புறப்பாட்டு வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
புறப்பாட்டு வண்ணம் என்பது செய்யுளில் பொருள் முடிவைச் சொன்னது போல் காட்டிக்கொள்ளும். ஆனால் பொருள் முடிவு சொல்லாமல் விடப்பட்டிருக்கும்.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
நிலவுமணல் அகன்துறை வலவன் ஏவலின்
எரிமணிப் புள்ளினம் மொய்ப்ப நெருநலும்
வந்தன்று கொண்கன் தேரே இன்றும்
வருகுவ தாயின் சென்று சென்று
தோன்றுபு ததைந்த புன்னைத் தாதுகு
தன்பொழில் மெல்லக வனமுலை நெருங்கப்
புல்லின் எவனோ மெல்லியல் நீயும்
நல்காது விடுகுவை ஆயின் அல்கலும்
படர்மலி உள்ளமொடு மடல்மா ஏறி
அறுதுயர் உலகுடன் அறியநம்
சிறுகிடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே. [1]
கொண்கன் தேர் நேற்று வந்தது. இன்று வந்தால் நீ சென்று அவ்வனைத் தழுவினால் என்ன? தழுவாவிட்டால் அவன் மடல்மா ஏறி நம் ஊரில் வந்தால் நமக்குப் பழி அல்லவா? - என்று தோழி தன் கருத்தினை முற்றுப்பெறக் கூறி முடித்திருக்கிறாள். ஆனால் கொண்கனைத் தழுவுவதும் தழுவாமல் இருப்பதும் தலைவியின் விருப்பம். இது சொல்லப்படவில்லை. இதனால் இது முடிந்தது போல் முடியாத பொருளைத் தருகிறது. இப்படி வருவது புறப்பாட்டு வண்ணம்.
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ யாப்பருங்கல விருத்தி மேற்கோள்