விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:HD

விக்கிபீடியாவை பயன்படுத்துவது குறித்த உங்கள் கேள்விகள்,ஐயங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.மற்ற பயனர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து உதவுவார்கள்.

interwiki links[தொகு]

How do I add interwiki links? --Harikishore 03:25, 13 ஏப் 2005 (UTC)

I guess you are asking how to link to a page in other language wikipedias.For example, if you want to link the village pump page of english wikipedia (similar to aalamaraththdai) you can give the link as [w:en:village pump] . 'en' is the language code for english.similarly you can find the language codes for other languages. for giving links in the navigation pane to the corresponding page of other languaage wikis the syntax for english is [[en:village pump]].This should be given at the end of the page.--ரவி (பேச்சு) 04:37, 13 ஏப் 2005 (UTC)
I was asking about the links in the Navigation Page. Thanks for the help. -- Harikishore 09:52, 19 ஏப் 2005 (UTC)

படங்களைக் கட்டுரைகளில் இணைப்பது எப்படி?[தொகு]

அனைவருக்கும் வணக்கம். படங்களைப் புதிதாக எழுதும் கட்டுரைகளில் எப்படி இணைப்பது? விளக்கினால் நலம். --யோகேஸ் 13:41, 1 ஏப்ரல் 2007 (UTC)

யோகேஸ், படங்கள் உள்ள கட்டுரைப் பக்கங்களை 'தொகு' என்று சொடுக்கிப் பார்த்தால் படங்ககளை எப்படி சேர்த்துள்ளார்கள் என்று விளங்கும். நீங்கள் எழுதிய மான், புறா ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் நான் எப்படி படம் சேர்த்தேன் என்று பார்க்கலாம். படங்களை எந்த மொழி விக்கியில் இருந்தும் நீங்கள் பெறலாம். நான் பெற்றது ஆங்கில விக்கியில் இருந்து. சில படங்கள் ஜெர்மன் மொழி விக்கியில் சிறப்பாக இருக்கலாம், எனவே தேவைக்கேற்பத் தேடிப் பார்க்க வேண்டும். ஏறத்தாழ 1 மில்லியன் படங்கள் ஆங்கில விக்கியில் உள்ளன. ஒரு படத்தை சொடுக்கினால் அது பற்றிய குறிப்புகள் அங்கே இருக்கும். அப்படம் 'Wiki Commons' ல் இருப்பதாகக் குறிப்பு இருந்தால், தனியாக படியெடுத்து, இங்கே தமிழ் விக்கியில் கோப்பை ஏற்ற வேண்டியதில்லை. இந்த காமன்ஸ்சில் இல்லாத படங்களை உங்கள் கணினியில் முதலில் பதிவிறக்கம் செய்து, பின்னர் த.வி-யில் பதிவேற்றம் செய்ய வேண்டும் (தக்க உரிமங்களைப் பற்றிய குறிப்பும் சேர்ப்பதும் மிகத்தேவை). ஒரு படம் yogesh.jpg என்று இருந்தால் [[படம்:yogesh.jpg|thumb|right|300px|யோகேஸ் பற்றிய விளக்கம்]] என்று இட்டீர்கள் என்றால் yogesh.jpg என்னும் படம் கட்டுரைப் பக்கத்தில் வலப்புறம், 300 பிக்சல் அகலத்தில் சேர்க்கப்படும். இந்த thumb என்னும் குறிப்பு இருந்தால், படத்தை பற்றிய விளக்கம் சேர்க்க உதவியாக இருக்கும். right என்பதற்க்ப் பதிலாக left என்றோ அல்ல்து படம் எங்கிருக்கவேண்டும் என்னும் தேவைக்கேற்ப பிற சொற்களையோ ஆளலாம். --செல்வா 14:03, 1 ஏப்ரல் 2007 (UTC)

Emergency[தொகு]

Hi, I'm Sundar. Suddenly my password for this account has been cracked. They've even changed my contact e-mail from sundarbecse at yahoo domain to something else. I can prove that because I've mailed Ravidreams from that account. Please block my user account as it is an admin account. I've requested Angela to help reset my password. Mayooranathan, please block my account. -- 202.46.19.93 05:06, 2 ஜூன் 2005 (UTC)

The issue is resolved. I've got my account with the help of Raul in the en wiki. -- Sundar 05:40, 2 ஜூன் 2005 (UTC)
How did that happen Sundar? Any clue? Mayooranathan 06:13, 2 ஜூன் 2005 (UTC)
It appears that my password was not stolen, but simply it was a technical problem. See en:User talk:Sundar#Dev discussion and en:User talk:Raul654#Urgent! Help! for more details. Each of us should have some identity information attached to our account. For example, since I've e-mailed Ravidreams in the past from wikipedia e-mail user feature, I can always prove my identity linked to my e-mail. -- Sundar 06:30, 2 ஜூன் 2005 (UTC)

"துணை வகைகள்", "பகுப்புகளிலுள்ள கட்டுரைகள்" வேறுபாடு என்ன?[தொகு]

--Natkeeran 22:32, 16 ஆகஸ்ட் 2005 (UTC)

