வண்ணம் (பாநடை வகை)
வண்ணம் என்னும் சொல் பாடலில் வரும் நடைநலத்தைக் குறிக்கும். இந்த நடைநலத்தைத் தொல்காப்பியம் 20 வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. பொருள்-நோக்கில் வரிசைப்படுத்தி அடுக்கப்பட்டுள்ள அவை இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. [1]
வண்ணங்கள் 100 வகை
[தொகு]
|
|
|
ஆகியவற்றை ஒன்றோடொன்று உறழ (5 பெருக்கல் 4 பெருக்கல் 5) வண்ணம் 100 என அமையும் [2]
வண்ணம் நூல் வகை
[தொகு]- உடற்கூற்று வண்ணம் - 14ஆம் நூற்றாண்டு பட்டினத்தார் (பட்டணத்தார்) பாடல்
- உடற்கூற்று வண்ணம் - அருணகிரியார் இப்பெயருடன் ஒரு நூல் பாடினார் என்பர். [3]
- சந்தக் குழிப்பு வரும் பாடல்களும் வண்ணத்தின் வகையினவே.
- ஆண்கலை, பெண்கலை வண்ணம் [4]
- அருணகிரிநாதர் திருவகுப்பு [5]
வண்ணம் (சந்த நடை)
[தொகு]- தனத்தான தனனதன
- தனத்தான தனனதன
- தனத்தான தனனதன - தந்ததனனா
என்பது போலத் தாளச்சந்தம் கொண்டு வரும் பாடல்கள் சந்தவண்ணப் பாடல்கள்.
அருணகிரி நாதரின் திருப்புகழ், திருவகுப்பு முதலான பாடல்கள் வண்ணம் என வழங்கப்படாத வண்ணப் பாடல்கள். பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் இயற்றிய ஆதிமெய் உதயபூரண வேதாந்தத்தில் பரணிடப்பட்டது 2019-10-31 at the வந்தவழி இயந்திரம் [6]பாடியுள்ள பூரண வண்ணப்பா பரணிடப்பட்டது 2019-10-31 at the வந்தவழி இயந்திரம்[7] [8], மேற்கண்ட பல வண்ண வகைகளை உள்ளடக்கியது. கவிராச பிள்ளை பாடிய திருவண்ணாமலையார் வண்ணம் இவ் வகையில் தோன்றிய முதல் வண்ணப் பாடல்கள். [9]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தொல்காப்பியம், செய்யுளியல்
- ↑ அவிநயம் - யாப்பருங்கல விருத்தி - நூற்பா 95 விளக்கம்
- ↑ *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
- ↑ விருத்தப்பாவில் முன் இரண்டு அடிகளில் தலைவன் ஒருவனின் புகழும். பின் இரண்டு அடிகளில் தலைவி ஒருத்தியின் கலக்கமும் கூறி, தலைவியின் கலக்கத்தைத் தலைவன் போக்கவேண்டும் என ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்டிருக்கும்.
- ↑ தனத்தான தனனதன - என்பது போன்ற பலவகையான ஓசைவாய்பாடுகள் பெற்று வரும்.
- ↑ "ஆதிமெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)". Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
- ↑ "பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய பூரண வண்ணப்பா". Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
- ↑ பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய பூரண வண்ணப்பா ஒலிவடிவம்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, 2005, பக்கம் 253, 254