மெல்லிசை வண்ணம்
Appearance
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
மெல்லிசை வண்ணம் என்பது செய்யுளில் மெல்லின எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- பொன்னின் அன்ன புன்னைநுண் தாது
- மணியின் அன்ன நெய்தலங் கழனி
- மனவென உதிரும் மாநீர்ச் சேர்ப்ப ... [1]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ யாப்பருங்கல விருத்தி மேற்கோள்