ஒவ்வொரு கட்டுரையும் எதேனும் பக்க வகைகளுள் வரலாம். அவ்வாறு இருப்பின் நாம் அக்கட்டுரையின் இறுதியில் சென்று Category:some category என்று குறிப்பிடுவோம். குறிப்பிட்டுள்ள அப்பகுப்பு அல்லது பக்க வகை ஏற்கெனவே இருப்பின் அது கட்டுரையின் இறுதியில் நீல நிறத்தில் காணப்படும். இல்லையெனில் அந்த சிகப்பு இணைப்பை அழுத்தி அப்பகுப்பை எந்த ஒரு உரையும் இல்லாமல் உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தவுடன் அப்பகுப்பில் வகைப்படுத்தப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் தானாகவே இணைப்பு வந்துவிடும். நாமாக இணைப்புத் தரக் கூடாது.
இவ்வாறாக நாம் தரும் பக்க வகை பக்க வகைகளின் கட்டமைப்பில் கீழ் நிலையில் இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரம் தற்போது Category:காப்பியங்கள் என்ற பக்க வகையுள் உள்ளது. அப்பக்கவகையை நாம் Category:இலக்கியம் என்ற வகையுள் இணைத்துளோம். Category:காப்பியங்கள் என்ற பக்கத்தில் Category:இலக்கியம் என்ற நிரல்துண்டை சேர்ப்பதின் மூலம் இலக்கியம் காப்பியங்களின் தாய்வகையாகிறது. இதனால் காப்பியங்கள் என்ற பக்கவகை இலக்கியத்தின் துணை வகையாகிறது. சிலப்பதிகாரம் என்கிற கட்டுரை Category:காப்பியங்கள் என்கிற பக்கவகையுள் வரும். அதை அப்பக்கவகையின் தாய் வகையான இலக்கியத்தில் இணைக்க வேண்டியதில்லை.
Category பக்கவெளியிலுள்ள பக்கங்களில் பொதுவாக உரையேதும் சேர்க்கக்கூடாது, வெறும் தாய் வகைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். தொடர்புடைய கட்டுரைகளில் (சிலப்பதிகாரம் போன்றவை) மட்டுமே பக்கவகைத் தகவலை சேர்க்க வேண்டும். இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள en:Wikipedia:Categories என்ற கட்டுரையைப் பாருங்கள். இயன்றால் அக்கட்டுரையின் தமிழாக்கத்தை விக்கிபீடியா:வகைப்படுத்துதல் என்ற தலைப்பில் பதிவேற்றுங்கள். -- Sundar \பேச்சு 05:01, 17 ஆகஸ்ட் 2005 (UTC)


நன்றி சுந்தர், நீங்கள் சொல்ல முனைவது புரிகின்றது என்று நினைக்கின்றேன்.
துணை வகைகள், இலக்கியத்தின் கீழ் உள்ள வகைகள்.
கட்டுரைகள்-இலக்கியம் என்ற வகைக்குள் உள்ள கட்டுரைகள்.
சரிதானே!
--Natkeeran 16:26, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

சுந்தர் கொஞ்சம் அதிகமாகவே விளக்கி விட்டார் என நினைக்கிறேன் :) துணை வகைகள் ( அல்லது பகுப்புகள்) ஒரு தாய் வகையின் (அல்லது பகுப்பு) பிரிவுகளை குறிக்கும். எடுத்துக்காட்டாக, அறிவியல் என்ற தாய் வகையின் கீழ் இயற்பியல், வேதியியல் என்ற துணை வகைகள் வரும். இந்தத்துணை வகைகளின் கீழ் இன்னும் சில துணை துணை வகைகளும் அவசியமிருந்தால் வரலாம். பகுப்புகளிலுள்ள கட்டுரைகளின் கீழ் உள்ள இணைப்புகள் கட்டுரை பெயர்களை குறிக்கும். துணை வகைகளின் கீழ் உள்ள இணைப்புகள் கட்டுரை பெயர்களை குறிக்காது. இது தான் முக்கிய வித்தியாசம். இப்பொழுது புரிவது போல இருக்கிறதா ? மன்னிக்கவும், ரொம்ப குழப்பவில்லை என நினைக்கிறேன் :)--ரவி (பேச்சு) 18:26, 17 ஆகஸ்ட் 2005 (UTC)

நன்றி. இப்பொழுது நன்றாக விளங்கிவிட்டது :-)--Natkeeran 21:01, 17 ஆகஸ்ட் 2005 (UTC)
ஆம். நான் மேலே கூறியவற்றுள் பல நற்கீரனின் கேள்விக்கான விடையாகா. எனினும் வேறொரு இன்னமும் பதிவு செய்யாத ஒரு பயனர் தவறுதலாக பகுப்புப் பக்கங்களில் உள்ளீடு செய்திருந்தார். அவருக்கான விளக்கம் என்னுள்ளே ஓடிக்கொண்டிருந்ததால் நான் இவ்வளவு "விளக்கமாக" குழப்ப வேண்டியதாயிற்று. :-) இதுகுறித்து நான் முதற் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் சில கருத்துக்களைப் பதிந்துள்ளேன். அனைவரும் அங்கே தங்கள் கருத்துக்களைப் பதியவும். -- Sundar \பேச்சு 04:44, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

படங்கள், படிமங்கள் உரிமைகள் பற்றிய விபரங்கள் தேவை:[தொகு]

(தயவுசெய்து தமிழிழ் பதில் தாருங்கள், பிறருக்கும் உதவும் வண்ணம் இக் கேள்வி பதில்களை பின்னர் தொகுத்து கொள்ளலாம். நன்றி.)


1.முதலில் விக்கிபீடியாவில் உரிமையோடு பாவிக்க கூடிய படங்களை எங்கு எங்கு எல்லாம் பெறலாம்?


2.பழைய படங்கள் (உதாரணம் - பாரதியார்) இன்னும் யாருக்காவது உரிமை இருக்குமா? ஏன் என்றால், 30 வருடங்களுக்கு பின்பு பொது உரிமைக்கு வந்து விடும் அல்லவா?


3.நான் எடுத்த படங்களுக்கு (உதாரணம் - மிருக காட்ச்சி சாலையில்) எனக்கா முழு உரிமை உண்டு, அல்லது மிருக காட்ச்சிசாலையிடம் எதாவது அனுமதி பெற வேண்டுமா?


4.வேறு ஒருவரின் படங்களை அனுமதியுடன் விக்கியில் பாவிக்கலாமா, அல்லது கட்டற்ற படங்களை மாத்திரமே விக்கியில் பாவிக்கலாமா?


