அட்டேர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அட்டேர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: अटेर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:009) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2013 ஆம் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யதேவ் கட்டாரி வெற்றி பெற்றார். மத்தியபிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்யதேவ் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.[4] எனவே காலியாக இருந்த அட்டேர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு சத்யதேவ் கட்டாரியின் மகன் ஹேமந்த் கட்டாரி [5] இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய உறுப்பினராக இருக்கிறார்.[6] [7]

மேற்கோள்கள்[தொகு]