உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Mugunth

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Mugunth!

வாருங்கள் Mugunth, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 17:30, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

படங்கள் விக்கியில் பதிவேற்றல்

[தொகு]

நீங்கள் சுட்டிய வலைப்பக்கத்தில் உள்ள படங்களை விக்கியில் பதிவேற்ற முடியுமா? யாருடம் அனுமதி பெற வேண்டும்? --Natkeeran 20:37, 3 பெப்ரவரி 2009 (UTC)

குறுங்கட்டுரைகள்

[தொகு]

வணக்கம் முகுந்த்...நீங்கள் புதுக் கட்டுரையாக்கம் செய்வது கண்டு மகிழ்ச்சி. குறுங்கட்டுரைகள் குறைந்தது 3 வசனங்களாவது அமைந்தால் நன்று. நன்றி. --Natkeeran 21:37, 5 ஏப்ரல் 2009 (UTC)

2010 திட்டம் - கூகிள் மொழிபெயர்ப்பு

[தொகு]
விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்டு பலர் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளதாக சுருக்கங்களில் தரப்படுகிறது. நீங்கள் இந்தக் கருவையைப் பயன்படுத்தி, ஒரு மதிப்பீடு தர முடியுமா. சில இதில் விசமத் தனமாகவும் மொழி பெயர்ப்பு செய்வதாகவும் எனக்கு தோன்றுகிறது. அதே வேளை இந்தக் கருவியை நாம் பயன்படுத்த முடிந்தால், இது பெரிய புரட்சியாக இருக்கும்.

உங்கள் பொதுவான கருத்துக்களையும் பதிந்தால் நன்று. நன்றி.

--Natkeeran 16:42, 20 டிசம்பர் 2009 (UTC)

கட்டுரைகளை தொகுக்கும்போது தானாக லாக்அவுட் ஆகாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் ?

[தொகு]

உதாரணத்திற்கு அன்மையில் நான் மதுரைவீரன் கட்டுரையை தொகுக்கும் போது இவ்வாறு ஏற்பட்டது. அதில் கடைசியாகத் தொகுத்த பயனர் எண் 110.32.56.91 நான் தான். தொகுக்கும்போதே விக்கிபீடியா லாக்அவுட் செய்துவிட்டதால் பயனர் பெயருக்குப் பதில் என் ஐபி அங்கு வந்துள்ளது. இதுபோல் எனக்கு மேலும் ஒரு தடவை ஆனது. இதை தடுக்க என்ன வழி என்று அனுபவமுள்ள யாராவது தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும்.--[பயனர்:Mugunth|Mugunth]]

முகுந்த், விக்கிப்பீடியாவுக்கு உங்களை மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி. புகுபதிகை செய்யும் போது “கடவுச்சொல்லை அமர்வுகளிடையே நினைவில் வைத்திருக்கவும்” என்பதைத் தேர்ந்தெடுங்கள். மேலும் உங்கள் உலாவில் குக்கிகளை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். எனக்கு இந்த மாதிரிப் பிரச்சினை எப்போதும் எழுந்ததில்லை. நான் என்றென்றும் பாவிப்பது இண்டர்நெட் எக்ஸ்புளோரர்.--Kanags \உரையாடுக 11:29, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:24, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Mugunth,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வருக :)

[தொகு]

முகமது நசீது கட்டுரையில் உங்கள் பங்களிப்பைக் கண்டு மகிழ்ந்தேன். அப்பப்பவாச்சும் வந்து போங்க :)--இரவி 16:29, 7 பெப்ரவரி 2012 (UTC)

உங்கள் உதவி தேவை

[தொகு]

வணக்கம் முகுந்த், பாமினி விசைப்பலகையை விக்கியில் நிறுவ உங்கள் உதவி தேவை. இங்கே உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:17, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

எட்வேர்ட் சுனோவ்டன்...

