அழகு (நூல்வனப்பு)
Appearance
அழகு என்பது நூலின் வனப்பு இயல்புகள் எட்டில் ஒன்று.
நூலுக்கு அழகாக அமைவது செய்யுள் யாப்பு. இது செய்யுளுக்கு உரிய சொற்களைக்கொண்டு சீர்கள் அமைத்துச் செய்யப்படும். செய்யுளில் நடையழகும், அணியழகும் மிக்கும் செறிந்தும் காணப்படுவதால் செய்யுள் நடையையே நூலுக்கு அழகு எனக் கருதினர்.[1]
செய்யுள் மொழி என்பது திரிசொல் பயிலாது வருவது என்றும், நூலின் அழகுக்கு நெடுந்தொகை [2] போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் என்றும் பேராசிரியர் விளக்குகிறார்.