முடுகு வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

முடுகு வண்ணம் என்பது நாற்சீரின் மிக்கு வரும் அடி கொண்ட பாடலில் உருட்டு-வண்ணத்தில் வருவது போலவே அராகம் தொடுத்து வருவது.

எடுத்துக்காட்டு
நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ [1]

அகத்திணைப் பாடல்களில் தலைவன் தலைவியருக்கு உதவி புரியும் வாயிலாக வரும் அறிவர் என்னும் சான்றோர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கும் பாடலடிதான் இங்குக் காட்டாகத் தரப்பட்டுள்ளது.

அறிவன் எனப்படும் சான்றோர் நன்னெறி அறிந்தவர். பிறர் முகத்தில் செறிந்துள்ள குறியைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள். நன்னெறியிலிருந்து திரிதலை அறியாதவர்கள். (இவர்களை முன்வைத்துதான் அக்காலத் திருமணங்கள் நடைபெற்றன). – இவை முடுகு-வண்ண அடியில் காணப்படும் பாடலில் சொல்லப்படும் பொருள்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடுகு_வண்ணம்&oldid=1106411" இலிருந்து மீள்விக்கப்பட்டது