புலன் (நூல்வனப்பு)
Appearance
நூலின் வனப்பு-இயல்புகள் எட்டு எனத் தொல்காப்பியர் பகுத்துக் காட்டுகிறார். அவற்றில் புலன் என்பது ஒன்று. [1]
தெளிவாகப் புலப்படும் மொழிநடையில் செய்யப்படும் நூல் புலன்-வனப்பு-நூல்.
- பேராசிரியர்
- ‘சேரி மொழியால்’ என இந்த நூற்பாவினுக்குப் பாடம் கொள்கிறார்.
சேரிமொழி என்பது ‘பாடிமாற்றங்கள்’ என்கிறார்.
இது ஊர்மக்கள் பேசும் மொழி.
‘விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள்’ எனப் புலன்-வனப்பு நூலுக்கு எடுத்துக்காட்டும் தருகிறார்.
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑
- தெளிந்த மொழியால் செவ்விதின் கிளந்து
- தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
- புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே – தொல்காப்பியம், செய்யுளியல் 233