--Natkeeran 11:04, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

1. நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்கிபீடியா பக்கங்களிலுள்ள படிமங்களை அப்படியே இங்கும் பயன்படுத்தலாம். அப்படிமப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள காப்புரிமை மற்றும் இன்ன பிற தகவல்களை அப்படியே Copy செய்து இங்கு தரலாம். அவசியமிருந்தால் அதற்குண்டான வார்ப்புருக்களை உருவாக்குவதுடன் தகவல்களை தமிழ்ப்படுத்தலாம். அங்குள்ள படிமம் விக்கிமீடியா காமன்ஸில் (Wikimedia commons) இடம்பெற்றிருந்தால் அவற்றை திரும்பவும் தமிழ் விக்கிபீடியா தளத்தில் பதிவேற்ற அவசியமில்லை. அப்படிமப் பெயர்களை கொண்டு இங்கு இணைப்புகளை உருவாக்கினால் தானாக படங்கள் தெரியும். காமன்ஸில் இடம் பெறாத படங்களை மட்டும் ஆங்கில் தளத்தில் இருந்து பதிவிறக்கி இங்கு பதிவேற்ற வேண்டி இருக்கும்.

இது தவிர எந்தத் தளத்தில் இருந்து படத்தை பயன்படுத்த நினைத்தாலும் அத்தளத்தில் காப்புரிமை குறித்து உள்ள அறிவிப்புகளை படித்துப்பாருங்கள். சிலர் இலாப நோக்கற்று பயன்படுத்த அனுமதிப்பார்கள். அப்படி இருந்தால் இங்கு பயன்படுத்தலாம். சிலர் தனியாக அனுமதி கோரி பின் பயன்படுத்த சொல்வார்கள். அவ்வாறெனில் முறையாக அனுமதி கோரி பின் அதையும் குறிப்பிட்டு படிமங்களை இங்கு பதிவேற்றுங்கள். (குடிமியான்மலை கட்டுரையில் இவ்வாறு அனுமதி பெற்று படிமங்களை பயன்படுத்தி இருக்கிறேன்.)காப்புரிமை குறித்து ஒரு தகவலும் இல்லாதிருந்து, அப்படிமத்தை இங்கு பயன்படுத்துவது நியாயமான நோக்கு என்று நூங்கள் கருதினால் அப்படிமத்தை நீங்கள் பெற்ற இணைய முகவரியை குறிப்பிட்டு {{fairuse}} என்ற வார்ப்புருவுடன் படிமக்கோப்பை பதிவேற்றுங்கள்.

வணிக முக்கியத்துவம் உள்ள சிறப்பு படங்கள் (எ.கா-அறிவியல் மாதிரிகள், நகை வடிவ மாதிரிகள், சிற்பங்கள், ஓவியங்களின் படங்கள்) தவிர்த்து பல படங்களை இந்த மாதிரி பதிவேற்றலாம் என நினைக்கிறேன். எனினும் இப்படத்தை பதிவேற்றுவதனால் காப்புரிமை பிரச்சினை வரக்கூடும் என நீங்கள் நினைத்தால் அதை பதிவேற்றுவதை தவிர்த்து விடுவது நல்லது. அல்லது இந்தப்பக்கத்தில் அப்படிமத்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து கலந்துரையாடலாம்.

2. ஒவ்வொரு நாட்டிலும் காப்புரிமை நீர்த்துப்போக வெவ்வேறு கால அளவுகள் ஆகும். விக்கி மீடியா U.S காப்புரிமை சட்டத்தால் கட்டுப்படுத்த படுகிறது என நினைக்கிறேன். அச்சட்டப்படி 100 ஆண்டுகள் கழித்து நீர்த்துப்போகும் என நினைக்கிறேன். இது குறித்து பிறரும் தெளிவுபடுத்தலாம். மிகப்பழைய படங்களை fairuse வார்ப்புருவைக்கொண்டு பயன்படுத்தலாம்.

3. முறையான அனுமதியுடன் எந்த இடத்தில் நீங்கள் எடுத்த படத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் அதற்கு காப்புரிமை கொண்டாட விரும்பவில்லையெனில், அப் படிமங்களை விக்கிமீடியா காமன்ஸில் பதிவேற்றுங்கள். அதற்கு காப்புரிமை கொண்டாட விரும்பவில்லை என்ற அறிவிப்பையும் தெளிவாக வெளியினுங்கள். இதனால் தமிழ் விக்கிபீடியா தளத்திற்கு தரவுத்தள சுமை குறையும். பிற மொழி விக்கிபீடியாக்குளும் உங்கள் படத்தை பயன்படுத்த இயலும்.

4. பிறர் எடுத்த படங்களை அவர்களின் முறையான அனுமதியுடன் பயன்படுத்தலாம். உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்றால் வாய் வார்த்தை போதும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறுவது (மின்னஞ்சலிலாவது) விரும்பத்தக்கது. எனினும் அவர் உங்களுக்கு மட்டும் தான் (அல்லது விக்கிமீடியா திட்டத்திற்கு மட்டும்) அனுமதியளித்தாரா இல்லை அப்படிமங்களை கட்டற்ற பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தாரா என்பதை குறிப்பிடுதல் நலம்

--ரவி (பேச்சு) 12:32, 21 ஆகஸ்ட் 2005 (UTC)


விபரமான விளக்கங்களுக்கு நன்றி, மேலும் சில குழப்பங்கள்.[தொகு]

கட்டற்ற மென்பொருட்களில், தனியார் மென்பொருள் அம்சங்களை சேர்க்க தடை உள்ளது. காரணம், அவை பின்னர் தடங்கல்களை விளைவிக்க கூடும் என்பதால்தான். எனவே, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில், காப்புரிமை உள்ள படிமங்களை சேர்த்தல் நல்லதா? கட்டற்ற உரிமை இச் செயல்பாட்டினால் பாதுகாக்கப்படுகின்றதா?


