இசுமாயில் சப்ரி அமைச்சரவை
இசுமாயில் சப்ரி அமைச்சரவை Ismail Sabri Cabinet 2021–2022 | |
---|---|
22-ஆவது அமைச்சரவை - மலேசியா | |
இசுமாயில் சப்ரி | |
உருவான நாள் | 21 ஆகத்து 2021 |
கலைக்கப்பட்ட நாள் | 24 நவம்பர் 2022 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | இசுமாயில் சப்ரி |
துணை அரசுத் தலைவர் | மூத்த அமைச்சர்கள்: |
நாட்டுத் தலைவர் | சுல்தான் அப்துல்லா |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 32 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் |
உறுப்புமை கட்சி | |
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 115 / 220 |
எதிர் கட்சி |
|
எதிர்க்கட்சித் தலைவர் | அன்வார் இப்ராகிம் |
வரலாறு | |
Legislature term(s) | 14-ஆவது மலேசிய நாடாளுமன்றம் |
Budget(s) | 2022 |
முந்தைய | முகிதீன் அமைச்சரவை |
அடுத்த | அன்வார் இப்ராகிம் அமைச்சரவை |
இசுமாயில் சப்ரி அமைச்சரவை அல்லது மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Ismail Sabri; ஆங்கிலம்: Ismail Sabri Cabinet; சீனம்: 沙比里内阁); என்பது மலேசியப் பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை ஆகும்.[1]
2021 ஆகத்து 21-ஆம் தேதி, மலேசியாவின் 9-ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்ட பின்னர், 2021 ஆகத்து 30-ஆம் தேதி, இந்த 22-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.[2]. இந்த அமைச்சரவை மலேசிய குடும்ப அமைச்சரவை (Malaysian Family Cabinet) என்றும் அழைக்கப்படுகிறது.[3][4]
பொது
[தொகு]இந்த அமைச்சரவையின் நிர்வாகம் 4 முக்கிய அரசியல் கூட்டணிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.
- பாரிசான் (Barisan Nasional) 4 கட்சிகள்.[5]
- பெரிக்காத்தான் (Perikatan Nasional) 5 கட்சிகள்.[6]
- சரவாக் கூட்டணி (Gabungan Parti Sarawak) 4 கட்சிகள்.[7]
- சபா கூட்டணி (Parti Bersatu Sabah)[8].
டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரியின் அமைச்சரவைக்கு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.[9][10]
வரலாறு
[தொகு]மார்ச் 1, 2020-இல், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (Parti Pribumi Bersatu Malaysia) (BERSATU) வெளியேறியது. அதன் பின்னர் மக்கள் நீதிக் கட்சியின் (Parti Keadilan Rakyat) (PKR) துணைத் தலைவர் அஸ்மின் அலியின் (Azmin Ali) தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து வெளியேறினர். இவற்றைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது தன் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார்.
மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) சுல்தான் அப்துல்லா (Abdullah of Pahang), பின்னர் மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள்; மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.
முகிதீன் யாசின் நிர்வாகம்
[தொகு]இறுதியில் எட்டாவது பிரதமராக பெர்சத்துவின் (BERSATU) தலைவரான முகைதின் யாசினை மலேசியாவின் மாமன்னர் நியமித்தார். அதன் பின்னர் முகிதீன் யாசின் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். அதற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம் (Coalition Government of Perikatan Nasional) என்று பெயர் வைக்கப்பட்டது. முகிதீன் யாசின் நாட்டின் எட்டாவது பிரதமரானார்.
