ஹட்டா (சட்டமன்றத் தொகுதி)
ஹட்டா (சட்டமன்றத் தொகுதி) (Hatta Assembly constituency, தொகுதி எண்:057) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2] 2008-ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பின்படி இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[3]
ஹட்டா, தமோ மாவட்டத்தில் உள்ள நான்கு (4) சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி ஹட்டா மற்றும் படேரா வட்டங்கள் முழுமையையும், ஹிண்டோரியா நகர் பஞ்சாயத்தையும் மாவட்டத்தின் தாமோ தாலுகாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
ஹட்டா, மேலும் ஏழு விதான் சபைப் பிரிவுகளுடன், தமோ மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. பதாரியா, ஜபேரா மற்றும் தமோ பிரிவுகள் தமோ மாவட்டத்திலும், தியோரி, ரெஹ்லி மற்றும் பண்டா பிரிவுகள் சாகர் மாவட்டத்திலும், மல்ஹாரா சத்தர்பூர் மாவட்டத்திலும் உள்ளன.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]இரட்டை-உறுப்பினர் தொகுதி உறுப்பினர்கள்:
- 1951: கடோரா, இந்திய தேசிய காங்கிரஸ் / பிரேம்சங்கர் லக்ஷ்மிசங்கர் தாகத், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1957: கடோரா, இந்திய தேசிய காங்கிரஸ் / கயா பிரசாத், இந்திய தேசிய காங்கிரஸ்
ஒற்றை-உறுப்பினர் தொகுதி உறுப்பினர்கள்:
- 1962: ஜுகல் கிஷோர் பஜாஜ், சுயேட்சை
- 1967: ஜுகல் கிஷோர் பஜாஜ், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1972: குஞ்பிஹாரிலால் மன்மோகன்லால், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1977: ராமகிருஷ்ண குஸ்மாரியா, ஜனதா கட்சி
- 1980: சினேகசலீல ஹசாரி, இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
- 1985: ராமகிருஷ்ணா குஸ்மாரியா, பாரதிய ஜனதா கட்சி
- 1990: ராமகிருஷ்ண குஸ்மாரியா, பாரதிய ஜனதா கட்சி]
- 1993: விஜய் சிங், பாரதிய ஜனதா கட்சி
- 1998: ராஜா படேரியா, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2003: கங்காராம் படேல், பாரதிய ஜனதா கட்சி
- 2008: உமாதேவி லால்சிங் கதீக், பாரதிய ஜனதா கட்சி
- 2013: உமாதேவி லால்சிங் கதீக், பாரதிய ஜனதா கட்சி[4]
- 2018: புருஷோத்தம் தந்துவோ ஹட்டா, பாரதிய ஜனதா கட்சி[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.mp.gov.in/en/mla
- ↑ "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
- ↑ http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
- ↑ http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html