காரமடை
காரமடை | |
— நகராட்சி — | |
அமைவிடம்: காரமடை, தமிழ்நாடு
| |
ஆள்கூறு | 11°14′34″N 76°57′31″E / 11.242800°N 76.958700°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | மேட்டுப்பாளையம் |
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | காரமடை |
மக்கள் தொகை • அடர்த்தி |
35,166 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
19.8 சதுர கிலோமீட்டர்கள் (7.6 sq mi) • 388 மீட்டர்கள் (1,273 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/karamadai |
காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில், இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். காரமடை வழியாக கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை செல்கிறது.
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
[தொகு]15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[1][2]
அமைவிடம்
[தொகு]கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள காரமடை நகராட்சியில் பிரசிதிபெற்ற அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் மூன்றாம் நிலை நகராட்சியாகும். கோயம்புத்தூரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேட்டுப்பாளையம் 7 கிமீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]காரமடை நகராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.
நகராட்சியின் அமைப்பு
[தொகு]19.8 சகிமீ பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9792 வீடுகளும், 35166 மக்கள்தொகையும் கொண்டது.[4]வொக்கலிகா கவுடா சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.[5][6][7]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°16′N 76°58′E / 11.27°N 76.97°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கின்றது.
ஆன்மீக இடங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ காரமடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/karamadai/population
- ↑ "Vokkaliga in Karamadai ranganathar samy temple". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ Karamadai Town Panchayat Population Census 2011
- ↑ "Ranganathar Samy Vokkaliga History". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
- ↑ "Maps, Weather, and Airports for Karamadai, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.