சி. சரவணகார்த்திகேயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சி. சரவணகார்த்திகேயன் (பிறப்பு: ஆகஸ்ட் 13, 1984) என்கிற சிஎஸ்கே ஒரு தமிழ் எழுத்தாளர். பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் 2007 ஆம் ஆண்டு முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு என அச்சிதழ்களிலும், இணையத்திலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றிருக்கிறார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கோவை சிங்காநல்லூரில் பிறந்து, ஈரோட்டில் பள்ளிப்படிப்பும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறியியல் பட்டப்படிப்பை முடித்துப் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருளாளராகப் பணியாற்றி வருகிறார்.

வெளியான நூல்கள்[தொகு]

  • சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்) - 2009
  • பரத்தை கூற்று (அகநாழிகை பதிப்பகம்) - 2010
  • தேவதை புராணம் (கற்பகம் புத்தகாலயம்) - 2012 (தமிழ் பேப்பர் இதழில் வெளியான காதல் புராணம் தொடரின் நூலாக்கம்)
  • கிட்டத்தட்ட கடவுள் (அம்ருதா பதிப்பகம்) - 2013
  • குஜராத் 2002 கலவரம் (கிழக்கு பதிப்பகம்) - 2014
  • வெட்கம் விட்டுப் பேசலாம் (சிக்ஸ்த் சென்ஸ்) - 2014 (குங்குமம் இதழில் வெளியான ச்சீய் பக்கங்கள் தொடரின் நூலாக்கம்)

வெளியான தொடர்கள்[தொகு]

  • காதல் அணுக்கள் (தமிழ் பேப்பர்) - 2014

விருதுகள்[தொகு]

  • தமிழக அரசின் சிறந்த நூல் விருது (தமிழ் வளர்ச்சித்துறை) - 2009
  • குங்குமம் முத்திரைக்கவிதை பரிசு (கவிஞர் வைரமுத்து) - 2007

மேற்கோள்கள்[தொகு]

  1. சிறந்த நூல்களுக்கான தமிழக அரசு விருதுகள் 2010 - தினமணி செய்தி

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சரவணகார்த்திகேயன்&oldid=1875803" இருந்து மீள்விக்கப்பட்டது