படங்களை அல்லது படிமங்களை மென்பொருள் உடன் ஒப்பிட முடியாது என்றும் கருதுகின்றேன். ஏன் என்றால், படங்களை ஒவ்வொன்றாக பாவிக்கின்றோம். எனினும், விக்கியில் ஒரு காப்புரிமை படத்தை வைத்து கட்டுரை எழுதுகின்றோம் என்று வைத்து கொண்டால், அதை இன்னொருவர் "கட்டற்ற உரிமையின்" கீழ் முழுமையாக பயன்படுத்த முடியாது. அதாவது பட காப்புரிமையுடைவரின் படங்களை அனுமதி பெற வேண்டும். நான் சொல்ல முனைவது தெரிகின்றதா? அல்லது, இவ் விசயம் நோக்கி இப்பொழுது கவலைப்பட தேவையில்லையா?


விக்கி பொது தவிர வேறு எங்கே படங்கள் பொதுவில் எடுக்கலாம்? (உதா: நாசா, கிறியேற்ரிவ் கொமன்ஸ் போல் வேறு உதாரணங்கள் தர முடியுமா.)

--Natkeeran 13:03, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

விக்கிமீடியா கொள்கைகள் பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது. சுந்தர் விளக்குவார் என எதிர்பாரக்கிறேன்.--ரவி (பேச்சு) 13:23, 21 ஆகஸ்ட் 2005 (UTC)
காப்புரிமைக்குட்பட்ட படிமங்களையோ ஒலி கோப்புகளையோ கூடியவரை விக்கிபீடியாவில் சேர்க்காமலிருப்பதே நலம். நாசா போன்ற அமெரிக்க அரசு நிறுவனங்களின் எந்த ஒரு படைப்பும் பொதுவுடைமைகளாகும். இதே போன்று இந்திய அரசின் படைப்புக்கள் தகவல்களுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உரியதாகக் கருதலாம். (எ-கா) Image:KuppusamiLokSabhaMember.jpg. மேலும் இந்தியாவில் 1945-ம் ஆண்டிற்கு முற்பட்ட படைப்புக்கள் தற்போது காப்புரிமையின் கீழ் வருவதில்லை. (எ-கா) Image:ThiruvithamkoorResidency jpg.jpg. மற்றபடி காப்புரிமைக்குட்பட்ட படிமங்களை அனுமதி பெற்று பயன்படுத்தினால் கூட அந்த அனுமதி ஜி.எஃப்.டி.எல். ஆவண அனுமதியை ஒத்து இருத்தல் அவசியம். கூடுதல் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். -- Sundar \பேச்சு 04:41, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
நன்றி சுந்தர். --Natkeeran 04:50, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
இந்தப் பக்கத்தையும் பார்க்கவும். -- Sundar \பேச்சு 07:24, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆங்கில விக்கி கட்டுரைகளின் வெளி இணைப்புக்களை எப்படி சேர்ப்பது?[தொகு]

ரவி நீங்கள் முன்னர் பின்வருமாறு குறிப்பிட்டீர்கள். வேறு கட்டுரைகளுக்கு முயன்று பார்த்தேன், அவை நீங்கள் கூறியவாறு இயங்கவில்லையே.


பிற மொழி விக்கிபீடியாக்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்கான இணைப்பை வெளி இணைப்புகள் பகுதியில் தர வேண்டாம். எடுத்துக்காட்டாக Toronto என்ற ஆங்கில விக்கிபீடியா கட்டுரைக்கு இணைப்பு தர [[en:Toronto]] என்ற முறையில் உங்கள் தமிழ் கட்டுரையின் ஆகக் கடைசி வரியில் இணைப்பு தந்தால், அவ்விணைப்புகள் தானாகவே இடப்பக்க சட்டத்தில் சேர்ந்து விடும். ஏற்கனவே உள்ள சிறப்புக்கட்டுரைகள் ஒன்றின் தொகுப்புப்பக்கத்தை பார்த்தால், நான் சொல்ல வருவதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பிறகு, பாடல் வரிகளை தரும் போது விக்கி நடைக்கேற்ப அவற்றை சாய்வெழுத்துகளில் தாருங்கள். இந்த மாற்றங்களை உங்கள் ஓ கனடா கட்டுரையில் செய்துள்ளேன்--ரவி (பேச்சு) 10:31, 18 ஆகஸ்ட் 2005 (UTC)

--Natkeeran 19:29, 21 ஆகஸ்ட் 2005 (UTC)

பார்க்கவும் Links and URLs பகுதி in en:Wikipedia:How to edit a page. இது உங்கள் கேள்விக்கு விடையளிக்கும் என நினைக்கிறேன்--ரவி (பேச்சு) 13:07, 22 ஆகஸ்ட் 2005 (UTC)


ஒரு பகுப்பை (உ+ம்: விளையாட்டு) எப்படி நீக்குவது?; ஒரு பதிப்பை எப்படி நீக்குவது?[தொகு]

--Natkeeran 00:26, 26 ஆகஸ்ட் 2005 (UTC)

ஒரு பகுப்பையோ பதிப்பையோ நீக்குவதற்கான மென்பொருள் வசதி நிர்வாகிகளுக்கு மட்டுமே உண்டு. நீங்களும் நிர்வாகி ஆக விரும்பினால் விக்கிபீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்திற்கு சென்று பதியுங்கள். அல்லது உங்கள் ஒப்புதலைத் தெரிவித்தால் நானே உங்கள் பெயரை மும்மொழிகிறேன். -- Sundar \பேச்சு 09:46, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
மேலும் கீழ்க்காணும் கொள்கைப் பக்கங்களையும் பார்க்கவும்:
-- Sundar \பேச்சு 11:25, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆங்கில வெளி இணைப்புகளை தானாகவே வெளி இணைப்புகளில் இணைப்பது எப்படி என்பது என்னும் சரி வருகின்றதில்லை, எதாவது அலோசனை?[தொகு]

--Natkeeran 00:49, 26 ஆகஸ்ட் 2005 (UTC)

இந்த மாற்றத்தை கவனியுங்கள். ஆங்கிலம் உட்பட பலமொழி விக்கிபீடியாக்களுக்கு வெளி இணைப்பு தந்துள்ளேன். அவ்விணைப்புகள் கட்டுரையில் இடதுபுறம் பொதுவான வலைப்பயண இணைப்புகளுக்குக் கீழே வந்துள்ளதைக் காணலாம். உங்களுக்கு கடிதாயிருக்கும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையைத் தாருங்கள், நான் வெளி இணைப்பு உருவாக்கி விளக்குகிறேன். -- Sundar \பேச்சு 09:52, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