[தொகு]

எட்வேர்ட் சுனோவ்டன் எனும் பெயரில் கட்டுரை உள்ளது. அதனை விரிவுபடுத்தவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:09, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]


தகவலுக்கு நன்றி! இந்த கட்டுரையை எட்வேர்ட் சுனோவ்டன் என்ற கட்டுரைக்கு வழிமாற்றிவிட்டேன். --Mugunth (பேச்சு) 12:17, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி

[தொகு]

நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் மீண்டும் பங்களிக்கத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்கிறேன். தொடர் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். ஆசுத்திரேலியாவிலும் நீங்கள் ஈடுபடும் பிற தமிழ்க் குழுமங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:27, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

நன்றிங்க. கண்டிப்பாக இயன்ற அளவிற்கு இங்கு பிரிஸ்பேனில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வேன். --Mugunth (பேச்சு) 12:43, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆகாககாகா! இப்படி ஒருவர் தமிழ் விக்கியில் பங்களிப்பதே இப்போது தான் தெரிந்தது. பட்டையை கிளப்பவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:48, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

பார்க்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#முகுந்துக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர இராமசாமி விருது--இரவி (பேச்சு) 05:36, 5 சூலை 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை இணைக்க கோரிக்கை வைக்க

[தொகு]

ஒத்த பொருளுடைய கட்டுரைகளை இணைக்க கோரிக்கை வைக்க விரும்பினால் {{merge to|கட்டுரையின் தலைப்பு}} என கட்டுரையில் இடுங்கள். பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டப் பின்பு தங்களுடைய கையொப்பத்தினை இணைப்பதற்கு --~~~~ என்ற குறியீட்டினை இணையுங்கள். காண்க - குழிப்பணியாரம், விக்கிப்பீடியா:கையெழுத்து நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:31, 26 பெப்ரவரி 2014 (UTC)

- நன்றிங்க ஜெகதீஸ்வரன், இது போன்ற (merge to) மாதிரியான nowiki command எங்கு பார்க்கலாம் ? அதன் முழுப் பட்டியல் ஒரு இடத்தில் இருந்தால் உபயோகமாக இருக்கும். --Mugunth (பேச்சு) 01:01, 27 பெப்ரவரி 2014 (UTC)
குழிப்பணியாரம் என்பது Unni appam எனவும், குழிப் பணியாரம் என்பது Kuzhi paniyaram என்றுமுள்ளதே. இவற்றை இணைக்காது குழிப்பணியாரம் என்பதை "உன்னி அப்பம்" என பெயர் மாற்றலாம். உங்கள் கருத்து என்ன? --AntonTalk 01:53, 27 பெப்ரவரி 2014 (UTC)
ஆம் குழிப்பணியாரம் கட்டுரையை "உன்னி அப்பம்" என்று பெயர் மாற்றம் செய்வதே பொருத்தமாக இருக்கும். அப்படியே செய்யலாம். --Mugunth (பேச்சு) 01:58, 27 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி. சில பயன்படக்கூடிய வார்ப்புருக்கள். விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் --AntonTalk 02:02, 27 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:22, 28 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரை

[தொகு]

கட்டுரைகள் 3 வரிகளுக்குக் குறைவாக இருந்தால் நீங்கப்படும். எனவே நீங்கள் உருவாக்கிய குறுங்கட்டுரைகளை விரிவாக்கி விடுங்கள் அல்லது நீக்கப்படலாம். --AntonTalk 13:28, 27 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி AntanO, கட்டுரைகளை விரைவில் விரிவு படுத்துகிறேன். 3 வரிகளுக்கு கீழுள்ள கட்டுரைகள் நீக்கப்படுவதற்கு முன் ஏதும் கால அவகாசம் உள்ளதா?
ஒரு மாதம். --AntonTalk 07:27, 28 பெப்ரவரி 2014 (UTC)

நபர் பற்றிய குறுங்கட்டுரை

[தொகு]

மிகச்சிறப்பாக விக்கியில் எழுதிவருகின்றமைக்கு என் நன்றிகள் நண்பரே. ச. பாலமுருகன் என்ற கட்டுரையைக் கண்டேன். வலைப்பூக்கள் எனப்படும் பிளாக் இணைப்புகள் தரப்படுவது விக்கியில் வரவேற்கப்படுவதில்லை. அதனால் வலைப்பதிவுகளிலிருந்து இணைப்பினைத் தாருங்கள். கட்டுரையை மேலும் விரிவாக எழுத அண்ணாதுரை, சி. சரவணகார்த்திகேயன் போன்ற நபர்களின் கட்டுரையை காணுங்கள். இயன்றால் பாலமுருகன் அவர்களின் பிறப்பு, ஊர், பெற்றோர், மக்கள் போன்ற தகவல்களைத் திரட்டித் தாருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:31, 28 பெப்ரவரி 2014 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 02:24, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

[தொகு]

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:48, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:24, 16 மார்ச் 2017 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mugunth&oldid=3184507" இலிருந்து மீள்விக்கப்பட்டது