கெம்பெகவுடா அருங்காட்சியகம்
Appearance
நிறுவப்பட்டது | 2011 |
---|---|
அமைவிடம் | மகாத்மா காந்தி சாலை, பெங்களூரு |
வகை | பாரம்பரியக் களம் |
மேற்பார்வையாளர் | பேரா. தேவரக்கொண்டா ரெட்டி |
உரிமையாளர் | கருநாடக அரசு |
பொது போக்குவரத்து அணுகல் | எம்.ஜி. சாலை நிலையம் |
அருகில் உள்ள தானுந்து நிறுத்துமிடம் | யுடிலிடி கட்டிடம் (அடுத்துள்ளது) |
கெம்பெகவுடா அருங்காட்சியகம் (Kempegowda Museum) இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது பெங்களூரு நகரத்தை நிறுவிய யெலயங்கா குறுநிலமன்னர் கெம்பெ கவுடாவின் (1513-1569) நினைவுக்கு உரிமையாக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பெங்களூரின் மேயோ கூடத்தில் முதல் மாடியில் அமைந்துள்ளது.[1] இதில் கெம்பெ கவுடாவின் சிலையுருவமும் அவரது காலத்திய கோட்டைகள், கோவில்கள், ஏரிகள் மற்றும் கற்றளிகளின் ஒளிப்படங்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ http://www.dnaindia.com/authors/vidya-iyengar+(April 8, 2011). "Museum showcases the life and times of Kempegowda". Bangalore: DNA India. http://www.dnaindia.com/bangalore/report_museum-showcases-the-life-and-times-of-kempegowda_1529581. பார்த்த நாள்: March 3, 2013.