"வகைப்படுத்தப்படாத பக்கங்கள்" பட்டியலை எப்படி இன்றைப்படுத்துவது?[தொகு]

--Natkeeran 23:48, 29 ஆகஸ்ட் 2005 (UTC)

வகைப்படுத்தப்படாத பக்கங்கள் உட்பட பல சிறப்புப் பக்கங்கள் மென்பொருளால் தாமாகவே உருவாக்கப் படுபவை. இதனால் நம்மால் இற்றைப்படுத்த முடியாது. விளக்கத்திற்கு en:Wikipedia:Special pages-இங்கே பார்க்கவும். (பார்த்துவிட்டு மறவாமல் மொழிபெயர்க்கவும் ;) மென்பொருள் கோளாறுகள் இருப்பின் வழுக்களை இங்கே பதியலாம். -- Sundar \பேச்சு 09:58, 30 ஆகஸ்ட் 2005 (UTC)

இது குறித்த ஆங்கில விக்கபீடியா கலந்துரையாடல் பக்கத்தை en:Wikipedia talk:Special:Uncategorizedpages இங்கு பார்க்கலாம். இது குறித்த ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவிலும் உரையாடப்பட்டது. அதை இங்கு பார்க்கலாம். தற்சமயம் தானாய் அந்த சிறப்பு பக்கம் இற்றைப்படுத்தப்படும் வரை காத்திருக்கத்தான் வேண்டியது தவிர வேறு வழியில்லை என நினைக்கிறேன் :( --ரவி (பேச்சு) 10:09, 30 ஆகஸ்ட் 2005 (UTC)


நன்றி சுந்தர், ரவி.[தொகு]

உங்கள் உதவிகள் மிகவும் பயன் உள்ளவை. ஆங்கில மற்றும் பிற மொழி இணைப்புக்களை இணைப்பதை பற்றி நான் தான் தவறுதலாக புரிந்துகொண்டேன். எனது நினைப்பில் ஆங்கில மொழியில் இருக்கும் வெளி இணைப்புகளை மாத்திரம் அப்படி இணைக்கமுடியும் என்று தவறுதலாக கருதிவிட்டேன். மற்றப்படி, ரவி சொன்னதும், சுந்தர் சொன்னதும் சரிதான்.


வகைப்படுத்தப்படாத பக்கங்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியாவிலும் சர்ச்சைதான். ஒரு கிழமைக்கு ஒருக்காவோ அல்லது இரு கிழமைக்கு ஒருக்காவோ இன்றைப்படுத்துகின்றார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், உடனடியாக இன்றைப்படுத்தும்படியாக அவர்கள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


மேலும் ஒரு சந்தேகம்: பந்திகளுக்கு இடையே ஒரு வரி (தொகுத்தலின் போது இரு வரிகள்) விட்டால் தான் அழகாக தோன்றுவதாக நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

--Natkeeran 16:19, 31 ஆகஸ்ட் 2005 (UTC)

உங்கள் கேள்வி குறித்து ஆங்கில விக்கிபீடியா நடைக்கையேட்டில் தேடிப்பார்த்தேன். பதில் கிடைக்கவில்லை. ஆனால், எல்லா விக்கிபீடியாக்களிலும் பத்திகளுக்கு இடையே (தொகுத்தலின் போது) ஒரு வரி விட்டே எழுதுவது வழக்கமாக உள்ளதால் நாமும் அதையே பின்பற்றலாம் என்பது என் கருத்து. --ரவி (பேச்சு) 11:00, 1 செப்டெம்பர் 2005 (UTC)

அறிமுக வார்புருவில் தேவையற்ற ஒரு வடு இருக்கின்றதே??[தொகு]

தொடர்ந்து உரையாடல்களை இங்கு நடத்தலாம்.--ரவி (பேச்சு) 18:24, 9 நவம்பர் 2005 (UTC)[பதிலளி]


எப்படி Portal உருவாக்கலாம் என்பதைப் பற்றி யாரும் சற்று விளக்குவீர்களா?[தொகு]

--Natkeeran 06:08, 13 டிசம்பர் 2005 (UTC)

en:Wikipedia:Portals என்ற விளக்கக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. -- Sundar \பேச்சு 08:38, 13 டிசம்பர் 2005 (UTC)


சில நுட்ப நெறிப்படுத்தல் சார்ந்த கேள்விகள்[தொகு]

  • பகுப்பு என்று தமிழ் வார்ப்புருவை பயன்படுத்தி பகுக்கப்படும் வகைகள் கட்டமைப்பு சட்டத்தில் தானாக தோன்றாது. இது ஒரு பெரும் குறையாக இப்பொழுது தெரியாவிட்டாலும், பின்னர் இது வகைப்படுத்தல் தொடர்புகளை ஒருங்கே தர முடியாமல் போகலாம். அது வகைப்படுத்தலை சிரமப்படுத்தும். முழுமையான பகுப்பு வரைபடத்தை தானாக எப்படி உருவாக்கலாம்?
கட்டமைப்பு சட்டம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. இந்தப் பக்கம் ஒவ்வொரு முறை புள்ளிவிவரக் கணக்கு இற்றைப்படுத்தப்படும்போதும் தானாகவே பக்க வகை வலையமைப்பை இற்றைப்படுத்துகிறது. மற்றபடி, Wikipedia:பக்க வகைகளின் கட்டமைப்பு பக்கத்தை நாம் தான் இற்றைப்படுத்த வேண்டும். வருங்கால பகுப்பு முறையை தீர்மானிக்கவும் பயன்படுத்தலாம்--ரவி 12:38, 1 ஜனவரி 2006 (UTC)
இந்தப் பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் உள்ள எல்லா பக்கவகைகளும் இல்லை. அதற்கான காரணத்தை அவர்கள் கீழே ஒரு குறிப்பில் தந்துள்ளார்கள். எனவே, இது ஒரு பிரச்சினையே.


