மெலனி ஜாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெலனி ஜாய்
Melanie TEDX.jpg
மெலனி ஜாய்
பிறப்பு2 செப்டம்பர் 1966 (1966-09-02) (அகவை 53)
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம் (M.Ed.)
சேய்புரூக் பல்கலைக்கழகம் (Ph.D.)
பணிசமூக உளவியலாளர், அறிவியல் புணைக்கதை எழுத்தாளர், பியாண்ட் கார்னிசம் என்ற அமைப்பின் தலைவர்.
வலைத்தளம்
carnism.org

மெலனி ஜாய் (Melanie Joy, பிறப்பு 2 செப்டம்பர் 1966) ஒரு அமெரிக்க சமூக உளவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் 2010 ஆம் ஆண்டில் கார்னிச விழிப்புணர்வு மற்றும் செயலமைப்பு (CAAN) என்றழைக்கப்பட்ட ‘’பியாண்ட் கார்னிசம்’’ என்ற ஒரு இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பை நிறுவியவர் ஆவார்.[2][3] இவர் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம் பாஸ்டன் முன்னாள் பேராசிரியராகவும் இருந்தார்.[4] விலங்குகளுக்கான துயர் நடவடிக்கை, நாம் ஏன் நாய்களை விரும்புகிறோம், பன்றியை உண், பசுவை அணிந்துகொள், நம்பிக்கைக்கு அப்பால் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.[4]

மெலனி ஜாய், கல்வியியலுக்கான ஹார்வர்ட் பட்டயக் கல்லூரியில் தனது முதுகலைக் கல்வியியல் பட்டம் பெற்றார். சேபுரூக் பட்டயக் கல்லூரியில் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது 23 ஆம் வயதில் ஹார்வார்ட் கல்லூரியின் மாணவியாக இருந்த போது கெட்டுப்போன பன்றிக்கறியால் செய்த ஹம்பர்க்கர் என்ற உணவினைச் சாப்பிட்டதனால் உணவு மூலம் பரவும் ஒருவித நோயினால் பபாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அது அவரை தாவர உணவு உண்பவராக மாற வழிவகுத்தது.[5][6] இந்திய அமைச்சர் மானேகா காந்தி அவர்களால் வழங்கப்பட்ட ஒரு உரையில், ஜாய் அறநெறியற்ற முறையில் விலங்குகளை நடத்தியதை மாற்றி தனது உணவு முறையையும் மாற்றியதைக் குறிப்பிடுகிறார்.

அந்த அனுபவம் என்னை இறைச்சி உண்பதை நிறுத்த உறுதிகொள்ள அதிகமாக வழிவகுத்தது. மேலும் விலங்குகள் வளர்ப்பு குறித்த, என்னைச் சுற்றியிருந்த, ஆனால் நான் விரும்பாத தகவல்கள் அதிகப்படியாகத் தெரிந்துகொள்ள உதவியது. என் வாழ்வின் தற்போதைய நிலைமையை பராமரிப்பதில் நான் இன்னும் முதலீடு செய்திருக்கிறேன்.இறைச்சி, முட்டை மற்றும் பால் உற்பத்தி பற்றிய உண்மைகளை நான் கற்றுக்கொண்டபோது, நான் பெருத்த ஏமாற்றமடைந்தேன். [...] மேலும் நடுக்கடலில் காணாமல் போன படகு சுக்கானையும் இழந்ததைப் போல குழப்பமும் விரக்தியும் அடைந்தேன். எதுவுமே மாறவில்லை ஆனால் எல்லாம் மாறுபாடாக இருந்தது.[6]

அதன்பின், ஜாய் நனி சைவத்திற்கானவராய்த் தன்னைப் படிப்படியாக மாற்றிக்கொண்டார்.[1]

ஒரு 2013 நேர்காணலில், தொடக்கத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வில் வன்முறை மற்றும் பாகுபாடு குறித்த சமூக உளவியலில் கவனம் செலுத்தினார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் பின்னர் இறைச்சி உண்னும் உளவியல் பற்றிய ஆய்வில் கவனம் மாற்றப்பட்டது. இந்த ஆய்வுக்கான நேர்காணல் நிகழ்வுகளில் ஆய்வுக்குட்படுத்தப் பட்டவர்களின் முரண்பாடான, மற்றும் ஒவ்வாத சிந்தனையின் ஒரு வடிவத்தை அறிந்துகொள்கிறார். இந்த ஆய்வினால் பெற்ற அனுபவங்கள் அவர் இறைச்சியைப் பற்றிய ஒரு கோட்பாட்டினைப் பெற வழிவகுத்தது. இந்த சிந்தனைகள் அவரது பிற்காலப் பணிகளுக்கு அடிப்படையாக அமைந்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Guerrero, T. (12 December 2013). "Por qué queremos a los perros pero nos comemos a los cerdos". El Mundo. பார்த்த நாள் 8 July 2015.
  2. Langley, L. (29 November 2010). "Why Are We Against Wearing Fur, But OK with Eating Meat?". AlterNet. பார்த்த நாள் 8 July 2015.
  3. "Dr. Melanie Joy". Carnism Awareness & Action Network. பார்த்த நாள் 8 July 2015.
  4. 4.0 4.1 "Melanie Joy Ph.D.". Psychology Today. பார்த்த நாள் 8 July 2015.
  5. Brumm, F. (24 August 2013). "Sozialpsychologin Melanie Joy: Warum essen Menschen Fleisch". Spiegel Online. பார்த்த நாள் 8 July 2015.
  6. 6.0 6.1 Gandhi, M. (5 July 2015). "From cuisine to corpses to 'carnism'". AsiaOne. பார்த்த நாள் 8 July 2015.
  7. Hoffmann, S. (4 June 2013). "Interview w. Melanie Joy about Carnism". Oh, Sophia. மூல முகவரியிலிருந்து 9 July 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலனி_ஜாய்&oldid=2734755" இருந்து மீள்விக்கப்பட்டது