தொடர்ந்து 2021 சனவரியில் மலேசியா அவசரகால நிலையை (2021 Malaysian State of Emergency) அறிவித்தது. மலேசியாவில் மோசம் அடைந்து வந்த கோவிட்-19 பெருந்தொற்று (COVID-19 Pandemic in Malaysia), 2021-ஆம் ஆண்டின் மத்தியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை மேலும் சீர்குலைத்தது.[11][12]
பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[13][14]
இசுமாயில் சப்ரி அமைச்சரவை
[தொகு]நான்கு நாட்களுக்குப் பிறகு, 2021 ஆகத்து 20-ஆம் தேதி, தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு எனும் அம்னோவின் (UMNO) துணைத் தலைவர் இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob); மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் பிரதமராக நியமிக்கப்பட்டார். அந்தக் கட்டத்தில் இசுமாயில் சப்ரி யாகோப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இருந்தார்.[15][16]
இசுமாயில் சப்ரியின் அரசாங்கம் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding) கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அப்போதைக்கு ஒரு வலுவான அரசியல் உறுதிபாட்டிற்கான (Political Stability) முயற்சியாகும்.[17]
துணைப் பிரதமர் பதவியில் வெற்றிடம்
[தொகு]2021 ஆகத்து 27-ஆம் தேதி, இசுமாயில் சப்ரி 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் கொண்ட தன் அமைச்சரவையை அறிவித்தார். துணைப் பிரதமர் பதவி காலியாக இருந்தது. மாறாக, அத்தகைய தேவை ஏற்பட்டால், பிரதமர் இசுமாயில் சப்ரி இல்லாத நேரத்தில், மூத்த அமைச்சர்கள் பிரதமருக்காகப் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அமைச்சரவை
[தொகு]பாரிசான் (13) பெரிக்காத்தான் (12) சரவாக் கூட்டணி (4) சபா மக்கள் கூட்டணி (2) பங்சா (1)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "69 Ministers, Deputy Ministers were sworn in at Istana Negara today". Astro Awani. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Fahmy Azril Rosli. "Ismail Sabri sworn in as the 9th Prime Minister". BHarian. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Zaid Mohd Noor. "The 'Malaysian Family' Cabinet list will be announced 1 week after the appointment - PM". Utusan Malaysia. https://www.utusan.com.my/terkini/2021/08/senarai-kabinet-keluarga-malaysia-akan-diumum-minggu-ini.
- ↑ Saiful Haizan Hasam. "Waiting for the Malaysian Family Cabinet". BHarian. பார்க்கப்பட்ட நாள் 27 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "9th PM: BN components congratulate Ismail Sabri". Astro Awani. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Rohaniza Idris. "PN set conditions for Ismail Sabri's support as Prime Minister candidate". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Kow Gah Chie. "GPS 'no problem' Ismail Sabri becomes PM, wants PN's work to remain". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Rafiqah Dahali. "PBS describes Ismail Sabri as the right choice to be PM". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 6 September 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Ismail Sabri Yaakob appointed as prime minister of Malaysia". The Independent (in ஆங்கிலம்). 2021-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ "Ismail Sabri appointed 9th prime minister". Malaysiakini (in ஆங்கிலம்). 2021-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ Anand, Ram (8 July 2021). "Umno withdraws support for Malaysia PM Muhyiddin, calls for his resignation". The Straits Times. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ Yusof, Amir (8 July 2021). "PM Muhyiddin and Cabinet can still exercise executive powers despite UMNO's withdrawal: Attorney-General". CNA. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
- ↑ "Ruling pact scrambles for replacement ahead of Malaysia PM Muhyiddin's resignation". The Straits Times (in ஆங்கிலம்). 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
- ↑ "Malaysia's Prime Minister Muhyiddin and his cabinet resign". 16 August 2021. https://www.abc.net.au/news/2021-08-16/malaysia-s-prime-minister-muhyiddin-cabinet-resign/100381220.
- ↑ "Malaysia's Muhyiddin resigns after troubled 17 months in power". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
- ↑ "Ismail Sabri Yaakob appointed as prime minister of Malaysia". The Independent (in ஆங்கிலம்). 2021-08-20. Archived from the original on 2021-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ "Malaysia's Ismail Sabri Yaakob sworn in as new PM". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ "Noh, Mohamad take oath of office before King". www.thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-11.
- ↑ "Noh and Mohamad sworn in". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
- ↑ HIBRAHIM, MUHAMMAD AMNAN (2022-05-26). "Zuraida letak jawatan menteri kabinet, umum sertai PBM". Sinarharian. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.