  • சேமிப்பு எப்படி இடம்பெறுகின்றது பற்றி ஒரு விளக்கம் தேவை? மாற்றங்கள் மட்டும் சேமிக்கப்படுகின்றனவா அல்லது ஒரேயடியாக ஒரு கோப்பு முழுமையாக மீண்டும் மீண்டும் சேமிக்கப்படுகின்றதா?
  • பெரும்பாலும் மாற்றங்கள் மட்டுமே சேமிக்கப்படுகின்றன. இருப்பினும், பெரிய மாற்றங்கள் ஏற்படும் பொழுது வேறு உத்தி கையாளப்படுகிறது என்று எண்ணுகிறேன். மேலும் தகவல்களுக்கு, m:Help:Page history. -- Sundar \பேச்சு 07:19, 30 ஜனவரி 2006 (UTC)
  • தமிழ் விக்கிபீடியா நுட்ப நெறிப்படுத்தல் எங்கே ஒருங்கிணைக்கப்படுகின்றது?

நன்றி ரவி, சுந்தர். --Natkeeran 18:00, 30 ஜனவரி 2006 (UTC)

வகைப்படுத்தல் உதவி[தொகு]

வகைப்படுத்தலிற்காண முழுப்பட்டியலை எங்கே காணலாம்?--ஜெ.மயூரேசன் 07:03, 30 ஜனவரி 2006 (UTC)

இங்கே. இதை எப்படி அடைவது என்றறிய கீழே தரப்பட்டுள்ளா வார்ப்புருக்களின் பட்டியலை அடையும் முறையைப் பற்றிய விளக்கத்தைக் காணுங்கள். -- Sundar \பேச்சு 08:27, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

Disambiguation[தொகு]

இதற்கான தமிழ் வார்ப்புரு உள்ளதா?--டெரன்ஸ் 04:41, 15 ஜூன் 2006 (UTC)

ஆம். நீங்கள் இடதுபுறம் சுட்டியில் உள்ள சிறப்புப் பக்கங்கள் சுட்டியை அழுத்தினால் அங்கே அனைத்துப் பக்கங்கள் என்ற சுட்டி பட்டியலில் இடம்பெற்றிருக்கும். அதை அழுத்தி, பெயர்வெளியில் வார்ப்புருவைத் தெரிவு செய்து "செல்" என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து வார்ப்புருக்களின் பட்டியல் வரும். அதில் பார்த்தால் {{disambig}} என்ற வார்ப்புரு இருக்கும். அதை மொழிபெயர்த்துப் பயன்படுத்துங்கள். -- Sundar \பேச்சு 06:55, 15 ஜூன் 2006 (UTC)

இக்கட்டுரையில் 72.140.138.83 இலிருந்து நண்பரொருவர் சில மாற்றங்களை செய்துவிட்டு சென்றுள்ளார் ஆனால் அவர் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடுரகளில் திருத்தம் செய்யவில்லை. மேலும் அவரது திருத்தங்கள் தேவையற்றவை என கருதுகிறேன் உ+ம் சனத்தொகை----மக்கற்தொகை இதனால் இப்பக்கத்தில்---- "தயவுசெய்து மாற்றம் செய்யாதீர் அவ்வாறு செய்தால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளும் பாதிக்கப்படும். இவ்வார்ப்புரு பாவனக்கு உகந்ததாக இல்லாவிட்டால் வேறு வார்புருவை தொகுத்து பயன்படுத்தவும். செய்யகூடிய மாற்றங்களை பேச்சு பக்கத்தில் கூறிச்செல்லவும்."----எனற வாசகத்தை இணத்தேன் எதிர்காலத்தில் இதுநடக்கமலிருக்க என்ன செய்யலாம்? lock செய்யலாமா? நான் நடந்துகொள்ளும் விதம் பிழையா? அறிவுறுத்தவும் --டெரன்ஸ் 05:43, 23 ஜூன் 2006 (UTC)

தற்போது நீங்கள் விடுத்துள்ள செய்தி போதுமானது. பெரிய அளவில் நாசவேலைக்குட்பட்டாலொழிய பூட்டுவது தேவையற்றது. -- Sundar \பேச்சு 06:10, 23 ஜூன் 2006 (UTC)
இது நாச வேலை அன்று. இது குறித்த என் கருத்தை இங்கு பார்க்கவும்.--ரவி 07:40, 23 ஜூன் 2006 (UTC)


ஒரு வார்புருவை எத்தனை முறை ஒரே கட்டுரயில் பாவிக்கலாம்[தொகு]

ஒரு வார்புருவை எத்தனை முறை ஒரே கட்டுரயில் பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளதா? "நாடுகள் மொழிபெயர்ப்பு" என்ற வார்ப்புருவை 90 முறைக்கு மேல் பாவிக்க முடியவில்லை. என்ன செய்யலாம்? இதன நாடு சார் பட்டியல்களில் 250 முறையாவது பயன்படுத்த வேண்டும்.....--டெரன்ஸ் \பேச்சு 13:50, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

டெரன்ஸ், இந்த 90 முறை, 250 முறை என்பதை எந்த பக்கத்திலாவது சோதித்து பார்த்தீர்களா? அப்படியென்றால், அந்தப் பக்கத்தை சுட்டவும். இப்போதைக்கு பிரச்சினையை சரியாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. விடையும் தெரியவில்லை--ரவி 14:55, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

உதாரணமாக இங்கு பாவிக்க முயற்சித்தேன் அப்போது 85 நாடுகளுக்கு பிறகு "நாடுகள் மொழிபெயர்ப்பு" என்ற சிவப்பு இணைப்பு தான் வருகிறது. இதற்காக நாடுகள் "மொழிபெயர்ப்பு1" என்ற இன்னொரு வார்புருவை இணைத்து செய்ய முயன்ற போதும் பயணில்லை "நாடுகள் மொழிபெயர்ப்பு1" என்ற சிவப்பு இணைப்பே கிடைத்தது.--டெரன்ஸ் \பேச்சு 15:45, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
இது விந்தையான சிக்கலாக உள்ளது. இது பற்றி மேலும் அறிய முயல்கிறேன். பின்னர் தேவைப்பட்டால் வழு அறிக்கை பதியலாம். -- Sundar \பேச்சு 08:23, 24 ஆகஸ்ட் 2006 (UTC)


