வனப்பு
Appearance
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அந்த வனப்புகள் இங்குத் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. [1]
எண்வகை வனப்புகளில் அமையும் நூல்களுக்குச் சான்றுகள் :
1) அம்மை - திருக்குறள் , ஆத்திசூடி.
2) அழகு - நெடுந்தொகை போன்றவை
3) தொன்மை - சிலப்பதிகாரம் (நச்சினார்க்கினியர்), இராம சரிதம், தகடூர் யாத்திரை.
4) தோல் - மலைபடுகடாம் (இளம்பூரணர்)
5) விருந்து - முத்தொள்ளாயிரம் (பேராசிரியர்)
6) இயைபு - மணிமேகலை, பெருங்கதை
7) புலன் - முக்கூடற்பள்ளு, குறவஞ்சி, ஏற்றப்பாட்டு, குழந்தைப் பாடல்கள்
8) இழைபு -கலித்தொகை, பரிபாடல் (பேராசிரியர்)
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தொல்காப்பியம், செய்யுளியல்