உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குக் கருணைக்கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைகளில் ஊசி போடுவதற்காக உரோமங்கள் நீக்கப்பட்ட நிலையில் இறக்கவிருக்கும் பூனை

விலங்குக் கருணைக்கொலை (euthanasia; கிரேக்க மொழி: εὐθανασία; "நல்ல மரணம்") என்பது ஒரு விலங்கினை அது படும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கில் கொல்லுதல் அல்லது சாகவிடுதல் ஆகும். குணப்படுத்த முடியாத (அல்லது வலி நிறைந்த) நோய் உள்ளிட்ட நிலைமைகள்,[1] ஒரு விலங்கினைக் காக்கத் தேவைப்படும் உணவு மற்றும் நிதி ஆதாரங்களின் பற்றாக்குறை, அறிவியல் ஆய்வக சோதனை நடைமுறைகள் உள்ளிட்டவை கருணைக்கொலைக்கான காரணங்களாகச் சுட்டப்படுகின்றன. கருணைக்கொலை முறைகள் குறைந்தபட்ச அளவில் மட்டுமே வலி அல்லது துயரத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. நோக்க அடிப்படையில் கருணைக்கொலை என்பது விலங்கு வதை, உயிர்க்கொல்லி முறைகள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டிருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் நடைமுறை அளவில் இவையாவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று விவாதிக்கப்படுகிறது.

குதிரைகளைக் கருணைக்கொலை செய்யும் "தி கிரீனர் கில்லர்" என்ற துப்பாக்கிக்கான 1912-ம் ஆண்டைய விளம்பரம்
சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளைச் செயலிழக்கச் செய்யும் குண்டுத் துப்பாக்கி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. 2000 Report of the AVMA Panel on Euthanasia

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Animal euthanasia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குக்_கருணைக்கொலை&oldid=4374018" இலிருந்து மீள்விக்கப்பட்டது