எழுத்துரு, கலைச்சொல் உதவி[தொகு]

இன்று (17_09_2006)விக்கிபீடியாவில் இணைந்துள்ளேன்.ஆரம்ப நிலையில் இருப்பதால் ,பல நிலைகளில் தெளிவில்லாமல் இருக்கின்றேன் ,ஆதலால் அனுபவம் வாய்ந்த உங்கள் பலரிடம் இருந்து அதற்க்கான தெளிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  1. நான் operating system (XP) யினை நிறுவியுள்ளேன் அதனால் நான் தமிழ் மொழியினை பார்வையிடுவதிலும், உள்ளேற்றம் செய்வதிலும் பிரச்சனைக்ள் எதுவும் ஏற்படுவதில்லை ஆனால் operating system 98, 2000 நிறுவியுள்ளவர்கள் எதுவும் பிரச்சனை இல்லாமல் தமிழ் மொழியினை பார்வையிடவும், உள்ளேற்றம் செய்யவும் முடியுமா ?
  2. பல ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தைகள் எது என்று தெரியவில்லை (உதாரணம் , operating system ) அதனை எங்கு தேடுவது ?அதே போல் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை அதனை எப்படி தெளிவு படுத்திக் கொள்வது ?(அது ஆங்கிலத்தில் பழக்கப்பட்ட வார்த்தையாக கூட இருக்கலாம் ) - பயனர்:Darwinkumar - 17 செப்டம்பர் 2006.


டார்வின்குமார், windows 98, 2000 ஆகியவற்றில் தமிழ் ஒருங்குறி (unicode) எழுத்துக்களை சரியாகப் பார்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இந்த முகவரிகளில் காணலாம்: எழில்நிலா , தமிழ் விக்கிபீடியா எழுத்துரு உதவிப் பக்கம். இவ்வுதவிக் குறிப்புகள் unicode எழுத்துகளுக்கு மட்டுமே. பிற எழுத்துக்களை பயன்படுத்தும் தளங்களுக்கு அந்தந்த தளங்களில் தரப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளையே நீங்கள் பின்பற்ற வேண்டும்.
பொதுவாக, தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளில் நல்ல தமிழ் பயன்படுத்தப்படுகிறது. இதனால், புதிய சொற்களை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவது உண்மை தான். கடினமான சொற்களுக்கு, கட்டுரைகளின் இறுதியில் அருஞ்சொற்பொருள் பட்டியல் இணைக்கப்படுகிறது. (எடுத்துக்காட்டுக்கு - நகர்பேசி கட்டுரை பாருங்கள்.) விக்கிபீடியா தள இடைமுகத்தில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்களை புரிந்து கொள்ள Wikipedia:கலைச் சொல் கையேடு பாருங்கள். இவற்றில் விடை கிடைக்காவிட்டால், அந்தந்த கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் உங்கள் ஐயத்தை தெரியப்படுத்தினால், பிற பயனர்கள் உதவ முயல்வர். எந்த ஒரு பக்கத்தின் தொடக்கத்திலும் மேலே உரையாடல், தொகு என்பது போன்ற இணைப்புகளை நீங்கள் காணலாம். அவற்றில், "உரையாடல்" இணைப்பை பின்பற்றி அந்த பக்கத்தை தொகுத்து உங்கள் கேள்வியை பதியலாம்--ரவி 09:40, 17 செப்டெம்பர் 2006 (UTC)
Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு --Natkeeran 20:21, 18 செப்டெம்பர் 2006 (UTC)

படிமம் இணைப்பு சம்பந்தமாக ஒரு சந்தேகம்.[தொகு]

ஒரு எழுத்தாளரை பற்றி ஒரு கட்டுரை எழுதி பிறகு அவரது படத்தையும், அவரது புத்தகங்களின் அட்டைப் பட பக்கங்களின் படங்களையும் சேர்க்கலாமா? ஓரு கட்டுரையில் இத்தனைதான் படிமமங்கள் சேர்க்கலாம் என்ற விதி வீக்கிக்கு இருக்கிறதா? அல்லது இதனை கேபி யோ எம்பி என வரையறை உண்டா?--மேமன்கவி 21:07, 4 டிசம்பர் 2006 (UTC)

