோகம் செய்து எதிரியை எதிர்கொள்வார். பேட்வுமன் பயன்படுத்தும் உதட்டுச் சாயம் பூசும் உபகரணத்திலிருந்து அனைத்துமே வவ்வாலின் அமைப்பினை ஒத்திருக்கும்.

ஆடைவடிவமைப்பு[தொகு]

மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமனில் பேட்வுமன்

2003 ஆம் ஆண்டில் வெளிவந்த மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன் எனும் அனிமேசன் தொடர்கதையில் பேட்வுமன் சாம்பல் நிற உடையை அணிந்துவந்தார். வவ்வாலின் காதுகள் போன்ற அமைப்புடன் கூடிய முகத்தினை முழுவதுமாக மறைக்கக்கூடிய முகமூடி, அந்த முகமூடியி்ல் கண்கள் பகுதி வெள்ளை நிறத்திலும், அதனைச்சுற்றி கருப்புநிற அழுத்தமான வெளிகோடுகளும் இருக்கும். சாம்பல் நிறத்தில் உடல் முழுமையும் மறைக்கும் உடலொட்டிய உடையில் மார்பு பகுதியில் சிவப்பு நிறத்தில் வவ்வால் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் கைகளில் சிவப்பு நிறத்தில் மணிக்கட்டு பகுதியில் கூரிய முனைகளுடன் கையுறைகளும், அதனுடன் சிறுசிறு பெட்டிகளில் ஆயுதங்கள் வைக்கும் பகுதியுடன் கூடிய இடைகச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும். வழக்கமான சூப்பர் ஹீரோக்களின் முதுகு பகுதியில் காற்றில் அசைந்தாடும் துணியும் கூடியதாக பேட்வுமன் கதாப்பாத்திரத்தின் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது.

மற்ற பதிப்புகள்[தொகு]

  • "டைட்டன்ஸ் டுமாரோ"
  • "டைட்டன்ஸ் டுமாரோ.. டுடே!"
  • "கிங்டம் கம்"
  • "ஜல: தி நைல்"
  • "பிளாஸ்பாய்ன்ட்"
  • "எர்த் 11"
  • "பேட்மேன்: டார்க் டைனச்ட்டி"[1]

பிற ஊடகங்களில்[தொகு]

தொலைக்காட்சி தொடர்[தொகு]

  • பேட்மேன்- தி ப்ரேவ் அன்டி தி போல்ட்:

திரைப்படம்[தொகு]

  • "மிஸ்ட்ரி அப் தி பேட்வுமன்:" முதன்முதலாக மிஸ்ட்ரி ஆப் தி பேட்வுமன் என்ற அனிமேசன் திரைப்படத்தில் பேட்வுமன் அறிமுகமானர். பேட்வுமனுக்கு கெரா செட்விக்(Kyra Sedgwick) என்பவர் குரல் கொடுத்தார். பெங்குவின், ரூபெர்ட் தொர்னே போன்ற வில்லன் கதாப்பாத்தரங்களை எதிர்த்து நிற்கும் பேட்வுமனை, அவர் யாரென்று பேட்மேன் அறிந்து கொள்வதுதான் சுருக்க கதை.

கணினி விளையாட்டு[தொகு]

டிசி யுனிவர்ஸ் ஆன்லைன் எனும் கணினி விளையாட்டானது சோனி ஆன்லைன் என்டேர்டைன்மென்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. அதில் பேட்மேன், பேட்வுமன், ராபின், பேட்-கேர்ள், சூப்பர்மேன், வொன்டர் வுமன், லெக்ஸ் லூதர், ஜோக்கர் போன்ற அனைத்து டிசி காமிக்ஸ் வரைகதை கதாப்பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தன. மெட்ரோபோலிஸ், கௌதம் நகரம் போன்ற இடங்களில் நடைபெறுவதாக இந்த கணினி விளையாட்டு அமைந்துள்ளது. விளையாடும் நபர் கதாநாயகர்களையோ, வில்லன்களையோ தேர்வு செய்து கொள்ள இயலும். மேலும் இடத்தினை தேர்வு செய்து வழிமுறையும் உள்ளது. கதாநாயகர்கள் மட்டும் ஜஸ்டிஸ் லீக் வாச்டவருக்குள் நுழைய அனுமதி உண்டு. வில்லன்கள் தங்களுடைய தலைமையகத்துக்குள் நுழையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mike W. Barr (1999). பேட்மேன்: டார்க் டார்க் டைனச்ட்டி. டிசி காமிக்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56389-384-1. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்வுமன்&oldid=3371274" இலிருந்து மீள்விக்கப்பட்டது