மேமன்கவி, படங்கள் தாராளமாக சேர்க்கப்படலாம். படிமங்களின் எண்ணிக்கை தொடர்பாக எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை. அளவு வரையறையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் காப்புரிமைபெற்ற, மற்றவர் திறந்த நிலையில் பயன்படுத்த,விநியோகிக்க படத்தின் சொந்தக்காரர்களால் அனுமதிமறுக்கப்பட்ட படங்கள் சேர்க்கப்படுதல் விக்கிபீடியா விதிகளுக்கு முரணானது --மு.மயூரன் 21:54, 4 டிசம்பர் 2006 (UTC)
படிமங்கள் விஷயத்தில், காப்புரிமை அற்ற, திறந்த நிலையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட படிமங்களை மட்டும் விக்கிபீடியாவில் பயன்படுத்துவது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது. தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உங்களுக்கு அறிமுகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று படிமங்களை தரலாம். ஏற்கனவே பிற தளங்களில் படங்கள் வெளியாகி இருந்தால் அத்தள நிர்வாகிகளுக்கு எழுதிக் கேட்டு அனுமதி பெறலாம். இல்லை, குறைந்தபட்சம் அப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலாவது தருவது பிற்காலத்தில், அதற்கான காப்புரிமை விலக்கு பெற வசதியாக இருக்கும். பொதுவான படங்களுக்கு commons.wikimedia.org தளத்திலும், flickr, creative commons போன்ற தளங்களில் காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட படங்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டைப் படங்களை நீங்களே வருடிச் (scan) சேர்க்கலாம் என்று தான் நினைக்கிறேன். இது குறித்து இன்னும் அறிந்து கொண்டு உறுதிப்படுத்துகிறேன். இப்படி நீங்களே வருடிச் சேர்க்கும்போது, அப்படிச் செய்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். இந்தப் படிமப் பதிவேற்றுக் கொள்கை கொஞ்சம் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால், நாம் கட்டற்ற முறையில் கலைக்களஞ்சியத்தை உருவாக்க முனையும்போது அதற்கேற்றவாறு செயல்பட வேண்டி இருக்கிறதல்லவா? மற்றபடி, பொருத்தமான படங்களை எந்த அளவிலும் எத்தனை வேண்டுமானாலும் சேர்க்கலாம். கட்டுப்பாடு இல்லை. நன்றி--Ravidreams 22:56, 4 டிசம்பர் 2006 (UTC)
//தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம்.// ரவி எழுத்தாளர்களது புகைப்படங்கள், இவரே scan செய்யும் நூற்களின் அட்டைப்படங்கள் காப்புரிமை கொண்டனவாக இருக்காது என்றே நம்புகிறேன். மேமன் கவிபயமில்லாமல் அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் வேறு தளங்களில் இருந்து படங்களை எடுக்கும்போது அவதானமாக இருந்தால் போதுமானது. --மு.மயூரன் 03:09, 5 டிசம்பர் 2006 (UTC)

வார்ப்புரு உதவி[தொகு]

Elementbox வார்ப்புருவில் ஓரிடத்தான் (isotope) குறி்ப்புகளைச் சேர்த்தால் தகவல் சட்டத்தின் அகலம் கூடுகின்றது. அதனை யாரேனும் சரி செய்து தர இயலுமா? இப்பொழுது ஓரளவிற்குச் சரியாக இருக்கின்றது ஆனால் இன்னும் 20% அகலம் குறைய வேண்டும். width ஆணைகள் ஏதும் தந்து சரி செய்ய வேண்டுமா?--செல்வா 00:22, 8 மார்ச் 2007 (UTC)

width=100px என்று அகலத்தை வரையறை செய்தால் சரிப்படும் என்று நினைக்கின்றேன். 100 ஆக இருக்க வேண்டியதில்லை, உங்கள் தேவைக்கேற்ப. --Natkeeran 00:29, 8 மார்ச் 2007 (UTC)

புகுபதிகை செய்யிம் பொழுது[தொகு]

புகுபதிகை செய்யும் பொழுது தவறான கடவுச்சொல் கொடுத்தால், மீண்டும் "முயற்சிக்கவும்" என்று இருப்பதை மீண்டும் முயல்க அல்லது முயற்சி செய்யவும் என்று மாற்ற வேண்டும். நிர்வாகிகள் யாரேனும் மாற்றுவீர்களா?--செல்வா 16:24, 5 ஜூன் 2007 (UTC)

மாற்றி விடுகிறேன், செல்வா. இனி, இது போன்ற திருத்தங்களை Wikipedia:மீடியாவிக்கி பக்கப் பிழைகள் என்ற பக்கத்தில் சுட்டிக் காட்டலாம். --ரவி 19:48, 5 ஜூன் 2007 (UTC)

கணிதப்பிரிவுகள் உறவுகள் படம் - ஒத்தாசை உடனே தேவை[தொகு]

நண்பர்களே. நான் கணிதப்பிரிவுகள்-1.png என்ற படத்தைப் பதிவேற்றினேன். அதனுடைய விபரம் இதோ: (பதிவேற்றப் பதிகை (Upload log)); 21:38 . . Profvk (Talk | பங்களிப்புகள்) ("படிமம்:கணிதப்பிரிவுகள்-1.png" பதிவேற்றப்பட்டது.: Trial) (Aug 6, 2007) அது powerpoint இல் செய்யப்பட்டது. அப்படிச்செய்யும்போதே கட்டங்களுக்குள் இருக்கும் தமிழ் வரிகளில் கடைசிப்புள்ளியோ கோடோ கொம்போ தனியாய் தூரத்தில் போய் நிற்கிறது. படத்தைப் பதிவேற்றின பிறகும் அப்படியே இருக்கிறது. நீங்களும் என்னுடைய பதிவேற்றப் படிமத்தில் பார்க்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதினால் எல்லா எழுத்துகளும் சரியாக வருகின்றன. எங்கே தவறு? தவறு powerpoint இலா? அல்லது தமிழ் + powerpoint இலா? இந்த முடிச்சை அவிழ்க்க உதவி தேவை.--Profvk 21:57, 6 ஆகஸ்ட் 2007 (UTC)

தவறு தமிழ் + powerpoint தான் என்று நினைக்கின்றேன். இதற்கு தீர்வு எ-கலப்பை நிறுவி, பின்னர் "Select Input language as Tamil and keyboard layout as UNICODE Tamil.". விபரங்களுக்கு எ-கலப்பை பக்கத்தை பார்க்கவும். --Natkeeran 22:08, 6 ஆகஸ்ட் 2007 (UTC)
நற்கீரன், நன்றி, நன்றி, நன்றி. --Profvk 22:27, 7 ஆகஸ்ட் 2007 (UTC)

சில சொற்சிடுக்குகள்[தொகு]

  • 1. Permutation Group: வரிசைமாற்றுக்குலம்; வரிசைமாற்றக்குலம். எது சரி?
  • 2. Group of nth order: n-ஆவது கிரமமுள்ள குலம்; n-ஆவது கிரமக்குலம். எது சரி?
  • 3. This group has order n: இக்குலம் n கிரமமுள்ளது; இக்குலத்தின் கிரமம் n. இரண்டுமே சரி. ஆனால் எது நிரடலில்லாமல் வழக்கில் வர வாய்ப்புள்ளது?

--Profvk 15:54, 8 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]